FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

தொழுகையின் மக்ரூஹுகள் - பாடம் -34

Share:

 


தொழுகையின் மக்ரூஹுகள்

💗 மக்ரோ என்றால் அதனை விடுவதனால் நன்மை கிடைக்கும் செய்வதனால் தண்டனை கிடைக்க மாட்டாது.

👉பொதுவான சட்டம் - தொழுகையில் சுன்னத்தாக இருக்கக்கூடிய ஒரு சுன்னத்துக்கு மாறு செய்வது அல்லது ஒரு சுன்னத்தை விடுவது மக்ரூஹ்  ஆகும்.

உதாரணமாக 👉 வஜ்ஜஹத்து ஓதுவது சுன்னத்து அதனை விடுவது மக்ரூஹாகும் இவ்வாறு தொழுகையில் உள்ள ஒவ்வொரு சுன்னத்துக்களையும் விடுவது அல்லது அதற்கு மாறு செய்வது மக்ரூஹாகும். 

தொழுகையில் செய்யக்கூடாத  சில மக்ரூஹுகள்

01 -  தொழுகையில் எந்தவிதமான தேவையும் இன்றி கழுத்தை திருப்பி அங்கும் இங்கும்  பார்த்தல்.

👉 தொழுகையில் கிப்லாவை விட்டும் நெஞ்சை திருப்பினால் தொழுகை பாத்திலாகிவிடும் ஆனால் கழுத்தை மட்டும் திருப்பினால் தொழுகை பாத்தில் ஆக மாட்டாது, ஒருவர் அவ்வாறு கழுத்தை திருப்பி முகத்தை திருப்பி அங்கும் இங்கும் பார்ப்பது மக்ரூஹாக்கப்பட்டுல்லது  அவர் அல்லாஹ்வுடைய தொடர்பை அவர் இலக்குகிறார் தொழுகையுடைய சிறப்பையும் நன்மைகளையும் அவர் இலக்குகிறார்.

💬 நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது ஒரு அடியானுடைய தொழுகையிலே அல்லாஹ் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் எப்பொழுது அந்த அடியான் திரும்புகிறானோ அல்லாஹ்வும் அவரை விட்டும் திரும்பி விடுகிறான்.
 நூல் - அபூதாவூத்.

👉 ஏதாவது ஒரு தேவைக்காக வேண்டி உதாரணமாக ஒரு எதிரியை கவனிப்பதற்காக வேண்டி திரும்பி பார்த்தால் அது மக்ரூகாகமாட்டாது.

ஆதாரம் 👉 சஹ்ல் இப்னு ஹன்லலிய்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் சுபஹுத் தொழுகைக்கு நின்டதன்  பின்னால்
ஷிஃபி என்னும் பக்கமாக திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் காரணம் ஷிஃபியின் பக்கமாக ஒரு குதிரை வீரரை இரவு நேரம் பாதுகாப்புக்காக வேண்டி அனுப்பி இருந்தார்கள் எனவே அந்த வீரரே கவனித்துக் கொண்டு இருந்தார்கள். நூல் - அபூதாவூத் 916

👉மேலும் ஓரக்கண்ணால்  பார்ப்பது பரவாயில்லை.

💬  அலி இப்னு ஷைபான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்து  எங்களோடு தொழுதார்கள் அந்த நேரத்தில் ஒருவர் தனது ருக்குவையும் சுஜூதையும் சரியாக செய்யாத ஒரு மனிதரை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓரக்கண்களால் பார்த்தார்கள் மேலும் கூறினார்கள் யாரு தன்னுடைய முதுகை நிமித்த வில்லையோ அவருக்கு தொழுகை இல்லை அதாவது ருகூவில் யாரு தாமதிக்கவில்லையோ அவருக்கு தொழுகையில்லை என்ற கருத்து பட ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்- இப்னு ஹிப்பான்

02 - தொழுகையில்  வானத்தின் பக்கம் பார்வையை உயர்த்துவது.

💬அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சில கூட்டத்தார்கள் அவர்களுடைய தொழுகையிலே வானத்தின் பக்கம் பார்வையை உயர்த்துகிறார்கள் இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது? அவர்கள் அதை நிறுத்திக் கொள்ளட்டும் அல்லது அவர்களுடைய பார்வை பறிக்கப்படட்டும். நூல் - புகாரி 717

03 - தொழுகையில் முடிகளை பிடிப்பது ஆடையின் ஓரங்களை மடித்தல்.

👉 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நான் ஏழு உறுப்புக்களின் மீது சுஜூது செய்வதையும் மேலும் ஆடைகளையும் முடிகளையும் பிடிக்காமல் இருப்பதையும் ஏவப்பட்டேன். நூல் - புகாரி 777.



தொழுவது மக்ரூஹ் ஆகும் சந்தர்பங்கள்

01 - உணவு சமூகமாக இருக்கும் நேரத்தில் தொழுவது.

👉 அதாவது நல்ல பசியோடு இருக்கும்போது உணவும் தயாராகி இருக்கும் நேரத்தில் உள்ளம் உணவின் பக்கம் தேவை காணுகிறது இந்த சமயத்தில் தொழுகைக்கு போவது மக்ரூஹாகும் அவ்வாறு தொழுகைக்கு அவர் சென்றார் அவருடைய தொழுகையில் பேணுதலும் இரையச்சமும் உள்ளத்தை ஒருமைப்படுத்துவதும் இல்லாமல் போய்விடும்.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது உங்களில் ஒருவருக்கு இரவு சாப்பாடு வைக்கப்பட்டால் மேலும் தொழுகையும் நிலை நாட்டப்பட்டால் நீங்கள் சாப்பாட்டை கொண்டு ஆரம்பிய்யுங்கள் அது முடியும் வரைக்கும் நீங்கள் அவசரப்பட வேண்டாம். நூல் - புகாரி 642, முஸ்லிம் 559.

02 - மலம் ஜலம் தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் தொழுதல்.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்  உணவு சமூகமாக இருக்கும் நேரத்தில் தொழுகை இல்லை மேலும் மலம் ஜலம் தட்டிக் கொண்டிருக்கும் நேரத்திலும் தொழுகை இல்லை.  நூல் - முஸ்லிம் 560

👉 மேலும் சிரு தூக்கம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் தொழுவது மக்ரூஹாகும்.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பதாவது உங்களில் ஒருவருக்கு சிறு தூக்கம் ஏற்பட்டால் அவருக்கு தூக்கம் அவரை விட்டும் செல்லும் வரைக்கும் படுத்துக் கொள்ளட்டும் அவ்வாறின்றி சிறு தூக்கத்தோடு அவர் தொழுதால் ஒருவேளை அந்த தொழுகை பாத்திலாகி விடும் எனவே அவர்  பாவமன்னிப்பு தேடி கொள்ளட்டும் மேலும் தனக்கு தானே ஏசி கொள்ளட்டும். நூல் - முஸ்லிம்


தொழுவது மக்ரூகாக்கப்பட்ட இடங்கள்


💚குளியலறை, 
💚மனிதர்கள் நடமாடும் பாதையோரம், 
💚சந்தை, 
💚கபர்ஸ்தான், 
💚கோயில், 
💚குப்பைத்தொட்டி, 
💚ஒட்டகம் கட்டும் இடம்.

மேல்கூறப்பட்ட இடங்களில் தொழுவதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள் ஆதாரம் - திருமதி - 346


பெண்கள் தொழுகையில் ஆண்களுக்கு  வித்தியாசமாகு் இடங்கள்

01 - சுஜூதில் முழங்கைகளை விழாவோடு சேர்த்துக் கொள்ளுதல் வயிற்றை தொடையோடு சேர்த்து ஒடுக்கமாக தொழுதல்.

👉இந்த இடத்தில் ஆண்கள் அவைகளை பிரித்து அகட்டி வைப்பது சுன்னதாகும்.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  தொழுது தொழக்கூடிய இரண்டு பெண்களுக்கருகாமையால் நடந்து சென்றார்கள் அப்போது நீங்கள் இருவரும் உங்களுடைய உடம்பை பூமியோடு  சேர்த்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களைப் போன்று அல்ல என்று கூறினார்கள். நூல் - பைஹக்கி 2/232

02 - சப்தமாக ஓதக்கூடிய தொழுகையில் பெண்கள் தங்களுடைய சத்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.

👉ஏனைய ஆண்களுக்கு முன்னால் சத்தத்தை உயர்த்தி ஓதக்கூடாது இவ்விடத்தில் ஆண்கள் சப்தமாக ஓதும் தொழுகையுடைய இடங்களிலே அவர்கள் சப்தமாக ஓதுவது ஆண்களுக்கு சுன்னதாகும்.

03 - தொழுகையில் இமாமுக்கு ஏதேனும் தவறு விடுபட்டால் மஃமூமாக இருக்கக்கூடிய பெண்கள் அதனை இமாமுக்கு உணர்ச்சி ஊட்டுவதற்கு தங்களுடைய இடது கையின் மீது வலது கையை தட்டுவார்கள்.

👉இவ்விடத்தில் மஃமூமாக ஆண்கள் இருந்தால் தொழுகையில் இமாம் விடக்கூடிய ஒரு தவறை உணர்த்தி விடுவதற்கு தஸ்பீஹ் சொல்லுவார்கள்.

💬 ஒருவர் தொழுகையில் ஏதாவது ஒன்றை மறந்து விட்டால் தஸ்பீஹ் சொல்லவும் தஸ்பீஹ் சொல்லப்பட்டால் அவர் அந்த இடத்துக்கு திரும்பவும் நிச்சயமாக கைதட்டுதல் என்பது அது பெண்களுக்குரியது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்ஹு அவர்கள
அறிவிக்கிறார்கள். நூல் - முஸ்லிம்

04 - பெண்ணுடைய முகத்தையும் இரண்டு மணிக்கட்டையும் தவிர முழு உடம்பும் தொழுகையில் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும்.

 👉ஒரு பெண் தொழுகையில் அவலுடைய தலையும் மறைக்கும் ஆடையுடனும் மேல் சட்டையுடனும் தொழுகிறாள் கீழ் ஆடை பாவாடை இல்லாத நிலைமையில் அவருடைய தொழுகையின் நிலைமை என்ன❔ என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கப்பட்டது  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அவருடைய மேல் சட்டை கால் உடைய வெளிப்பகுதி வரைக்கும் மறைக்க கூடிய அளவுக்கு நீட்டமாக இருந்தால் போதுமானது.  நூல் - அபூதாவூத்
அறிவிப்பாலர்- உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா.

👉 ஆனால் ஒரு ஆணுடைய தொழுகையில் மறைக்கப்பட வேண்டிய பகுதி அவனுடைய தொப்புளுக்கும் முழங்காலுக்கும் மத்தியில் இருக்கக்கூடிய பகுதிகலாகும்.

05 -  பெண்களுடைய தொழுகைக்கு அதான் சுன்னதில்லை.

👉மேலும் இக்காமத் சுன்னத்தாகும் அதேபோல் தாழ்ந்த சத்தத்தில் அதான் சொன்னால் மக்ரூவாகவும் மாட்டாது உயர்ந்த சத்தத்தில் அதான் சொன்னால் மக்ரூத் ஆகும் மேலும் பித்னா  பயப்படப்பட்டால் அது ஹராமாகும்
இவ்விடத்தில் ஆண்கள் அவர்களுடைய தொழுகைக்காக வேண்டி சப்தமாக அதான் சொல்லுவது சுன்னதாகும்.


  Writer -  Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை