FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

குளிப்பு கடமையானவர் செய்யக்கூடாதவைகள் - பாடம் -20

Share:

குளிப்பு கடமையானவர் செய்யக்கூடாதவைகள்

01- தொழுகை

👉குளிப்பு கடமையாக இருக்கக்கூடிய ஒருவர் ஃபர்லான அல்லது சுன்னத்தான எந்த விதமான தொழுகைகளும் அவருக்கு தொழ முடியாது கட்டாயம் அவர் குளித்து சுத்தமானதற்கு பின்னால்தான் அவருக்கு தொழுவதற்கு அனுமதி உண்டு அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

💬 நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி 'தயம்மும்' செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
- (திருக்குர்ஆன் 4:43)

👉மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய ஒரு ஹதீஸிலே வந்திருப்பதாவது...

 💬 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை நான் கேட்டேன் சுத்தம் இல்லாமல் தொழுகை ஒப்புக்கொள்ளப்படமாட்டாது            நூல் - முஸ்லிம் - 224

02 - பள்ளியில் தறிபடுதல் பள்ளியில் உட்காருதல்.

👉 ஒரு குளிப்பு கடமையான ஒருவர் பள்ளியிலே தங்கி இருப்பது ஹராமாக்கப்பட்டுள்ளது பள்ளியிலே கடந்து செல்வது நடந்து செல்லுவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது ஆனால் ஒரு இடத்திலே இருப்பது தங்குவது படுத்துக் கொள்ளுவது போன்றவைகள் ஹராமாக்கப்பட்டுள்ளது.

💬 மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கும் குளிப்பு கடமையானவருக்கும் நான் பள்ளியை ஹலால் ஆக்க மாட்டேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்        நூல்  -  அபூதாவுத்

03 - கஃபத்துல்லாவை தவாப் செய்தல்.

👉குளிப்பு கடமையான நிலையில் கஃபத்துல்லாவை தவாப் செய்வதோ அது சுன்னத்தான தவாப்பாக இருந்தாலும் பர்லான  தவாபாக இருந்தாலும்  குளிப்பு கடமையான நிலைமையில் அதனை தவாஃப் செய்வது ஹராமாகும்.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது பைத்துல்லாவை கஃபத்துல்லாவை தவாஃப் செய்வது தொழுகையைப் போன்றது என்றாலும் இதிலே உங்களுக்கு கதைப்பதை அல்லாஹுத்தஆலா ஹலாலாக்கியிருக்கிறான் எனவே கதைக்கக் கூடியவர் நலவைத் தவிர வேரெதையும் கதைக்க வேண்டாம்.   நூல் - ஹாக்கிம் 1/ 459

👉 எனவே ஒருவர் ஹஜ்ஜுடைய நேரத்தில் அல்லது உம்ராவுடைய நேரத்திலோ  குளிப்பு கடமையான நிலைமையில் அவருக்கு தவாப் செய்ய முடியாது காரணம் தவாஃப் என்பது தொழுகையைப் போன்றது தொழுகையில் எவ்வாறு சுத்தமாக இருப்பது கட்டாயமோ? அதுபோல தவாப் செய்யும் போதும் இருக்க வேண்டும் என்றாலும் தொழுகையில் கதைப்பதற்கு அனுமதி இல்லை தவாப் செய்யும் போது கதைப்பதற்கு அனுமதி உண்டு. நலவை மட்டும் தேவையான விஷயத்தை மட்டும் கதைப்பதற்கு அனுமதி உண்டு.

04 - குர்ஆன் ஓதுதல்.

 👉 குளிப்பு கடமையான ஒருவர் குர்ஆன் ஓதுவது ஹராமாகும்,
ஆனால் குர்ஆனில் வரக்கூடிய துவாக்களை குர்ஆனுடைய எண்ணம் இல்லாமல் ஓதுவதற்கு அனுமதி உண்டு மேலும் தஸ்பீஹ்கள் திக்ருகள் ஏனைய துவாக்கள் இவைகளை ஓதுவதற்கு அனுமதி உண்டு.

💬 மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணும் குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் இருந்தும் எந்த ஒன்றையும் ஓத வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.        நூல் - திருமிதி - 131

👉 மேலும்  குளிப்பு கடமையான ஒருவருக்கு குர்ஆனை உள்ளத்திலே நினைப்பதற்கு அனுமதி உண்டு வாயினால் ஓதாமல்  குர்ஆனை உள்ளத்திலே நினைப்பதற்கும் குர்ஆனை பார்ப்பதற்கும் திக்ருடைய எண்ணத்தில் குரானில் வரக்கூடிய துஆக்களை ஓதுவதற்கும் அனுமதி உண்டு.

05 - குர்ஆனை தொடுதல் சுமத்தல்.

 👉 அதனுடைய ஒரு தாளையாவது தொடுவது அதனுடைய அட்டையை தொடுவது அதனை ஒரு பையில் போட்டு அல்லது பெட்டியில் போட்டு சுமப்பது இது அத்தனையும் ஹராமாகும்.

💬 சுத்தமானவர்களை தவிர அதனை -குர்ஆனை- தொட மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.    சூரத்துல் - வாக்கியா - 79 

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறுகிறார்கள் சுத்தமானவரை தவிர குர்ஆனை தொட மாட்டார்.  நூல் - தாரகுத்தினி

குறிப்பு - 👉  பொருட்கள் நிறைந்த ஒரு பையில்  சாமான்களோடு சேர்த்து குர்ஆனை சுமப்பதற்கு அனுமதி உண்டு குர்ஆனை சுமப்பதாக எண்ணம் இல்லாமல் அந்த பொதியில் இருக்கக்கூடிய பொருட்களை சுமப்பதாக எண்ணத்தோடு அவருக்கு கொண்டு செல்லலாம்.

கருத்துகள் இல்லை