FAIROOZ MAKKI FM
எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)
இதன் சட்டம் இது தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்
👉 இது பொதுவான நீராகும் அதாவது மழை நீர்,கினற்று நீர்,ஆற்று நீர் மேலும் கடல் நீர் போன்றவையாகும் இந்த நீர் வேற எந்த விதமான மாற்றமும் அடையாமல் இருந்தால் அந்நீரைக் கொண்டு நஜீஸ்களை சுத்தமாக்கலாம் வுழூ செய்ய முடியும் கடமையான குளிப்பை குளிக்க முடியும் இப்படி தேவையான எல்லாவிதமான சுத்தங்களையும் இந்த நீரைக் கொண்டு சுத்தமாக்கலாம்
👉 மேலும் இவ்வாறான நீர் அது தேங்கி இருக்கும் இடத்தில் நீண்ட காலம் தேங்கியிருப்பதனால் நீரில் ஏதேனும் மாற்றங்கள் வந்தால் அது அசுத்தமாக மாட்டாது அதேபோல் அந்த நீர் தேங்கியிருக்கும் பூமியுடைய மண்ணின் அல்லது ஷேத்தின் காரணமாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலோ அல்லது நீரிலே வளரக்கூடிய பாசி போன்றது அதன் காரணமாக அந்த நீர் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் இவ்வாறான நிலைமையில் அந்த நீர் அசுத்தமாக மாட்டாது.
👉 குறிப்பு
💨மேலும் இவ்வாறான நீர் எப்போது நதிஸ் ஆகும் பாவிக்க முடியாத நிலைமைக்கு மாறும் என்பது பற்றி இருதியில் நான் தெளிவுபடுத்துகிறேன்.
👉 இந்த நீர் சுத்தமானது என்பதற்கான ஆதாரம்
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் பள்ளியில் கூடியிருக்கும் நேரத்தில் ஒரு நாட்டுப்புற அரபி ஒருவர் வந்து பள்ளி வாயலின் சுவற்றில் சிறுநீர் கழித்து விட்டார் உடனே சஹாபாக்கள் அவனை தடுக்க முனைந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நண்பர்களை தடுத்து நிப்பாட்டி விட்டு அவர் முழுமையாக சிறுநீர் கழித்து முடிந்து சென்ற பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை கொண்டு வரும்படி கட்டளையிட்டார்கள் பின்பு அந்த சுத்தமான நீரை சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றி சுத்தம் செய்யும்படி ஏவினார்கள்.
👉 எனவே நீரை ஊற்றுவதன் மூலம் அந்த அசுத்தமாக்கப்பட்ட இடம் சுத்தமாக்கப்பட்டது.
இதனுடைய சட்டம் இந்த நீர் சுத்தமானது ஆனால் பிறரை சுத்தம் செய்ய மாட்டாது
👉 இந்த நீர் இரண்டு வகையாக பிரிகிறது
👉முதலாவது நீர் குறைவாக இருக்கக்கூடிய ஃபர்ளான ஒரு சுத்தத்தை சுத்தமாக்குவதற்கு பாவிக்கப்பட்ட தண்ணீர் இப்படி பாவிக்கப்பட்ட இந்த நீரினால் பிற சுத்தங்களை செய்ய முடியாது.
👉 வுழூ செய்வதற்கோ குளிப்பதற்கோ முடியாது இதற்கு ஆதாரமாக பார்க்கும்போது ஒரு ஹதீஸ் சுட்டிக்காட்டப்படுகிறது அதாவது .
👉புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் ஜாபீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்படுவது ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் நான் நோயுற்று இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நோய் விசாரிக்க வந்திருந்தார்கள் அப்போது நபி அவர்கள் வுழூ செய்து விட்டு அந்த விழூ செய்து எஞ்சிய நீரை என் மீது ஊற்றினார்கள்.
👉அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் மீது பட்ட நீர் அதின் பரக்கத்தினால் அந்த சஹாபிக்கு நோய் குணமாகுவதற்காக வேண்டி அவ்வாறு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள்.
👉இந்த ஹதீஸிலிருந்து எடுக்கப்படும் சட்டம் என்னவெனில்.
👉ஒரு ஃபர்லான சுத்தத்தை செய்வதின் ஊடாக பாவிக்கப்பட்ட அந்த நீர் அது தான் சுத்தமானது அதனாலதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது ஊற்றினார்கள் ஒருவேளை பாவிக்கப்பட்ட அந்த நீர் அசுத்தமாக இருந்திருப்பது அவர் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊற்றி இருக்க மாட்டார்கள்.
👉இரண்டாவது நீர் என்னவெனில் பொதுவாக இருக்கக்கூடிய நீரில் ஏதாவது ஒரு சுத்தமான பொருள் கலக்கப்பட்டால் அந்த நீரும் தான் சுத்தம் பிறரை அதைக் கொண்டு சுத்தம் செய்ய முடியாது
👉 உதாரணமாக தேதண்ணி, சர்வந்து, பன்னீர் கலக்கப்பட்ட நீர் இப்படியாக ஒரு சுத்தமான பொருளை கலக்கப்பட்ட அந்த நீருக்கு பிறரை சுத்தமாக்கக் கூடிய குணம் கிடையாது அது சுத்தம் அதை எதற்காக வேண்டி என்ன நிலைமையில் இருக்கிறதோ அந்த நிலைமையில் அதனை பாவிக்க முடியும் ஆனால் அதைக் கொண்டு வுழூச் செய்யவோ அல்லது பர்ளான குளிப்பை குளிப்பதற்கோ முடியாது.
03) மாவுன் நஜீஸ் 💧அசுத்தமான நீர்💧
நஜீஸாகப்பட்ட நீர் இரண்டு வகைப்படும்
👉முதலாவது குல்லத்தைனை காண குறைவாக இருக்கக்கூடிய நீர்
👉இந்த நீரில் ஏதாவது நஜீஸான பொருள்கள் விழுந்தால் அந்த நீரின் எந்தவிதமான மாற்றமும் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை குறிப்பிட்ட நஜீஸ் விழுவதன் மூலமாகவே அந்த நீர் அசுத்தமாகிவிடுகிறது.
எனவே இப்படி அசுத்தமான நீரை கொண்டு சுத்தம் எதுவும் செய்ய முடியாது.
👉இரண்டாவது நீர் குல்லத்தைனை காண அதிகமாக இருக்கக்கூடிய பொதுவான நீரில் ஏதாவது ஒரு நஜீஸ் விழுந்தால் அப்படி விழுவதின் மூலமாக மட்டும் அந்த தண்ணீர் நஜீஸாக மாட்டாது மாறாக அந்த விழுந்த நஜீசின் காரணமாக தண்ணீரில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதாவது நீர் உடைய வாசமோ அல்லது அதனுடைய சுவையோ அல்லது அதனுடைய நிறமோ மாறி இருந்தால் அந்த நீர் நஜிசாக்கப்பட்ட நீராக மாறுகிறது எனவே இப்படியான நஜீசாக்கப்பட்ட நீரை சுத்தங்கள் செய்வதற்கு பாவிக்க முடியாது.
குல்லத்தைனின் அளவு
பஃதாத் கணக்குப்படி 500 ராத்தல் கணம் இருக்க வேண்டும் அதை எமது நாட்டு கிலோகிராமில் பார்த்தால் 192.857KG கிலோ கிராம் கணம் உள்ள தண்ணீராக இருக்கணும் இதை இன்னும் இலகுவாக பார்ப்பதாக இருந்தால் ஒரு நடுத்தரமான ஒருவருடைய கையின் மூலமாக அளக்க முடியும்
அதாவது ஒருவருடைய கையினால் 1 1/4 முழம் எப்படி அழக்க வேண்டும் என்றால் ஒரு பெட்டி வடிவ ஒரு பாத்திரமாக இருந்தால் அதில் ஒன்னேகால் முழம் அகலத்தாலும் ஒன்னேகால் முழம் நீட்டத்தாலும் ஒன்னேகால் முழம் ஆளத்தாலும் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை