FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்- பாடம் - 38

Share:


பிரயாணத் தொழுகை

பிரயாணத் தொழுகை: ஒரு விரிவான விளக்கம்

பிரயாணத் தொழுகை என்பது இஸ்லாமில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சலுகையாகும். இஸ்லாம் தொழுகையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. ஆனால், பயணம் என்பது சில சமயங்களில் கடினமானதாக இருக்கலாம். எனவே, அல்லாஹ் தஆலா பயணிகளுக்கு சில சலுகைகளை வழங்கியுள்ளார். அந்த சலுகைகளில் ஒன்றுதான் பிரயாணத் தொழுகை.

கஸ்ரு (சுருக்குதல்):

  • பொருள்: நான்கு ரக்அத்கள் கொண்ட லுஹர், அஸ்ர் மற்றும் இஷா தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது.
  • காரணம்: பயணம் என்பது உடல் மற்றும் மன ரீதியாக சோர்வடையச் செய்யும். எனவே, தொழுகைகளை சுருக்கித் தொழுவதன் மூலம் பயணிகள் தங்களது உடல் சோர்வை குறைத்துக்கொள்ளலாம்.

ஜம்வு (இணைத்துத் தொழுதல்):

  • பொருள்: இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழுவது.
  • எடுத்துக்காட்டு: லுஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகளை ஒன்றாகவும், மக்ரிப் மற்றும் இஷா தொழுகைகளை ஒன்றாகவும் தொழுவது.
  • காரணம்: பயணத்தின் போது தொழுகை நேரங்கள் சரியாகக் கிடைக்காமல் போகலாம். எனவே, இரண்டு தொழுகைகளை ஒன்றாக தொழுவதன் மூலம் இந்த பிரச்சனையைத் தீர்க்கலாம்.

 கஸ்ருடைய (சுருக்குதல்) சட்டங்கள்

💗கஸ்ரு என்பது பயணத்தின் போது நான்கு ரக்அத்கள் கொண்ட லுஹர், அஸ்ர், இஷா தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவதைக் குறிக்கிறது. இது இஸ்லாம் பயணிகளுக்கு வழங்கியிருக்கும் ஒரு சலுகையாகும்.

கஸ்ருவின் ஆதாரம்

  • குர்ஆன்: "நீங்கள் பூமியில் பயணம் செய்தால் தொழுகையை நீங்கள் சுருக்கிக் கொள்வதில் எந்த குற்றமும் உங்களுக்கு கிடையாது." (குர்ஆன் வசனம்)
  • ஹதீஸ்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த வசனம் குறித்து கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் இது அல்லாஹ்வின் சலுகை என்று கூறினார்கள்.

மேலும்  💬 யஃலா இப்னு உமையா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே  மேல் கூறப்பட்ட இந்த குர்ஆன் வசனத்துக்கு விளக்கம் கேட்கும் போது மக்கள் அச்சம் தீர்ந்து இருந்துமா என்று கேட்டார்கள் அதற்கு உமர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நான் கேட்டபோது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அது அல்லாஹுத்தஆலா உங்களுக்கு தரும் சதக்கா எனவே அந்த  அவருடைய சதக்காவை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.
நூல் - முஸ்லிம் - 686

👉இந்த ஹதீஸை வைக்கும் பார்க்கும்போது சுருக்கி தொழுவது என்பது பயம் நிறைந்த யுத்தத்தின் நிலைமையில் மட்டுமல்லாமல் எல்லா பயணங்களிலும் ஆகுமாக்கப்பட்டுள்ளது.

தொழுகையை சுருக்கி தொழும் போது கவனிக்க வேண்டிய நிபந்தனைகள்

01 - தொழுகை பிரயாணத்தில் இருக்கும் போது கடமையாக வேண்டும், மேலும் பிரயாணத்திலேயே அந்த தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும்.

⭐எனவே இந்த நிபந்தனையின் அடிப்படையில் ஒருவர் பிரயாணம் செய்வதற்கு முன்னால் தொழுகையுடைய நேரம் வந்துவிட்டால் அவர் தொழாமல் பிரயாணம் செய்தால் அந்த தொழுகையை சுருக்கி தொழ முடியாது எனவே பிரயானத்துக்கு முன்னால் கடமையான தொழுகையை ஊரிலேயே தொழுது கொள்ள வேண்டும் அல்லது பிரயாணத்தில் பூரனமாக தொழலாம் சுருக்க முடியாது.

👉 அதேபோல் பிரயாணத்தில் இருக்கும் போது தொழுகை கடமையானது தொழுகை நேரம் நுழைந்தது என்றாலும் அவர் பிரயாணத்தில் தொழ வில்லை என்றால் தன்னுடைய ஊர் இருக்கும் இடத்துக்கு  வந்து விட்டால் அவருடைய பிரயாணம் முடிந்து விட்ட காரணத்தினால் அங்கே சுருக்கி தொழ முடியாது. 

02 -  ஊருடைய எல்லையை விட்டும் தாண்டி இருக்க வேண்டும்.

👉ஊர் எல்லை எனும் பொழுது ஒரு ஊர எந்த இடத்தில் முடிகிறதோ சுவர்கள் அல்லது கட்டிடங்கள் அல்லது காணிகள் என்று அறியப்பட்ட அந்த எல்லையை விட்டும் தாண்டியதன் பின்னால் தான் தொழுகையை சுருக்கி தொழ முடியும்.

👉அதேபோல் அவர் திரும்பி வந்தாலும் ஊர் எல்லைக்கு வருவதற்கு முன்னால் தொழுகை இருந்தால் சுருக்கி தொழுதுவிட்டு வரவேண்டும் ஊர் எல்லைக்குள் நுழைந்து விட்டால் அவர் பரிபூரணமாக தொழ வேண்டும்.

💬  அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதீனாவில் லுஹரை நான்கு ரக்அத்தாக தொழுதோம் மேலும் துல்ஹலிஃபாவில் அசரை இரண்டு ரக்அத்தாக தொழுதோம் துல்ஹலிஃபா என்பது மதீனாவுடைய கட்டடங்களுக்கு அதாவது எல்லைக்கு வெளியில் உள்ள இடமாகும். நூல் - புகாரி - 1039, முஸ்லிம் - 590.

03 - பிரயாணம் செய்யக் கூடியவர் அவர் பிரயாணம் செய்யும் இடத்தில் போகும் நாள் மேலும் திரும்பி வரும் நாளை தவிர நான்கு நாட்கள் அங்கே தங்கி இருப்பதை நிய்யத்து வைக்கக் கூடாது.

👉 அவ்வாறு ஒருவர் செல்லும் அந்த இடத்தில் நான்கு நாள் தங்குவதற்கு நிய்யத்து வைத்தால் அவர் அது அவருடைய சொந்த ஊரை போல் ஆகிவிடும் எனவே அங்கே சுருக்கி தொழ முடியாது எனவே அவருக்கான சுருக்கி தொழக்கூடிய அந்த உரிமை அந்த ஊருக்குப் போகும் பாதையிலும் வழியிலும் அங்கிருந்து திரும்பி வரும் வழியிலும் மாத்திரமே கிடைக்கும்.

👉 அதாவது ஓரிடத்தில் நான்கு நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்குவதாக உறுதி கொண்டு பிரயாணம் செய்தால் அந்தப் பிரயாணத்தில் அந்த குறிப்பிட்ட இடம் போகும் வரைக்கும் அந்தப் பிரயாணத்தில் சுருக்கி தொழ இயலும் குறிப்பிட்ட இடத்திற்கு போய்விட்டால் அங்கே சுருக்கி தொழ முடியாது மீண்டும் அங்கிருந்து பிரயாணம் சென்று அவருடைய இடத்துக்கு வருவதாக இருந்தால் அந்த பிரயாணத்திலும் அவருக்கு சுருக்கி தொழ முடியும் ஆக அவர் எங்கு போய் தங்கி இருந்தாரோ அந்த இடத்தில் நான்கு நாள் அல்லது அதற்கு மேல் இருப்பதனால் அங்கே சுருக்கி தொழ முடியாது.

👉 மேலும் 4 நாட்களை காண குறைந்த நாட்கள் தங்கி இருப்பதை நிய்யத்து வைத்தால் அப்போது அவருக்கு தங்கி இருக்கும் இடத்தில் தொழுகையை சுருக்கி தொழ முடியும்.

👉அல்லது எத்தனை நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்று தெரியாத நிலைமையில் ஒரு பயணமாகி அங்கே அவருடைய வேலை முடிவதற்கு தாமதம் ஏற்பட்டால் அந்த நிலைமையில் 18 நாட்கள் வரை அவருக்கு தொழுகையை அங்கே சுருக்கி தொழ முடியும்.

💬இம்ரான் இப்னு ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு யுத்தம் செய்தேன் மேலும் பத்ஹு மக்காவில் அவர்களோடு  நான் இருந்தேன் எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 18 இரவுகள் மக்காவிலே இருந்தார்கள் அப்போது இரண்டு ரக்அத்துக்கள் மாத்திரமே தொழுதார்கள் ஏனெனில் நிச்சயமாக மக்காவில் இருந்த காலத்தில் யுத்தத்துக்காக வேண்டி எதிர்பார்த்து இருந்ததனால் எவ்வளவு காலம் தரிபட்டிருப்போம் என்று அறிந்திருக்கவில்லை. நூல் - அபூதாவூத்

👉 எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் ஒரு பயணமாகி ஒரு இடத்துக்கு சென்றால் அந்த இடத்திலே எத்தனை நாள் அந்த வேலையை முடிப்பதற்கு போகும் என்று அவருக்கு அறியாத நிலைமை இருந்து அந்த வேலையை இன்று முடிக்கலாம் நாளை முடிக்கலாம் என்று எதிர்பார்த்து இருந்தால் அப்போது அவருக்கு 18 நாள் வரைக்கும் இந்த தொழுகைகளை சுருக்கி தொழலாம் அதற்கு மேல் சென்றால் முழுமையாக தொழுகைகளை பரிபூரணமாக தொட வேண்டும்.

04 - ஊர்வாசியை பின்பற்ற கூடாது.

👉 ஒரு ஊர்வாசி தொழுவிக்கும் பொழுது அவரை பின்பற்றி சுருக்கி தொழக் கூடிய ஒருவர் தொழக்கூடாது, காரணம் ஒரு இமாமை பின்பற்றும்போது அவருடைய பரிபூரணமான தொழுகை முழுவதையும் பின்பற்ற வேண்டும் எனவே சுருக்கி தொழக் கூடிய ஒருவர் ஊர்வாசியான பூரணமாக தொழக்கூடிய ஒருவரை பின்பற்றினால் அங்கே சுருக்குவது ஆகுமாக மாட்டாது.

👉 மேலும் ஒரு பிரயாணி இமாமாக நின்று தொழுகை தொழுவிக்கும் போது ஒரு ஊர்வாசி பின்னால் நின்று தொழுதால் அந்த இடத்தில் இமாமாக நிற்கும் பிரயாணிக்கு தொழுகையை சுருக்குவது ஆகுமாகும் மேலும் ஸலாம் கொடுத்ததற்கு பின்னால் ஊர்வாசிகள் அவர்களுடைய எஞ்சிய இரண்டு ரக்அத்துகளையும் எழும்பி தொழுவார்கள் எனவே அந்த சந்தர்ப்பத்தில் இரண்டு ரக்அத்தில் சலாம் கொடுத்துவிட்டு பின்னுக்கு  தொழக்கூடியவர்களுக்கு நான் ஒரு பிரயாணி எனவே உங்களுடைய தொழுகைகளை நீங்கள் பரிபூரணமாக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லுவது சுன்னத்தாகும்.

💬 முன்னாள் கூறப்பட்ட இம்ரான் இப்னு ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஹதீஸில் வந்திருப்பதாவது ஊர்வாசிகளே நீங்கள் நான்காக தொழுங்கள் ஏனெனில் நிச்சயமாக நாங்கள் பிரயாணிகள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.



ஜம்மு செய்து(சேர்து)தொழுவதன் சட்டம் 

⭐ ஜம்மு செய்தல் என்றால் ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையோடு சேர்த்து அந்த தொழுகையின் நேரத்திலே தொழுவதாகும்.

💗 ழுஹரையும் அசரையும் சேர்த்து தொழ முடியும் மேலும் மஃரிப்பையும் இஷாவையும் சேர்த்து தொழ முடியும்.

💬 இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ழுஹர் தொழுகை மேலும் அஸர் தொழுகைக்கு மத்தியில் சேர்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள் மேலும் மஃரிபு தொழுகைக்கும் இஷா தொழுகைக்கு மத்தியில் சேர்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.  நூல் - புகாரி - 1056.

ஜம்மு  செய்து தொழுதல் என்பது இரண்டு வகைப்படும்

01 -  ஜம்மு தக்தீம். 

👉 முதலாவது தொழுகையோடு இரண்டாவது தொழுகையை முற்படுத்தி தொழுதல்.

 உதாரணமாக - ழுஹர் தொழுகையுடைய நேரத்தில் அஸர் தொழுகையை ழுஹர் தொழுகையோடு முற்படுத்தி சேர்த்து தொழுதல்.

02 -  ஜம்மு தஃஹீர். 

உதாரணமாக -  முதலாவது நேரத்தில் உள்ள தொழுகையை இரண்டாவது நேரம் வரைக்கும் பிற்படுத்தி சேர்த்து தொழுதல் உதாரணமாக அஸர் தொழுகையுடைய நேரத்தில் ழுஹர் தொழுகையை பிற்படுத்தி அஸரோடு சேர்த்து தொழுதல்.

ஜம்மு தக்தீமுடைய நிபந்தனைகள்

01 - தர்தீபாக  தொழுதல்.

👉 முதலாவது தொழுகையை இரண்டாவது தொழுகையை இரண்டாவதும் தொழ வேண்டும்,

02 - முதலாவது தொழுகையை  தொழுது முடிப்பதற்கு முன்னால் இரண்டாவது தொழுகையை சேர்க்கப் போகிறேன் என்று நீயத்தை வைக்க வேண்டும்.

👉 சலாம் கொடுப்பதற்கு முன்னால் இந்த நிய்யத்து வர வேண்டும் என்றாலும்
இஹ்ராம் தக்பீரிலே நிய்யத் வைப்பது சுன்னதாகும்.

03 -  அவ்விரண்டு தொழுகைகளுக்கு மத்தியில் தொடர்ச்சி இருக்க வேண்டும் இடையில் எந்தவிதமான பிரிவுகளும் இருக்கக் கூடாது.

👉 அதாவது முதலாவது தொழுகையை தொழுது முடிஞ்சி இரண்டாவது தொழுகையை அவசரமாக சேர்த்து தொழ வேண்டும் அந்த ரெண்டு தொழுகைகளுக்கும் மத்தியில் திக்ரு செய்து கொண்டிருப்பதோ அல்லது ஒரு சுன்னத் தொழுவதோ செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் அதனால் நீண்ட இடைவெளி ஏற்படுமாக இருந்தால் அவருக்கு ஜெம்மு செய்வது பாத்தில் ஆகிவிடும் எனவே அவர் அந்த தொழுகையை அதனுடைய நேரம் வரைக்கும் பிற்படுத்தி அந்த நேரத்திலே தான் தொழ வேண்டும்.

04 - இரண்டாவது தொழுகையுடைய நேரம் நுலையும் வரைக்கும் பிரயானம் நீடிக்க வேண்டும். 

👉 இரண்டாவது தொழுகை நேரம் முடிவதர்க்கு முன்னால் ஊருக்கு சென்ரால் பரவாயில்லை.
 
👉 மேலும் இவ்வாறு சேர்த்து தொழும்போது சுருக்காமல் நான்கு நான்கு ரக்காத்தாக தொழவும் முடியும் அல்லது முன்னாள் பாடத்தில் சொன்னதைப் போல் சுருக்கி இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழவும் முடியும்.

ஜம்மு தஃஹீருடைய நிபந்தனைகள்

01 -  முதலாவது தொழுகையுடைய நேரம் முடிவதற்கு முன்னால் அந்த தொழுகையை இரண்டாவது தொழுகையின் நேரத்தில் பிற்படுத்தி சேர்த்து தொழ போகிறேன் என்று நிய்யத்து வைக்க வேண்டும்.

👉 ஒருவர் இவ்வாறு நிய்யத்து வைக்கவில்லை என்றால் அந்தத் தொழுகை கலாவாகிவிடும் எனவே நிய்யத்து வைக்காமல் பிற்படுத்தியதனால் அவர் பாவியாகுவார்.

02 - அந்த இரண்டு தொழுகைகளையும் தொழுது முடிப்பதற்கு முன்னால் அவருடைய பிரயாணம் முடியாமல் இருக்க வேண்டும்.

👉 அதாவது தொழுகையை தொழுவதற்கு முன்னாலேயே பிரயாணத்தை முடித்துக் கொண்டார் என்றால் பிற்படுத்திய அந்த தொழுகை கழாவாக ஆகிவிடும் எனவே அவர் அந்த தொழுகையை கழாவாக தான் தொழ வேண்டும்.

💙 எனவே ஒரு பிரயாணத்தில் பிரயாணம் முடியக்கூடிய கட்டத்தில்  இருக்கிறோம் என்றால் ஊருக்கு வருவதற்கு முன்னாலே அவருடைய எல்லையை அடைவதற்கு முன்னால் ஓரிடத்தில் பிற்படுத்திய இந்த தொழுகைகளை பிரயாணத் தொழுகைகளை தொழுது கொள்ள வேண்டும் அதற்கு பின்னால் அந்த பயணத்தை அவர் முடித்துக் கொள்வார் நேரம் எஞ்சி இருந்தாலும் பரவாயில்லை.

👉 இவ்வாறு தொழும்போது தர்த்தீபாகத் தொழ வேண்டும் என்பது நிபந்தனை அல்ல அவர் நாடிய தொழுகையை கொண்டு ஆரம்பிப்பார் அல்லது மேலும் ஒன்றன்பின் ஒன்றாக தீவிரமாக அவசரமாக சேர்த்து தொழுவதும் சுன்னத் ஆகும் நிபந்தனையாக இல்லை என்றாலும் பிற்படுத்தி தொழும் போது முதலாவது தொழுகையை ஆரம்பத்திலும் இரண்டாவது நேரத்தின் தொழுகையை இரண்டாவதும் தொழுவது சிறந்தது.

தொழுகையை சுருக்குவதற்கும் சேர்த்து தொழுவதற்கும் ஆகுமாக்கப்பட்ட பிரயாணத்தின் நிபந்தனைகள்


🌟 அதாவது எவ்வாறான பிரயாணத்தில் தொழுகையை சுருக்க முடியும் ஜம்மு செய்ய முடியும்?

01 - அந்தப் பிரயாணம் கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டர்களை காண அதிகமாக இருக்க வேண்டும்.

👉 எனவே 90 கிலோ மீட்டர்களை காண குறைவான பயணங்களில் தொழுகையை சுருக்கவோ அல்லது சேர்த்து தொழவோ முடியாது.

02 -  அந்தப் பிரயாணம் குறிப்பிட்ட  ஒரு திசையை  ஒரு இடத்தின் பக்கமாக இருக்க வேண்டும்.

👉அதாவது போற இடம் அறிந்து செல்ல வேண்டும், அவ்வாரின்றி எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் முகம் போன போக்கில் ஒரு பிரயாணம் செய்துகொண்டிருக்கக்கூடிய ஒருவருக்கு அந்தப் பிரயாணத்தில் தொழுகைகளை சுருக்கவோ சேர்த்து தொழவும் முடியாது என்றாலும் அவர் அந்த பிரயாணத்தை முடித்துக் கொண்டால் அந்த நேரத்தில் அவர் வந்த தூரம் முன்னாள் சொல்லப்பட்டதைப் போல் தூரத்தின் அளவு இறுக்கமாக இருந்தால் அப்பொழுது அவருக்கு சுருக்க முடியும்.

03 - செல்லும் அந்தப் பயணம் ஒரு பாவத்தின் பக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.

👉 ஒரு வேலை ஒரு பாவத்தை செய்வதற்காக வேண்டி ஒருவர் பிரயாணத்தில் இருந்தால் அந்தப் பிரயாணம் மார்க்கத்தில் தொழுகையை சுருக்குவதற்கான பிரயாணமாக கணக்கெடுக்கப்பட மாட்டாது.

உதாரணமாக - சாராயம் விற்பதற்காக வேண்டி அல்லது வட்டி கொடுப்பதற்கு வாங்கலுக்காக வேண்டி அல்லது பாதைகளையும் மறைத்து பிரயாணம் செய்யக் கூடியவர்களை வழிப்பறிக் கொள்ளை செய்வதற்காக வேண்டி இவ்வாறு ஏதாவது ஒரு நோக்கத்திற்காக வேண்டி பிரயாணம் செய்து இருந்தால் அந்தப் பிரயாணத்தில் தொழுகையை சுருக்க முடியாது.

கடும் மழையின் நேரத்தில்  ஜம்மு தக்தீம் செய்து தொழுதல்

🌟அதாவது இந்த அனுமதி பள்ளிக்குச் சென்று ஜமாஅத்தாக தொழக்கூடியவர்களுக்காகும்.

 👉 பள்ளிக்குச் சென்று ஜமாத்தாக தொழக் கூடியவர்கள் முதலாவது நேரத்தில் கடும் மழையாக இருக்கும் என்றால் முதலாவது நேரத்தில் இரண்டாவது நேரத்தையும் முற்படுத்தி சேர்த்து தொழலாம் ஆனால் இங்கு தொழுகையை சுருக்குவது கூடாது.

🌟 மேலும் இரண்டாவது நேரத்தில் தொழுகையை பிற்படுத்தி தொழுவது கூடாது.

இவ்வாறு தொழுவதற்கான இரண்டு நிபந்தனைகள் உள்ளது

01 -  பள்ளி மிக தூரத்தில் இருக்க வேண்டும்.

👉 தொழுகையை ஜமாத்தாக நிறைவேற்றுவதற்காக வேண்டி சென்றிருக்க வேண்டும் எனவே பாதையில் மழை காரணமாக நீண்ட தூரம் செல்வதற்கு கஷ்டமாக இருப்பதினால் அங்கே தொழுகையை முற்படுத்தி தொழ இயலும்.

02 - மலை தொடராக பெய்து கொண்டிருக்க வேண்டும்.

👉 முதலாவது தொழுகையில் இருந்து சலாம் கொடுக்கும் போதும் மழை தொடராக பெய்து கொண்டிருக்க வேண்டும்.

  Writer -  Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை