போர்க்களத் தொழுகை முறை
⭐ஸலாத்துல் ஹவ்ப் எனப்படும் பயத்தின் நேரத்தில் தொழக்கூடிய தொழுகை அதாவது போர்க்காலத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது யுத்த களத்தில் இருக்கக்கூடியவர்கள் எவ்வாறு தொழ வேண்டும் அந்த தொழுகைகள் எவ்வாறு இருக்க வேண்டும் குறிப்பாக ஜமாத்தாக தொழும் முறை என்ன என்பது பற்றிய பாடமாகும்.
👉 இந்தத் தொழுகைக்கு இரண்டு நிலைமைகள் இருக்கிறது ஒவ்வொரு நிலைமையிலும் வெவ்வேறான முறைகளில் தொழுகை நிறைவேற்றப்படும்.
👉மேலும் இந்த தொழுகை ஏனைய வழமையாக தொழக்கூடிய தொழுகையுடைய முறைக்கு சில வித்தியாசங்கள் இருக்கிறது.
⭐ பொதுவாக போர்க்களத்தில் தொழக்கூடிய தொழுகைகள் ஜமாத்தாக தொழ முடியும் , பிரயானிகலாக இருந்தால் சுருக்கியும் பிரயானி இல்லை என்றால் முழுமையாகவும் தொழவேண்டும்.
👉எனவே அங்கு இருக்கும் அனைவரும் அனைத்து படையினரும் ஒரே ஜமாத்தில் தொழுவதற்கு விரும்பினால் பின்வரும் முறையை பின் பற்ற வேண்டும்
முதலாவது நிலைமை
⭐ யுத்தம் தணிந்து இருக்கக்கூடிய நேரத்தில் எதிரிகள் வருவதை பயந்தால் எதிரிகளுடைய திசையின் பக்கம் பாதுகாப்புக்காக வேண்டி ஒரு கூட்டம் நியமிக்கப்பட வேண்டி இருக்கும் நிலையில் எல்லாருமாகச் சேர்ந்து ஜமாத்தாக தொழக்கூடிய நிலைமை.
இந்த நிலைமையில் தொழுவதற்கு இரண்டு முறைகள் உள்ளது
முதலாவது முறை
01- யுத்தம் நிப்பாட்டி இருக்கும் நிலைமையில் எதிரிகள் கிப்லாவின் பக்கம் இருந்தால் தொழக் கூடிய ஒரு முறை.
💗ஒரு இமாமை பின்பற்றி இரண்டு அல்லது நான்கு அல்லது அதற்கு அதிகமான சப்புகள் நிற்க வேண்டும்.
01- வளமையான தொழுகை போன்று நிலையில் நிற்பது ருகூஹ் செய்வது நிலைக்கு வருவது இவை எல்லா சப்பும் சேர்ந்து இமாமோடு செய்வார்கள் சுஜூதுக்கு போகும்போது மாத்திரம் இமாமை அடுத்து நிற்கக்கூடிய சப்பு மட்டும் அதாவது இரண்டு சப்பாக இருந்தால் ஒரு சப்பும் 4 சப்புகள் இருந்தால் இரண்டு சப்புகள் இமாமுக்கு அடுத்தடுத்து இருக்கும் இரண்டு சப்புகள் மாத்திரம் சுஜூதுக்கு இமாமோடு செல்ல வேண்டும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய இரண்டு சப்பும் நின்றவாறு எதிரிகள் வருகிறார்களா என்பதை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
02- பின்பு இரண்டாவது ரக்காத்துக்கு இமாம் எழுந்ததற்கு பின்னால் நின்று கொண்டிருந்த மஃமூம்கள் அவர்களுடைய சுஜூதை செய்வார்கள் பின்பு இமாமோடு இரண்டாவது ரக்காத்திலும் சேர்ந்து கொள்வார்கள் பின்பு இமாம் இரண்டாவது ரக்காத்துடைய நிலைக்கு வந்ததற்கு பின்னால் சுஜூதுக்கு போகும்போது முன்னாள் சொன்னதைப் போல் இமாமோடு நிற்கக்கூடிய இமாமுக்கு அடுத்து வரக்கூடிய சப்பில் உள்ளவர்கள் மட்டும் செல்வார்கள் எஞ்சியவர்கள் பாதுகாத்துக் கொண்டிருப்பார்கள் இமாம் சஜதா முடிந்து அத்தகையாத்தில் இருக்கும் போது நின்று பாதுகாத்துக் கொண்டிருந்தவர்களும் சுஜூதுக்கு சென்று அவர்களும் அத்தகையாத்துக்கு வந்து அனைவருமாக சேர்ந்து ஒன்றாக சலாம் கொடுப்பார்கள்.
👉இது கிப்லாவின் பக்கம் எதிரிகள் நின்க அதே சமயம் யுத்தம் நிறுத்தப்பட்டு இருக்கும் நிலைமையில் தொழும் பொழுது இவ்வாறு தொழ வேண்டும். அவ்வாறு தொழுது கொண்டிருக்கும் போது எதிரிகள் வந்தால் நின்று கொண்டிருக்கக் கூடியவர்கள் கவனித்துக் கொண்டு பாதுகாத்துக் கொண்டிருக்க கூடியவர்கள் வரக்கூடிய எதிரிகளோடு யுத்தம் செய்ய வேண்டும்.
👉இந்த முறையில் பல யுத்தங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதிருக்கிறார்கள் குறிப்பாக அஸ்வான் யுத்தத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் இவ்வாறு தொழுதுள்ளார்கள் இந்த முறையில் இருக்கக்கூடிய பயம் நிறைந்த ஒரு சூழல் இருக்குமாக இருந்தால் ஒருவருக்கு இவ்வாறு தொழுவதற்கு அனுமதி உள்ளது உதாரணமாக எதிரி திரட்டிக் கொண்டிருக்கிறார் அவரை அவரிடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வேண்டி ஓடும் போது தொழுவதைப் போல.
இரண்டாவது முறை
⭐எதிரிகள் எல்லா பக்கமும் சூழ்ந்து நிற்கும் நிலையில் மேலும் யுத்தம் நடக்காத நிலைமையில் தொழக்கூடிய முறை
💗இப்படியான சந்தர்ப்பத்தில் சுன்னத்தான தொழுகை முறை
01 -
👉தொழக் கூடிய அனைவரும் இரண்டு கூட்டங்களாக பிரிய வேண்டும் அதில் ஒரு கூட்டத்தினர் எதிரிகள் நிற்கும் பக்கத்தில் நின்று முஸ்லிம்களை பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டும் மற்றைய கூட்டத்தினர் இமாமோடு சேர்ந்து ஜமாத்தாக தொழ வேண்டும்.
👉 இந்த கூட்டத்தினர்கள் இமாமோடு ஒரு ரக்அத் தொழுவார்கள் இமாம் இரண்டாவது ரக்காத்துக்கு எழுந்ததற்குப் பின்னால் முபாரகாவுடைய நியத்தை வைத்து அவர்களுடைய இரண்டாவது ரக்காத்தை தனி தனியாக தொழுது சலாம் கொடுத்துவிட்டு முதலாவது கூட்டத்தார்கள் பாதுகாப்புக்கு நிக்கும் கூட்டத்தார்கள் இடத்திலே சென்று அங்கே பாதுகாப்புக்கு நிற்பார்கள்,
👉 எனவே பாதுகாப்புக்கு நின்ற கூட்டத்தினர் இமாமை வந்து பின்பற்றுவார்கள் அதுவரைக்கும் இமாம் கியாமலேயே நிண்ட நிலைமையில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் இரண்டாவது கூட்டத்தினர் வந்ததற்கு பின்னால் அவர்களோடு சேர்ந்து இரண்டாவது ரக்அததை தொழுதுவிட்டு அத்தகையாத்தில் இமாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் இவர்களுடைய இரண்டாவது ரக்அத்தை எழுந்து அவர்கள் தொழுதுவிட்டு இமாமோடு சேர்ந்து சலாம் கொடுப்பார்கள்.
👉இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாதுர் ரிகாஃ என்ற யுத்தத்தில் தொழுதார்கள் - முஸ்லிம் புகாரி 3900 முஸ்லிம் 846
இரண்டாவது நிலைமை
👉 யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது இரண்டு கூட்டத்தாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் மோதிக்கொண்டிருக்கும்போது பயமும் அதிகமாக கடுமையாக இருக்கும் போது தொழக்கூடிய நிலைமை.
👉அவ்வாறு யுத்த களம் ஒருவருக்கொருவர் யுத்தம் செய்து கொண்டிருக்கும்போது தொழுகை நேரம் வந்தால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு இயலுமான முறையில் தொழுவதற்கு அனுமதி உண்டு.
👉 அதாவது நடந்து கொண்டே தொழலாம் குதிரையில் ஒட்டகத்தில் சென்று கொண்டே தொழலாம். அல்லது ஒரு இடத்தில் நின்று தொழலாம் மேலும் கிப்லாவை முன்னோக்கி தொழலாம் மேலும் கிப்லாவின் பக்கம் இல்லாமல் திரும்பியும் தொழ முடியும் ருக்கு மற்றும் சுஜூது செய்யும் போது சைக்கினை மூலம் செய்ய முடியும் சுஜூதுடைய சைக்கினையை ருக்கு உடைய சைக்கினையை விட கொஞ்சம் அதிகமாக தாழ்த்திக் கொள்ள வேண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருவரை மற்றவர் பின்பற்றி தொழலாம் அந்த சந்தர்ப்பத்தில் ஜமாத்தாக தொழுவது சிறந்தது முடியாவிட்டால் தனித்து தனித்து தொழமுடியும் ஜமாத்தாக தொழும் நேரத்தில் அவர்களுடைய திசைகள் வித்தியாசமாக. இருப்பதினாலோ அல்லது இமாமைக்கான முன்னுக்கு இருப்பதனாலோ எந்தவிதமான குற்றமும் இல்லை.
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
- (திருக்குர்ஆன் 2:239)
👉இந்த சந்தர்ப்பத்தில் அதிகமான அசைவுகள் மன்னிக்கப்படும் ஆனால் கத்துவது சத்தம் போடுவது கதைப்பது மன்னிக்கப்பட மாட்டாது மேலும் நஜீஸ்கள் பட்டால் இரத்தம் போன்றவைகள் பட்டால் மன்னிக்கப்பட மாட்டாது என்றாலும் தொழுகை சிகத்தாகும் அந்த யுத்த களத்திற்கு பின்னால் அவ்வாறு நஜீஸ்கள் பட்டதோடு தொழுத தொழுகைகளை கலா செய்ய வேண்டும்.
Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை