நஜீஸின் வகைகளும் அதனை சுத்தம் செய்யும் முறையும்-பாடம் 04
மேல்வாரியாக நஜீஸை இரண்டு வகைப்படுத்தலாம்
01- பார்வைக்கு புலப்படும் நஜீஸ்.
👉 ஒவ்வொரு அசுத்தமும் ஒரு புலப்படும் பொருளைக் கொண்டுள்ளது, அவற்றில் முதலாவது நிறம் அல்லது வாசனையின் புலப்படும் பண்பு, அதாவது மலம், சிறுநீர் அல்லது இரத்தம்.
02 - பார்வைக்குப் புலப்படாத நஜீஸ்.
👉 காய்ந்த ஒவ்வொரு அசுத்தமும் , அதன் சுவடு போய்விட்ட, நிறம் அல்லது வாசனையின் தடயமுமில்லாத, அது ஒரு ஆடையின் மீது பட்ட சிறுநீர் போன்றது, ஆனால் அதன் எந்த தடயமும் தெரியவில்லை.
நஜீஸை சுத்தமாக்கும் விதத்தில் நஜீஸ் மூன்றுவகை.
01 - "அல்- முஅல்லலா" கடுமையான நஜீஸ்.
👉 இது நாய் மற்றும் பன்றியின் அசுத்தம்.
02 - "அல்- முஹப்பபா" மிக இலேஸான நஜீஸ்.
👉 பால் மட்டும் குடிக்கக்கூடிய இரண்டு வயதை எட்டாத சிறுவனின் சிறுநீர் ஆகும்.
💬 உம்மு கைஸ் பிந்து மிஹ்சன் ரலி அல்லாஹ் அன்ஹா அன்னவர்கள் தனது உணவு ஏதும் உண்ணாத சிறிய குழந்தையோடு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே வந்தார்கள் அப்போது அந்த குழந்தை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீரை அழைத்து அந்த சிறுநீரின் மீது தெளித்து விட்டார்கள் அதனை கழுகவில்லை.
03 - "அல்- முதவஸ்ஸிதா" நடுத்தரமான நஜீஸ்.
👉 அது நாய் பன்றி அல்லாத, மேலும் பாலைத் தவிர வேறு எதுவும் ஊட்டப்படாத சிறுவனின் சிறுநீரையும் தவிர உள்ளவை.
அதாவது 01,02 ம் வகை நஜீஸல்லாதது
📺Full lesson on youtube 👇👇👇👇👇
01 - அல்- முஅல்லலா கடுமையான நஜீஸ்.
💨💧 சுத்தமாக்கும் முறை 💬 இந்த வகை நஜீஸை தண்ணீரில் மட்டும் கழுவுவதன் மூலம் சுத்தம் செய்ய முடியாது, ஆனால் அதை ஏழு முறை தண்ணீரில் கழுவ வேண்டும், ஒரு முறை தூசி நிறைந்த மன்னால் கழுவ வேண்டும்.
குரிப்பு - இந்த நஜீஸானது ஆடை,இடம்,மேனி எதில் பட்டாலும் 7 முறை கழுகுவது கட்டாயம்.
02 - அல்- முஹப்பபா மிக இலேஸான நஜீஸ்.
👉 பால் மட்டும் குடிக்கக்கூடிய இரண்டு வயதை எட்டாத சிறுவனின் [ஆண் குழந்தையின்] சிறுநீர் ஆகும்.
💨💧 சுத்தமாக்கும் முறை 💬 சிறுநீன் மீது தண்ணீரை தெலித்து விட்டால் போதுமானது.
03 - அல்- முதவஸ்ஸிதா நடுத்தரமான நஜீஸ்.
சுத்தமாக்கும் முறை
👉 அது நாய் பன்றி அல்லாத, மேலும் பாலைத் தவிர வேறு எதுவும்
ஊட்டப்படாத சிறுவனின் சிறுநீரையும் தவிர உள்ளவை.
💬நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கலா ஹாஜத்துக்காக வேண்டி வெளியானால் அவர்களுக்காக நான் தண்ணீர் கொண்டு செல்வேன் அதைக் கொண்டு அவர்கள் கழுகுவார்கள் என அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
💨💧 சுத்தமாக்கும் முறை 💬 அதனுடைய அய்ன் பொருல் நீக்கப்பட்டு வாடை,சுவை மற்றும் நிரம் போன்றவையும் போகும் வரைக்கும் கழுவினால் போதுமானது.
குறிப்பு - நீக்குவதற்கு மிக கஸ்டமான நிரம் எந்தவிதமான தங்கடத்தையிம் உண்டாக்காது.

கருத்துகள் இல்லை