ஜமாத்து தொழுகை எப்போது ஆரம்பிக்கப்பட்டது
💚நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன்னால் மக்காவில் 13 வருடங்கள் தொழுதார்கள் அந்த சமயத்தில் இஸ்லாத்தை மறைத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது அதனால் அனைத்து சஹாபாக்களும் அவர்களுடைய வீடுகளிலே தொழுதார்கள் எனவே மக்காவில் ஜமாத் தொழுகை நடைபெறவில்லை பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா ஷரீஃபுக்கு வந்த போது அங்கே ஜமாத்து தொழுகையை நிலைநாட்டினார்கள் அது தொடராக வளமையாக்கப்பட்டுள்ளது.
ஜமாத் தொழுகையின் மார்க்க சட்டம்
💚 ஜமாத்தாக தொழுவது ஜும்ஆவுடைய தொழுகையைத் தவிர ஏனைய தொழுகைகளில் பர்ழு கிஃபாயாவாகும் அதாவது ஒரு ஊரில் ஆகக் குறைந்தது இரண்டு பேராவது ஜமாத்தை வெளியில் விளங்க கூடிய அளவுக்கு தொழ வேண்டும் அவ்வாறு தொழுதால் ஏனைய ஊர்வாசிகளை விட்டும் அந்த கடமையை விழுந்து விடும் அப்படி இல்லை என்றால் முழு ஊருவாசிகளும் அதை விட்ட பாவத்துக்கு உள்வாங்கப்படுவார்கள்.
அவர்களில் நீங்களும் இருந்தால் தொழுகையை நிலை நாட்டுங்கள் ஒரு கூட்டம் உங்களுடன் நின்று தொழும். என குர்ஆனிலே அல்லாஹ் சுபஹானஹூதஆலா கூறுகிறான்.
👉 இந்த வசனம் ஸலாத்துல் ஹவ்ப் என்று சொல்லும் யுத்தத்தின் நேரத்திலே தொழக்கூடிய தொழுகையில் ஜமாத்தாக அந்த தொழுகையை நிறைவேற்றும்படி அல்லாஹ் கூறுகிறான், பயம் நிறைந்த யுத்த களத்தில் கூட ஜமாஅத்தாக தொழ வேண்டும் என்று ஏவல் இருந்தால் ஏனைய நேரங்களில் கட்டாயமாக ஜமாத்து தொழ வேண்டும் என்பதை நாங்கள் விளங்க எடுக்கிறோம்.
💬 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாவது தனித்து தொழும் தொழுகையை விட ஜமாத்தாக தொழும் தொழுகை 27 மடங்கு அந்தஸ்தாள் சிறந்தது. நூல் - புகாரி - 618, முஸ்லிம் - 650
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதாவது ஒரு ஊரில் அல்லது ஒரு பள்ளத்தாக்கில் மூன்று பேர்கள் இருந்து அந்த இடத்தில் தொழுகை ஜமாத்தாக நிறைவேற்றப்படவில்லை என்றால் அவர்களை சைத்தான் சூழ்ந்து கொல்கிறான் எனவே ஜமாத்தை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் ஏனெனில் தனித்து தூரமாக நிற்கும் ஆட்டையே ஓநாய் சாப்பிடும். நூல் - அபூதாவூத் - 547, இப்னு ஹிப்பான் - 425.
ஜமாத்து தொழுகையை விடுவதற்கு அனுமதிக்கப்பட்ட தங்கடங்கள்
💙ஜமாத்து தொழுகையை விடுவதற்கு பொதுவான காரணங்களும் குறிப்பான காரணங்களும் உள்ளது
⭐ - பொதுவான காரணங்கள்.
01 - கடும் மழை இரவு நேரத்தில் பலமான காற்று அல்லது பாதையில் கடுமையான சேறு ஆகியவை இருப்பதனால் ஜமாத்துக்கு செல்வதற்கு முடியாவிட்டால் அது குற்றமாகாது.
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது கடும் குளிரும் காற்றும் உள்ள இரவிலே தொழுகைக்கு அதான் சொல்லப்பட்டது அந்த அதானிலே வீடுகளிலே தொழுது கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டது மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அதான் சொல்லக்கூடியவருக்கு கடுமையான குளிர் மற்றும் மலையுடைய இரவிலே பாங்கு சொல்லும் போது "அலா சொல்லூ பீ ரிஹாலிக்கும்" உங்களுடைய வீடுகளிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள் என்று சொல்லும்படி ஏவினார்கள். நூல் - புகாரி - 635, முஸ்லிம் - 697.
⭐ - குறிப்பான ( தனிப்பட்ட) காரணங்கள்.
01 - நோய்.
02 - கடும் பசி.
03 - கடுமையான தாகம்.
04 - அநியாயக்காரனை விட்டும் தன்னை அல்லது தன்னுடைய சொத்தை பயப்படுவது.
05- மலஜலம் தட்டிக் கொண்டிருக்கும் நிலைமை.
👉இந்த நிலைமைகளில் ஜமாத்தை விடுவதற்கு அனுமதி உண்டு.
💬நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவருக்கு இரவு சாப்பாடு வைக்கப்பட்டால் மேலும் தொழுகைக்கும் இகாமத் சொல்லப்பட்டால் இரவு சாப்பாட்டை கொண்டு ஆரம்பிங்கள் அதில் இன்னும் முடியும் வரைக்கும் அவசரப்பட வேண்டாம். நூல் - புகாரி 643, முஸ்லிம் 559.
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் உணவு தயாராக உள்ள நிலைமையில் மேலும் மலஜலம் தட்டிக் கொண்டிருக்கும் நிலைமையில் தொழுகை இல்லை. நூல் - முஸ்லிம் - 560.
06 - கடனாளியை பற்றிப் பிடித்துக் கொள்ளுதல்.
07 - வெறுக்கத்தக்கும் வாடையுடைய உணவை சாப்பிடுதல்.
08 - ஊத்தையான ஆடையை அணிந்திருத்தல்.
09 - நாற்றம் வீசக்கூடிய ஆடை அணிந்திருத்தல்.
இமாமை பின்பற்றக் கூடியவர் கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகள்
01 - இமாமுடைய தொழுகை பாத்தில் என்பதை அறியாமல் இருக்க வேண்டும் அல்லது தொழுகை பாத்தில் இல்லை என்பதை உறுதி கொண்டிருத்தல்.
👉உதாரணமாக - இரண்டு பேரு கிப்லாவின் திசையை தேடி அதில் ஒருவர் ஒரு திசையையும் மற்றவர் இன்னொரு திசையையும் உறுதி கொண்டால் அவ்விருவரும் ஒருவர் மற்றவரைப் பின்பற்றுவது கூடாது.
02 - இமாம் கிராத் ஓத தெரியாதவராக இல்லாமல் இருக்க வேண்டும் பின்பற்றக் கூடியவர் ஓதக்கூடியவராக இருக்கும்போது.
03 - இமாம் பெண்ணாக இல்லாமல் இருக்க வேண்டும் பின்பற்றக் கூடியவர் ஆணாக இருக்கும் போது.
👉பின்பற்றக் கூடியவரும் ஒரு பெண்ணாக இருந்தால் ஒரு பெண்ணுக்கு இமாமாக தொழுவிக்க ஏழும்.
💬ஒரு ஆணுக்கு ஒரு பெண் இமாமாக ஆக மாட்டாள் என நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறினார்கள். நூல் - இப்னுமாஜா.
இமாமாக வரக்கூடிய ஒருவருக்கு இருக்க வேண்டிய சுன்னத்தான வரணறைகள்
01 - ஒரு கூட்டத்தாருக்கு இமாமாக வரக்கூடியவர் அந்த கூட்டத்தார்களை விட மிகவும் மார்க்கம் படித்தவராகவும்,
02 - குர்ஆனை ஓதத் தெரிந்தவராகவும்,
03 - அவர்களில் நல்லவராக இரத்தல் வேண்டும்,
04 - அவர்கள்ல் மிக வயதானவராக இருத்தல் வேண்டம்.
💬நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது ஒரு கூட்டத்தாருக்கு அவர்களின் மிகவும் குர்ஆனை ஓதத் தெரிந்தவர் இமாமாக வரட்டும் குர்ஆன் ஓதும் விஷயத்திலே அவர்கள் சமமாக இருந்தால் சுன்னத்தை பின்பற்றக் கூடியவர்கள் மிக அறியப்பட்டவர் இமாமாக வரட்டும் மேலும் சுன்னத்தை பேணுவதில் அவர்கள் ஒன்றாக இருந்தால் ஹிஜ்ரத்தால் முந்தியவர்கள் இமாமாக வரட்டும் மேலும் ஹிஜ்ரத்தில் முந்தியவர்கள் ஒன்றாக இருந்தால் அவர்களில் வயதால் மூத்தவர் இமாமத் செய்யட்டும். நூல் - முஸ்லிம் - 613.
குறிப்பு - 01 - தயமம் செய்து தொழும் இமாமை வுழூ செய்த ஒருவர் பின்பற்றுவது கூடாது,
02 - மேலும் காலணிக்கு மச்கு செய்த ஒருவரை முழுமையாக வுழூ செய்த ஒருவர் பின்பற்றுவது கூடாது,
03 - உட்கார்ந்து தொழுவிக்கும் ஒருவரை நின்று தொழக்கூடிய ஒருவர் பின்பற்றுவது கூடாது,
04 - சிறிய வயதுடையவரை வயது வந்தவர்கள் பின்பற்றுவது கூடாது,
05 - அடிமையை ஒரு சுதந்திரவாதி பின்பற்றுவது கூடாது,
06 - சிறுநீர் நோய் இருக்கக் கூடியவரை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் ஒருத்தர் பின்பற்றுவது கூடாது,
07 - கலா தொழக்கூடிய ஒருத்தரை அதாவாக நிறைவேற்றும் ஒருவர் பின்பற்றுவது கூடாது,
08 - சுன்னத்து தொழும் ஒருவரை ஃபர்ழ் தொழக்கூடிய ஒருத்தர் பின்பற்றுவதும் கூடாது.
இமாமை பின்பற்றும் முறை
💗 ஒரு இமாமை ஒரு மஃமூம் பின்பற்றுவதாக இருந்தால் அதற்கு சில நிபந்தனைகளும் சில முறைகளும் உள்ளது அவை பின் வருமாறு 👇👇👇
01 - இமாமைக்கான மஃமூம் இடத்தால் முந்தாமல் இருக்க வேண்டும்.
👉 அவ்வாறு ஒருவர் வேண்டுமென்று முந்தினால் பின்பற்றுதல் பாத்திலாகிவிடும் அவர்களுடைய தொழுகை பாத்தில் ஆக மாட்டாது ஜமாத் உடைய நன்மை கிடைக்க மாட்டாது.
👉 இமாமை பின்பற்றுவது என்பது இமாமுக்கு பின்னால் நின்று அவரைப் பின்பற்றுவதாகும்.
👉 மேலும் இமாமோடு சமமாக நின்றால் அது மக்ரூஹாகும் என்றாலும் ஜமாத்து நிறைவேறும் மேலும் இமாமுக்கு கொஞ்சம் பின்னால் நிற்பது சுன்னத் ஆகிறது யார் இமாமை காண முந்துகிறாரோ அவருடைய தொழுகை பாத்தில் ஆகிவிடும்.
💚 பிண்ணுக்காகுதல் அல்லது முந்துதல் என்பது இமாமுடைய கரண்டை காலை வைத்து கவனிக்கப்படும் கரண்டைக்காலை காண பிந்தினால் போதுமானது.
👉 இமாம் மஃமூன்கள் இரண்டு பேர் அல்லது அதிகமானவர்கள் இருந்தால் இமாமுக்கு பின்னால் நேராக நிற்பார்கள் அல்லது மஃமூம் ஒருவராக இருந்தால் இமாமின் வலது பக்கமாக நிற்பார் இரண்டாமவர் வந்தால் அவர் இமாமுடைய இடது பக்கம் நிற்பார் பின்பு ஒன்றில் இமாம் முன்னுக்காகுவார் அல்லது இரண்டு மஃமூங்களும் பின்னுக்காகி நேராகி நிற்பார்கள்.
💬ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வலது பக்கமாக நின்று தொழுது கொண்டிருந்தேன் அப்போது ஜாபீர் இப்னு சஹ்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இடது பக்கமாக நின்று தொழுதார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை இருவரையுமே பிடித்து அவர்களுக்கு பின்பக்கமாக நிப்பாட்டினார்கள்.முஸ்லிம்
⭐ - இமாமுக்கும் மஃமூமுக்கும் இடையில் மூன்று முழங்கலை காண அதிகமாகாமல் இருப்பது சுன்னத் ஆகும்.
👉 மூன்று முழங்கள் என்பது கிட்டத்தட்ட 50 CM சென்றி மீட்டர்கள் ஆகும்.
👉 மேலும் இவ்வாறு இரண்டு சப்புகளுக்கு இடையிலும் இருப்பது சுன்னதாகும்.
💚 ஒரு ஜமாத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டால் இமாமுக்கு பின்னால் ஆண்களுடைய சப்பும் ஆண்களுடைய சப்புகளுக்கு பின்னால் பெண்களுடைய சப்பும் வருவது சுன்னதாகும்,
💚 அல்லது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இமாமுக்கும் பின்னால் மஃமூமாக இருந்தால் ஆண் இமாமின் வலது பக்கமாக நிற்பார் பெண் அந்த ஆணுக்குப் பின்னால் நிற்பால்.
💗 பெண்கள் மாத்திரம் உள்ள ஒரு ஜமாத்தாக இருந்தால் பெண்களுக்கு தொழுவிக்கக்கூடிய இமாமாகிய அந்தப் பெண் அவர்களுக்கு நடுவிலே நிற்பார் இந்த செய்தி 💬ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் - பைஹக்கி
👉 மேலும் ஒரு மஃமூம் தனித்த நிலைமையில் தனிய ஒரு ஸப்பில் நிற்பது மக்ரூஹாகும் எனவே அவர் முன் ஸப்பில் இடைகள் இருந்தால் அதிலே நுழைந்து கொள்வார் அவ்வாறு இடைகள் இல்லாவிட்டால் முன்சப்பில் இருக்கக் கூடிய ஒரு மனிதரை பின்னால் இழுத்துக் கொள்வார் எனவே அவ்வாறு இழுக்கப்படக்கூடிய ஒருவர் அவர் அதற்காக வேண்டி உதவி செய்து அவரோடு பின்னுக்கு வந்து நேராக நின்று ஜமாத் உடைய நன்மையை அவரும் அடைந்து கொள்வதற்கு உதவி செய்வது சுன்னதாகும்.
02 - இமாமுடைய ஒவ்வொரு திரும்புதல்களிலும் தொழுகையில் செயல் ரீதியான அறுக்கான்களை இமாமோடு சேர்ந்து பின் துயர்வதும் கட்டாயமானதாகும்.
👉 இமாமுடைய செயலை காண மஃமூமுடைய செயல் கொஞ்சம் பிந்தி இருக்க வேண்டும்.
👉மேலும் இமாமுடைய செயலை காண ஒரு மஃமூம் ஒரு ருகூன் செய்யக்கூடிய அளவுக்கு பிந்தினாள் அது மக்ரூஹாகும்,
👉 அல்லது நீண்ட இரண்டு ருக்கூன்கள் செய்யக்கூடிய அளவுக்கு எந்த விதமான காரணமும் இல்லாமல் அவர் பிந்தினால் தொழுகை பாத்தில் ஆகிவிடும்.
💙 உதாரணமாக - ஒரு இமாம் ருகூஉ செய்து நிலைக்கு வந்து பின்பு சுஜூது செய்து சுஜூதிலிருந்து தலையை உயர்த்தும் வரைக்கும் மஃமூம் நின்று கொண்டே இருந்தால் எந்த காரணமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தால் தொழுகை பாத்திலாகிவிடும்.
💗 ஒருவேளை ஒருவர் ஒரு காரணத்துக்காக வேண்டி இமாமைக் காண பிந்தினாள் உதாரணமாக கிராத் ஓதுவதில் தாமதம் உள்ளவராக இருப்பவரைப் போல் அவருக்கு மூன்று ருகூன்களை காண இமாமை விட்டும் பிந்துவதற்கு முடியும் அதையும் காண அவர் தாமதமானால் அவர் ஓதிக் கொண்டிருப்பதை முழுமையாக விட்டு விட்டு இமாமை பின் துயர வேண்டும்,மேலும் விட்டதை பூர்த்தி செய்வதற்காக வேண்டி இமாமுடைய ஸலாத்துக்கு பின்னால் எழுந்து அவர் தொழுது தனது தொழுகையை பூர்தியாக்கிக் கொள்வார்.
03 - இமாமுடைய திரும்புதல்களை அறிந்திருத்தல்.
👉 இமாம் ஒவ்வொரு ருகூன்களையும் செய்யும்போது அதை பின்பற்றக் கூடியவருக்கு தெரிந்திருக்க வேண்டும் ஒன்று அவர் இமாமை பார்த்து செய்ய வேண்டும் அல்லது முன்னால் உள்ள சப்புகளை கவனித்து செய்ய முடியும் அல்லது எத்திவைக்கக்கூடியவருடைய சத்தத்தை கேட்டும் செய்ய முடியும் அவ்வாறின்றி முழுமையாக இமாமுடைய எந்தவிதமான செயல்பாடுகளும் விளங்கவில்லை என்றால் பின்பற்றுவது கூடாது.
04 - இமாமுக்கும் மஃமூமுக்கும் இடையில் பெரிய இடைவெலி இருக்கக் கூடாது.
👉 இமாமும் பின்பற்றும் மஃமூமும் ஒரே பள்ளியில் இருந்தால் நீண்ட இடைவெளி பிரச்சினையாகாது அவர்களுக்கிடையில் ஒரு கட்டிடம் வந்தாலும் அல்லது ஒரு ஜன்னல் வந்தாலும் பரவாயில்லை.
👉 மேலும் இமாமும் மஃமூமும் பள்ளிக்கு வெளியில் இருந்தால் அல்லது இமாம் பள்ளியிலும் மஃமூம் பள்ளிக்கு வெளியிலும் இருந்தால் அவர்களுக்கு இடையில் கிட்டத்தட்ட 300 முழங்கள் தூரத்தை காண அதிகமாகக் கூடாது 300 முழங்கல் எனும் பொழுது 150 மீட்டர்கள் கிட்டத்தட்ட கவனிக்கப்படும்.
⭐இமாமும் மஃமூம் இருவரும் பள்ளிக்கு வெளியில் தொழுதால் அங்கே கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள்.
👉 அதாவது ஒரு இமாமும் மஃமூூமும் ஒரு விசாலமான பாலைவனம் போன்ற ஒன்றில் தொழுதால் இமாமுக்கு மஃமூமுக்கும் இடையில் கிட்டத்தட்ட 300 முழங்கள் தூரத்தை காண அதிகமாகக் கூடாது 300 முழங்கல் எனும் பொழுது 150 மீட்டர்கள் கிட்டத்தட்ட கவனிக்கப்படும்.
👉இமாமும் மஃமூமும் ஒரே கட்டிடத்தில் இருந்தால் உதாரணமாக ஒரு வீட்டில் அல்லது இரண்டு கட்டிடங்களிலே அல்லது ஒருவர் பாலைவனத்திலும் ஒருவர் கட்டிடத்திலும் இருந்தால் அங்கு முன்னாள் சொல்லப்பட்ட நிபந்தனைகளோடு ஒரு சஃபில் இருந்து மற்ற சப் சேர்ந்திருப்பது நிபந்தனையாகும்.
👉இமாம் பள்ளிகுள்ளும் மஃமூம்களின் சிலர் பள்ளிக்கு வெளியிலும் இருந்தால் பள்ளி உடைய ஓரத்துக்கும் பள்ளிக்கு வெளியில் இருக்கும் மஃமூம்களின் முதலாவது சப்புக்கும் இடையில் 300 முழங்களை காண அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
05 - பின்பற்றக் கூடியவர் ஜமாஅத்தை அல்லது பின்பற்றுகிறேன் என்ற நிய்யத்தை வைப்பது கட்டாயம்.
👉பின்பற்றக்கூடியவர் தன்னுடைய இஹ்ராம் தக்பீரிலேயே "பின்பற்றுகிறேன்" அல்லது "ஜமாத்தாக தொழுகிறேன்" என்று நிய்யத்தை வைப்பது நிபந்தனையாகும்.
👉 ஒருவர் அந்த நிய்யத்தை வைக்காமல் இமாமுடைய ஒவ்வொரு திரும்புதல்களையும் செயல்களையும் பின் துயர்ந்தால் அந்த செயல்கள் நீண்ட நேரம் எதிர்பார்த்து இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அவருடைய தொழுகை பாத்திலாகிவிடும்.
👉 எனினும் இமாமை நிய்யத் வைக்காமல் பின்பற்றும்போது நீண்ட நேரம் எதிர்பார்க்க வேண்டிய தேவை வரவில்லை என்றால் சிறிய எதிர்பார்ப்புகள் மாத்திரம் இருந்தால் அந்த நேரத்தில் தொழுகை பாத்திலாக மாட்டாது.
👉 இமாமுக்கு நிய்யத்து வைப்பது ″நான் இமாமாக தொழுவிக்கிறேன்″ என்று நிய்யத்து வைப்பது கட்டாயம் இல்லை என்றாலும் அவருக்கு அவ்வாறு நிய்யத்து வைப்பது சுன்னதாகும் அவ்வாறு அவருக்கு நிய்யத்து வைக்காவிட்டால் இமாமுக்கு ஜமாத்துடைய நன்மை சிறப்பு கிடைக்காது நிய்யத்து வைத்தால் தான் அவருக்கு அந்த சிறப்பு கிடைக்கும்.
👉 மேலும் ஒரு மஃமூம் ஜமாத் உடைய சிறப்பை அடைந்து கொள்வதற்கு இமாம் சலாம் கொடுப்பதற்கு முன்னால் எந்த இடத்தில் சேர்ந்தாலும் ஜமாதுடைய நன்மையை அவர் அடைந்து கொள்வார்.
👉 மேலும் இமாமுடைய ருகூவில் மஃமூம் இமாமை எத்திக்கொண்டாள் அந்த முழு ரகாஅத்தையும் அடைந்து கொண்டவர் ஆவார் மேலும் இமாமுடைய ருகூஉக்குப் பின்னால் இமாமை சேர்ந்து கொண்டால் அந்த ரகாஅத்தை அவர் தப்ப விட்டு விட்டார் எனவே இமாம் ஸலாம் கொடுத்த பின்னால் அந்த ரகாஅத்தை மஃமூம் பூர்த்தி ஆக்கிக் கொள்ள வேண்டும்.
Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky
கருத்துகள் இல்லை