FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

தொழுகையின் ஷர்துக்கள்-பாடம் - 31

Share:


தொழுகையின் ஷர்துக்கள்

💙 தொழுகைக்கு முன்னால் கவனிக்கப்பட வேண்டிய  நிபந்தனைகள் 4

01 - சுத்தமாக இருத்தல்.

02 - நேரம் நுழைந்து இருப்பதை அறிந்திருத்தல்.

03 - அவ்ரத்தை மறைத்தல்.

04 - கிப்லாவை முன்னோக்குதல்.

💗 இந்த ஒவ்வொரு நிபந்தனைகளையும் விரிவாக பார்ப்போம்

01 - சுத்தமாக இருத்தல்.

01 - தொடக்குகளை விட்டும் உடல் சுத்தமாக இருத்தல்.

👉 தொடக்குகள் எனும் பொழுது சிறு தொடக்கு மற்றும் பெருந்தொடக்கு இவைகளை விட்டும் சுத்தமாக இருத்தல், உதாரணமாக வுழூ முரிந்தால் வுழூ செய்து கொள்ளுதல் குளிப்பு கடமையானால் குளித்துக் கொள்ளுதல், அவ்வாறு வுழூ செய்வதற்கோ குளிப்பதற்கு தண்ணீர் இல்லாவிட்டால் தயமம் செய்தல், இவ்வாறு ஏதோ ஒரு முறையில்  சுத்தமாகுதல். 

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்   சுத்தம் இல்லாமல் தொழுகையை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
 நூல் - முஸ்லிம-224 

02 - நஜீசுகளை விட்டும் உடம்பு சுத்தமாக இருத்தல்.

👉  நஜீஸ் உடைய வகைகள் மற்றும் அதனை சுத்தமாக்கக்கூடிய முறைகள் பற்றி சுத்தத்தின் பாடத்திலே பேசப்பட்டுள்ளது அதனை இங்கே உங்களுக்கு பார்த்துக் கொள்ளலாம் 👉click here

03 - நஜிசுகளை விட்டும் ஆடைகள் சுத்தமாக இருத்தல்.

👉 தொழுவதற்கு உடம்பு சுத்தமாக இருப்பது போலவே அணிந்திருக்கக் கூடிய ஆடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.

 ۝அல்லாஹ் சொல்லுகிறான் உங்கள் ஆடைகளை சுத்தமாக்கிக் கொள்ளுங்கள் சூரா -  அல் முத்தசீர் 04

04 - நஜிசுகளை விட்டும் இடம் சுத்தமாக இருத்தல்.

👉 தொழக்கூடிய இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் நஜீஸான இடத்திலிருந்து தொழுவது தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவே தொழக்கூடிய இடத்தை விட்டும் நஜீஸ்கள் இருந்தால் அந்த நஜீஸுகளை கட்டாயம் நீக்கி சுத்தமாக்கி கொள்ள வேண்டும்.

02 - நேரம் நுழைவதை அறிந்திருத்தல்.

👉 ஒவ்வொரு ஃபர்லான தொழுகைகளுக்கும் குறிப்பாக்கப்பட்ட நேரம் இருக்கிறது எனவே அந்த  நேரம் நுழைந்து விட்டது என்பதை அறிந்து ஒருவர் தொழ வேண்டும் ஒருவர் நேரத்தை கவனிக்காமல் தொழுது விட்டு தொழுத தொழுகை அந்த நேரத்துக்குள்ளால் நிகழ்ந்து விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது.

⏰ எவ்வாறு நேரம் நுழைந்து விட்டது என்பதை அறிவது?

 👉நேரம் நுழைந்து விட்டது என்பதை மூன்று முறைகளில் அறிந்து கொள்ளலாம்.

01 -  உறுதியான அறிவு - சூரியனுடைய உதயம் மறைவு இவைகளை கவனித்து அறிந்து கொள்ளுதல்.

02 -  இஜ்திஹாத் மூலமாக எண்ணம் ரீதியான ஆதாரங்களை  உறுதியாக கொண்டு நேரங்களை அறிந்து கொள்ளுதல்.

03 -  மேல் கூறப்பட்ட இரண்டு முறைகளில் ஏதாவது ஒரு முறையை அறிந்திருக்கக் கூடிய ஒருவரை பின்பற்றுதல்.

👉 ஒருவர் தான் தொழுத தொழுகை நேரம் நுழைவதற்கு முன்னால் தொழுது விட்டதை அறிந்தால் அந்த தொழுகை பாத்திலானதாக கவனிக்கப்படும் மேல் கூறப்பட்ட மூன்று முறைகளில் எதை பின்பற்றி தொழுதாலும் சரியே எனவே அவர் அந்த தொழுகையை மீட்டித் தொழவேண்டும்.

03 - அவ்ரத்தை மறைத்தல்.

👉 அவ்ரத் என்றால் மனித அடலில் எதுவெல்லாம் பார்ப்பது ஹராமோ அல்லது எதுவெல்லாம் மறைப்பது கட்டாயமோ அவைகள் மார்க்கத்தில் அவ்ரத் என்று அழைக்கப்படுகிறது.

👀 தொழுகைக்கு உள்ளே ஒரு ஆணுடைய மறைக்கப்பட வேண்டிய பகுதிகள்.

👉தொப்புள் உட்பட தொப்புளில் இருந்து தொப்புளுக்கும் முழங்கால் உட்பட முழங்காலுக்கும் மத்தியில் இருக்கக்கூடிய பகுதிகள்.

👉 ஒருவேளை இந்தப் பகுதிகள்  வெளியாகி விட்டால் தொழுகை பாத்தில் ஆகிவிடும.

👀 தொழுகைக்குள்ளே ஒரு பெண்ணுடைய மறைக்கப்பட வேண்டிய பகுதிகள்.

👉முகம் இரண்டு மணிக்கட்டுகளையும் தவிர உள்ள அத்தனை பகுதிகளும் மறைக்கப்பட வேண்டும்.


👀 தொழுகைக்கு வெளியில்  ஆண்களுக்கான அவ்ரத்.

👉தொழுகைக்கு வெளியில் ஒரு ஆண் ஏணய ஆண்களுக்கு முன்னிலையிலும் மேலும் அவருக்கு மஹ்ரமான பெண்களுக்கு முன்னிலையிலும் தொப்புளுக்கும் முளங்காள்களுக்கும் மத்தியில் உள்ள பகுதிகள் மறைக்கப்பட வேண்டும்.

👀ஏனைய அந்நிய பெண்களுக்கு முன்னால்.

👉 முகம் மற்றும் மணிக்கட்டுகளைத் தவிர உள்ள முழு பகுதிகளையும் மறைக்க வேண்டும் இது உருதியான கருத்தாகும் 

👉 ஒரு அந்நிய பெண்ணுக்கு ஒரு அந்நிய ஆணுடைய முகம் மணிக்கட்டை தவிர ஏனைய பகுதிகளை பார்ப்பது கூடாது அதுவும் இச்சையோட பார்ப்பதாக இருந்தால் அது முகத்தைப் பார்க்கிறதும் ஹராமாக இருக்கிறது. 

 ஆதாரம்:-

💬 உம்மு ஸலமா  ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள் நானும் மைமூனா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு இருக்கும்போது
இப்னு உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கே வந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எங்களுக்கு மறைந்து கொள்ளுமாறு திரை எடுத்துக் கொள்ளுமாறு ஏவினார்கள் நாங்கள் கேட்டோம் யா ரசூலல்லாஹ் அவரு தான் பார்வை இல்லாதவராக இருக்கிறாரே அவர் எங்களை பார்க்கவும் மாட்டார் எங்களை அறியவும் மாட்டாரே? என்று கேட்டபோது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நீங்கள் இருவரும் பார்வையற்றவர்களா? நீங்கள் இருவரும் அவரை பார்க்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள்.
நூல் - அபூதாவூத் 412 திருமதி - 278

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
- (திருக்குர்ஆன் 24:31)

👀ஒரு பெண்ணுக்கு தொழுகைக்கு வெளியில் ஏனைய முஸ்லிமான பெண்களுக்கு முன்னாள் மறைக்கப்பட வேண்டிய பகுதி.

👉 தொப்புளுக்கும் முழங்காலுக்கும் மத்தியில் உள்ள பகுதிகள் மறைக்கப்பட வேண்டும் ஏனைய காஃபிரத்தான பெண்கள் முன்னால் எந்தப் பகுதி தேவைப்படுகிறதோ உதாரணமாக வேலைகளின் நேரத்தில் எந்தப் பகுதிகள் வெளியாகுவது தேவையாக இருக்கிறது அதை மட்டும் வெளியாக்கிக் கொள்ள வேண்டும் ஏனைய பகுதிகள் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும்.

👀 ஒரு பெண்ணுக்கு தன்னுடைய மஹ்ரமான ஆண்களுக்கு முன்னால் மறைக்கப்பட வேண்டிய பகுதி.

👉தொப்புளுக்கும் முழங்காலுக்கும் மத்தியில் உள்ள பகுதியை மட்டும் மறைத்துக் கொள்வது கட்டாயமாகிறது ஏனைய பகுதிகள் திறந்திருப்பது நாள் பரவாயில்லை என்றாலும் அங்கே பித்னாவை பயப்படப்படும் என்றால் அதுவும் மறைக்கப்பட வேண்டும்.

👀 அந்நிய ஆண்களுக்கு முன்னால் ஒரு பெண்ணுடைய மறைக்க வேண்டிய பகுதி.

👉 அவளுடைய முழு உடம்பும் மறைக்கப்பட வேண்டும்.
👉 ஒரு தங்கடமான நேரம் வந்தால் மட்டும் எந்த உறுப்பை காட்டுவது கட்டாயமாக தங்கடம் ஆகிறதோ அதை மட்டும் காட்டுவதற்கு அனுமதி உண்டு.

👀 பெண்கள் தங்களுடைய அவ்ரத்தை திறப்பதற்கும் ஆண்கள் அதன் அளவில் பார்ப்பதற்கும் தங்கடமான சில நிலைமைகள்.

💗 திருமண பேச்சு வார்த்தையின் போது ஒரு பெண்ணுடைய முகத்தையும் இரண்டு மணிக்கட்டுகளையும் பார்க்க அனுமதி உண்டு.
💗 சாட்சி சொல்லும் போது அல்லது வியாபாரம் செய்யும் போது முகத்தை மாத்திரம் பார்ப்பதற்கு அனுமதி உண்டு.
💗 வைத்தியம் சிகிச்சை செய்யும்போது எந்த இடம் திறக்க வேண்டுமோ அதை மட்டும் திறப்பதற்கும் அதன் அளவில் ஒரு ஆணுக்கு பார்ப்பதற்கும் அனுமதி உண்டு.

👉அவ்வாறு வைத்தியத்துக்காக வேண்டி அவ்ரத்தை திறப்பதாக இருந்தால் அங்கே மஹ்ரமான ஒரு ஆண் அல்லது கணவன் இருப்பது நிபந்தனையாகும், மேலும் அந்த வைத்தியத்தை செய்வதற்கு ஒரு பெண் வைத்தியர் இல்லாமல் இருக்க வேண்டும், அதேபோல் ஒரு முஸ்லிமான ஆண் அல்லது ஒரு முஸ்லிமான ஒரு பெண் வைத்தியர்கள் இருந்தால் முஸ்லிமல்லாதவர்களிடத்திலே செல்வது கூடாது.



04 - கிபுலாவை முன்னோக்குதல்

۝ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருட் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
- (திருக்குர்ஆன் 2:150)

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவது எவ்வாறு என்று ஒருவருக்கு கற்றுக் கொடுக்கும் போது கூறினார்கள் தொழுகைக்காக வேண்டி நீங்கள் எழுந்தால் பரிபூரணமாக உளூ செய்யுங்கள் பின்பு  கிப்லாவை முன்னோக்கி தக்பீர் சொல்லுங்கள் என்பதாகச் சொன்னார்கள்.
 நூல் - புகாரி - 5897

கஃபத்துல்லாவின் பக்கம் கிப்லா திருப்பப்பட்டதன் வரலாறு

💬 பர்றா இப்னு ஆசிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல் முகத்திஸை முன்னோக்கி தொழக்கூடியவர்களாக இருந்தார்கள் மேலும் கஃபத்துல்லாவை முன்னோக்கி தொழுவதை விரும்பக் கூடியவர்களாகவும் இருந்தார்கள் எனவே அல்லாஹ் தனது வேதத்திலே
 
۝(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
- (திருக்குர்ஆன் 2:144)

💚மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற ஆரம்ப கட்டங்களில் கஃபத்துல்லாவின் பக்கம் கிப்லா திருப்பப்பட்டது.

👉கிப்லாவுக்கு கஃபத்துல்லாவுக்கு முன்னால் இருக்கக்கூடியவர்கள் அதனை உறுதியாக பார்த்து கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

👉 தூரமாக இருக்கக்கூடியவர்கள் உறுதியான ஆதாரங்கள் அடிப்படையில் கஃபத்துல்லாவை முன்னோக்க வேண்டும்.



  Writer -  Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை