FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

தயமம் செய்வதன் முழு விபரம் - பாடம் - 27

Share:

 


தயமம் செய்வதன் முழு விபரம்

 ۝இஸ்லாம் மார்க்கம் மிக இலேசான மார்க்கம் என்பதற்கு இந்த தயமத்துடைய பாடம் ஒரு சாட்சியாகும் அதாவது தொழுகை சிகத்தாகுவதற்கும் தவாஃப் சிகத்தாகுவதற்கும் குர்ஆனை தொடுவதற்கும் சுமப்பதற்கும் வுளூ செய்வது கட்டாயமானது வுழூ என்பது  நீரை கொண்டு மட்டும்தான் நிறைவேறும் அவ்வாறு நீரை பெற்றுக்கொள்ள அல்லது நீரை பாவிக்க முடியாத ஒரு சூழல் வரும் பொழுது இஸ்லாம் சுத்தமான  புழுதி உள்ள மண்ணை கொண்டு தயமம் செய்து  மேல் கூறப்பட்ட கடமைகளை செய்வதற்கு அனுமதித்துள்ளது.

மார்க்கத்தில் தயம்மும் செய்வதற்கான ஆதாரங்கள்

👉 திருக்குர்ஆன்

💬 நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டிருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். மாயிதா - 06

👉அல் ஹதீஸ்

💬 பூமி முழுவதும் எங்களுக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது மேலும் நீரை நாங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால் அதனுடைய மணலை சுத்தமாகக்கூடியதாக ஆக்கப்பட்டுள்ளது.
 நூல் - முஸ்லிம் - 522

தயமம் செய்வதற்கு அநுமதிக்கப்பட்ட  காரணங்கள்

👉 எப்பொழுதெல்லாம் எங்களுக்கு தயமம் செய்ய மார்க்கம் அனுமதித்துள்ளது.

👉தயமம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நான்கு சந்தர்ப்பங்கள் உள்ளது.

01 - । - தண்ணீர் இல்லாமை.

👉 உதாரணமாக :- ஒருவர் பிரயாணத்தில் இருக்கும் போது எந்த விதமான தண்ணீரும் அவருக்கு பக்கத்தில் இல்லாமல் இருத்தல்

          ॥ - இருக்கும் நீரை பாவிக்க முடியாமல் இருத்தல்.

👉 உதாரணமாக :- தன்னிடம் நீர் இருக்கிறது ஆனால் அது குடிப்பதற்கு மட்டும் போதுமான அளவு குறைவான நீராக இருந்தால் அது நீர் இல்லை என்ற சட்டத்துக்குள்ளால் வரும் எனவே அவருக்கு அந்த சந்தர்ப்பத்தில் தயமம் செய்வதற்கு அனுமதி உண்டு.

02 - நீர் அவரை விட்டும் தூரமாக இருத்தல்.

👉 உதாரணமாக :-  ஒருவர் இருக்கும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்தர கிலோமீட்டர் தூரத்தில் தண்ணீர் இருக்கிறது என்றால் அந்த இடத்திற்கு போவதற்கு இவருக்கு மிகவும் கஷ்டமான ஒரு  நிலைமை இருக்குமாக இருந்தால் அவருக்கு தயமம் செய்து தொழுவதற்கு அனுமதி உண்டு.

03- நீரை பாவிப்பது தங்கடமாக இருத்தல்.

👉 ஒன்று நீர் சமீபத்தில் இருக்கிறது ஆனால் அதற்கு அருகாமையில் பயப்படக்கூடிய ஒரு எதிரி இருக்கிறார் எனவே அந்த எதிரியினால் ஏதாவது தங்களிடம் நிகழ்ந்து விடும் என்று பயந்தால் தயமம் செய்வதற்கு அனுமதி உண்டு.

👉 அல்லது நீரை பாவிப்பதனால் ஏதாவது நோய்கள் ஏற்பட்டு விடும் அல்லது இருக்க கூடிய நோய் அதிகமாகிவிடும் அல்லது அந்த நோய் குணமாகுவதற்கு இன்னும் தாமதமாகும் என்ற நிலைமை இருந்தால் தண்ணீரை பாவிக்காமல் அவருக்கு தயமம் செய்து கொள்ள முடியும்.

👉 குறிப்பு காயங்களுக்கு பெண்டேஜ் கட்டு போட்டு அதற்காக வேண்டி தயமம் செய்தால்  அதனுடைய முழு சட்டங்களையும் இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். click here

04 - கடுமையான குளிர்.

👉 குளிர்ந்த நீரைப் பாவிப்பதால் ஏதேனும் ஆபத்து வந்துவிடும் என்று பயம் ஏற்படக்கூடிய அளவுக்கு மிகக்  கடுமையான குளிர் இருந்தால் அந்த நேரத்தில் நீரை சூடாக்குவதற்கு எந்த விதமான வலியும் இல்லாத போது தயமம் செய்ய அனுமதி உண்டு.

💬 அம்ரு இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பு கடமையான நிலைமையில் கடும்  குளிரை பயந்ததற்காக வேண்டி தயமம் செய்தார்கள் அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கீகரித்தார்கள்.
 நூல்-  அபூதாவூத், மற்றும் ஹாக்கி.

குறிப்பு - ஆனால் இந்த நிலைமையில் ஒருவர் தயமம் செய்து தொழுதால் எப்பொழுது அவருக்கு நீரை பாவிக்க முடியுமோ அந்த நேரத்தில் தயமத்தோடு தொழுத தொழுகைகளை கலா செய்வது கட்டாயமாகும்.


தயமம் செய்வதற்கான நிபந்தனைகள்

01 - நேரம் நுழைந்திருத்தல்.

👉ஒருவர் தயமம் செய்வதாக இருந்தால் ஒவ்வொரு பர்ழுக்கும் தயமம் செய்யும் போதும் அந்த நேரம் நுழைந்ததற்கு பின்னால்  தயமம் செய்து அவர் அந்த பர்ழை நிறைவேற்ற வேண்டும் மாறாக நேரம் நுழைவதற்கு முன்னால் செய்த தயமத்தை கொண்டு ஒரு பர்ழை நிறைவேற்ற முடியாது.

02 - நேரம் நுழைந்ததற்கு பின்னால் நீரை தேடுதல்.

👉 ஒருவர் நீர் இல்லாத காரணத்தினால் தயமம் செய்ய போகிறார் என்றிருந்தால் தொழுகையின் நேரம் நுழைந்ததற்கு பின்னால் மீண்டும் ஒரு முறை நீரை தேடிப் பார்க்க வேண்டும் அவ்வாறு தேடியும் கிடைக்கவில்லை என்றால் அவர் தா தயமம் செய்து கொள்ளலாம்.

03 - புழுதியுள்ள சுத்தமான மண் இருத்தல்.

👉 தயமம் செய்வதற்கு சுத்தமான மண் இருக்க வேண்டும் அது புழுதி உடைய மண்ணாக இருக்க வேண்டும், மா  போன்றவைகள் கலக்கப்படாத தூய்மையானதாக  இருக்க வேண்டும்.

04 - நஜீஸ்கள் நீக்கப்பட வேண்டும்.

👉 உடம்பில் ஏதாவது நஜீஸ்கள் இருந்தால் அதனை முதலாவதாக முழுமையாக நீக்கியதற்கு பின்னால் தயமம் செய்ய வேண்டும்.

05 - கிபுலாவை முன்னோக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

06 - நீரை பாவிக்க முடியாமல் இருத்தல்.

 தயமத்தின்  அர்கான்கள்

01 - நிய்யத்து வைத்தல்

👉 ஏனைய அமல்களுக்கு நிய்யத் வைப்பது கட்டாயம் என்பது போலவே தயமம் செய்வதற்கும் உள்ளத்தால் நிய்யத் வைப்பது கட்டாயம் வாயினால் மொழிவது சுன்னத்தாக இருக்கிறது.

நிய்யத்து வைக்கும் முறை

01 - தொழுகையை ஆகுமாக்க தேடுகிறேன்.
02 -  தொழுகையுடைய பர்லை ஆகும் ஆக்க தேடுகிறேன்.
03 - தொழுகையுடைய சுன்னத்தை ஆகுமாக்க தேடுகிறேன்.

👉 ஒருவர் தொழுகையுடைய பர்லை ஆகுமாக்க தேடுகிறேன் என்று நிய்யத்து வைத்து தயமம் செய்தால அந்த தயமத்தை கொண்டு சுன்னத்தான தொழுகைகளையும் தொழ முடியும் அதை கொண்டு  குர்ஆனை தொடுவதற்கும் குர்ஆனை சுமப்பதற்கும் அவருக்கு முடியும்.

02 -  மண்ணில் கையைத் தட்டி எடுப்பதன் மூலம் முகத்தை மஸ்ஹு செய்ய வேண்டும்.

 03 - இரண்டு கைகளுடைய முழங்கை வரைக்கும் இரண்டாவது முறை மண்ணில் கையைத் தட்டி எடுப்பதன் மூலம் மஸ்ஹு செய்ய வேண்டும்.

👉 அதாவது முதலாவது மண்ணிலே இரண்டு கையையும் தட்ட வேண்டும் அந்த இரண்டு கையை கொண்டும் முகத்தை தடாவ வேண்டும் பின்பு இரண்டாவது முறை இரண்டு கையையும் மண்ணிலே தட்டி  வலது கையை முழங்கை வரைக்கும் மஸ்ஹு செய்ய வேண்டும்  பின்பு இடது கையை மஸ்ஹு செய்ய வேண்டும்.

💬 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது தயம்மம் என்பது இரண்டு அடிகளாகும் ஒரு தட்டு முகத்துக்கும் இன்னொரு தட்டு இரண்டு கைகளுக்கும்.
 நூல் - தாரகுத்தினி 1/2056

👉 கையை மஸ்ஹு செய்யும்போது கையில் மோதிரங்கள் ஏதேனும் இருந்தால் அவைகளை அகற்றுவதும் கட்டாயமாகும்.

04 - சொல்லப்பட்ட முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக செய்ய வேண்டும்.

தயமத்தின் சுன்னத்துகள்

01 - ஆரம்பத்தில் பிஸ்மில் கூறுதல்.

02 - மண்ணில் கையை தட்டும் போது விரல்களை பிரித்து வைத்தல்.

03 - முகத்தை மஸ்ஹு செய்யும்போது முகத்தின் மேல் பகுதியில் இருந்து ஆரம்பித்தது.

04 - கையை மஸ்ஹு செய்யும் போது இடது கையை காண வலது கையை முற்படுத்துதல்.

05 - இரண்டு கையையும் வெளியில் தட்டுதல்.

👉 கையில் பட்டிருக்கக் கூடிய  மண்ணை இலேஸி ஆக்குவதற்காக வேண்டி மஸ்ஹு செய்வதற்கு முன்னால் இரண்டு கைகளையும் ஓரமாக எடுத்து புரங்கை இரண்டையும் ஒன்றோடு ஒன்று தட்டுதல்.

06 - தொடராக நியமமாக செய்து இடையிடையே நிறுத்தி  செய்யாமல் ஒன்றன் பின் ஒன்றாக நேமமாக செய்தது.

07 - தயமம் செய்து முடிந்ததன் பின் வுளூ உடைய துவாவை ஓதிக் கொள்ளுதல்.



தயமத்தை முறிக்கும் காரியங்கள்

01 - வுழூவை முறிக்கக் கூடிய அனைத்து காரியங்களும் தயமத்தையும் முறிக்கம்.

👉  வுழூவை முறிக்கும் காரியங்களை பின்வரும் லிங்கை கிளிக் செய்து பார்கவும்.clik hera

02 -  நீர் இல்லாததற்கு தயமம் செய்திருந்தால் நீர் கிடைப்பதோடு தயமம் முடிந்து விடும்.

03 - நீரை பாவிப்பதற்கு முடியாத நிலையில் தயமம் செய்திருந்தால் நீரை பாவிப்பதற்கு முடியுமான பொழுது தயமம் முடிந்து விடும்.

04 - இஸ்லாத்தை விட்டு மதம் மாறுதல்.



  Writer -  Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky


கருத்துகள் இல்லை