தொழுகையின் சுன்னத்துக்கள்
💙தொழுகைக்கு முன்னால் நிறைவேற்றப்பட வேண்டிய சுன்னத்துக்கள்💙
01 - அதான் சொல்லுதல்.
02 -இகாமத்து சொல்லுதல்.
03 - தொழும் இடத்துக்கு முன்னால் ஒரு (சுத்ரா) ஒன்றை எடுத்துக் கொள்ளுதல்.
👉 "சுத்ரா" என்பது நடந்து போகக் கூடியவர் தொழுகையாளிக்கு முன்னால் செல்வதை இஸ்லாம் தடுத்துள்ளது எனவே நடந்து போகக் கூடியவர்களுக்கு உணர்ச்சி ஊட்டும் முகமாக சுஜூது செய்யக்கூடிய இடத்துக்கு நெருக்கமாக ஒரு கம்பு அல்லது முஸ்ஸலா அல்லது ஒரு கோடையாவது கீருவதுக்கு "சுத்ரா" எனப்படும்,மேலும் தொழக்கூடியவர் தாப்பை,சுவரு,தூன் போன்றவற்றுக்கு முன்னால் நெருக்கமாக தொழுவது சிரந்தது.
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பெருநாள் தொழுகைக்காக வேண்டி வெளியானால் ஒரு சிறிய ஈட்டி போன்ற ஒன்றை அழைத்து தனக்கு முள்ளால் வைத்துக் கொள்வார்கள் மேலும் மக்கள் அவருக்கு பின்னால் நின்று தொழுவார்கள் இவ்வாறு பிரயாணத்தின் போதும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
நூல் - புகாரி - 472 , முஸ்லிம் - 51
அறிவிப்பாளர் - இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு.
💙தொழுகைக்கு உள்ளால் இருக்கக்கூடிய சுன்னத்துக்கள் இரண்டு வகையாக பிரிகிறது💙
01 - அப்ஆழ் சுன்னத்து
👉அப்ஆழ் சுன்னத் என்றால் அந்த சுன்னத்தை விடுவதின் மூலமாக தொழுகையின் இறுதியில் சஜதா சஹ்வு செய்து அந்த விடுபட்டதை பூர்த்தி செய்ய வேண்டும்.
02 - ஹைஆத் சொன்னத்து
👉 ஹைஆத் சுன்னத்து என்றால் மறதியாகவோ அல்லது வேண்டுமென்றோ அந்த சுன்னத்துக்களில் ஒன்று விடுபட்டால் அதனை சுஜூது செய்து பூர்த்தியாக்க வேண்டிய அவசியம் இல்லை.
01 - அப்ஆழ் சுன்னத்துக்கள்
01 - முதலாவது அத்தஹியாத் ஓதுதல்.
02 - முதலாவது அத்தகையத்துக்கு பிண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்.
03 - முதலாவது அத்தகைய ஆத்துக்கு உட்காருதல்.
👉 மேற்கூறப்பட்ட அடிப்படையில் பார்க்கும்போது ஒரே இடத்தில் தனித்தனி மூன்று சுன்னத்துகள் உள்ளது ஒன்று அத்தகையாத்துக்கு உட்காருதல் இரண்டு அத்தகையாத்து ஓதுதல் மூன்று அத்தகையாத்தின் இறுதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்.
04 - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் மீது இறுதி அத்தகையத்தில் சலவாத்து ஓதுதல்.
05 - குனூ ஓதுதல்.
👐சுபஹ் உடைய இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்ததற்கு பின்னால் குனூத் ஓதுதல்.
👐 ரமலானுடைய அரைவாசிக்கு பின்னால் வித்ரு உடைய இறுதி ரக்அத்தில் குனோத் ஓதுதல்.
👐 குணத்துன் நாஸிலா சோதனைகளின் போது ஓத வேண்டிய குனூத் ஒவ்வொரு தொழுகையின் கடைசி ரக்அத்திலும் ஓதுதல்.
💬அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துன்யாவை விட்டும் பிரியும் வரைக்கும் சுபஹு தொழுகையிலே குனூத்து ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.
நூல் - அஹமத்
💬 அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹில் குனூத் ஓதினார்களா என்று கேட்கப்பட்டது அதற்கு ஆம் என்று கூறினார்கள் ருக்கு முன்னால ஓதினார்களா என்று கேட்கப்பட்ட போது ருகூக்கு பின்னால் லேசாக ஓதுவார்கள் என்று பதில் கூறினார்கள். நூல் - புகாரி 956, முஸ்லிம் - 677.
💬 ஹசன் இப்னு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வித்ரு தொழுகையிலே ஓதக்கூடிய ஒரு குனூத்தை எனக்கு கற்றுத் தந்தார்கள்.
முழு குணூத்துடைய முறை👇👇👇
اللهم اهدني فيمن هديت، وعافني فيمن عافيت، وتولني فيمن توليت، وبارك في فيما أعطيت، وقني شر ما قضيت، إنك تقضي ولا يقضي عليك، وإنه لا يذل من واليت، ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت
நூள் - அபூ தாவுத் - 1425
💬 அபூஹூரைரா ரலியல்லாஹு அன்பு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹு தொழுகையுடைய இரண்டாவது ரக்காத்திலே ருகூவில் இருந்து தலையை உயர்த்தினால் இரண்டு கைகளையும் உயர்த்தி பின்வரும் துவாவை ஓதுவார்கள்.
اللهم اهدني فيمن هديت، وعافني فيمن عافيت، وتولني فيمن توليت، وبارك في فيما أعطيت، وقني شر ما قضيت، إنك تقضي ولا يقضي عليك، وإنه لا يذل من واليت، ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت
فلك الحمد على ما قضيت، نستغفرك اللهم ربنا ونتوب إليك، وصلى الله على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. للأخبار
الصحيحة في الصلاة على النبي - صلى الله عليه وسلم
முஃனல் முஹ்தாஜ் ஒன்னாம் பாகம் 166 , 177
குறிப்பு - குனூத் ஓதும் போது இரண்டு கைகளையும் உயர்த்தி அதனுடைய உள்பக்கத்தை வானத்தின் பக்கம் ஆக்கிக் கொள்வது சுன்னதாகும்.
02 - ஹைஆத் சொன்னத்து
01 - இரண்டு கைகளையும் உயர்த்தி கட்டுதல்.
கைகளை உயர்த்தக்கூடிய இடங்கள்
👉இஹ்ராம் தக்பீரின் போதும் ருக்கு செய்யும் போதும் ருகூவில் இருந்து எலும்பும் போதும் முதலாவது அத்தஹிய்யாத்தில் இருந்து நிலைக்கு எழும்பும்போதும்.
கையை உயர்த்தக்கூடிய சுன்னத்தான முறை
👉இரண்டு கைகளையும் இரண்டு கைகளுடைய மணிக்கட்டையும் கிபிலாவின் பக்கம் திருப்பியவராக விரல்களை பிரித்து இரண்டு காது சோனைகளுக்கும் நேராக பெருவிரல்கள் வரக் கூடிய நிலைமையில் இரண்டு கைகளையும் நன்றாக விரித்து தோல் புயத்துக்கு நேராக உயர்த்த வேண்டும்.
💬 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தொழுகையை ஆரம்பிப்பதை நான் கண்டேன் அந்த நேரத்தில் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லும்போது இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள் அவ்விரண்டையும் தோள்கட்டுக்கு நேராக வைத்தார்கள் மேலும் ருகூவுக்கு போகும்போதும் அவ்வாறு கையை உயர்த்தினார்கள் மேலும் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்லும் போதும் அதாவது நிலைக்கு வரும்போதும் கையை உயர்த்தினார்கள் மேலும் சுஜூதுக்கு செல்லும் போது அதேபோல சுஜூதில் இருந்து தலை உயர்த்தும்போது இவ்வாறு செய்யவில்லை.
நூல் - புகாரி 750, முஸ்லிம் 390.
02 - இடது கையின் மீது வலது கையை வைத்தல்.
👉 தக்பீர் கட்டும் போது நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் மத்தியில் உள்ள பகுதியில் இடது கையை வைத்து அதற்கு மேல் பகுதியில் வலது கையை வைக்க வேண்டும் மேலும் வலது கையின் விரல்களால் இடது கையை பொத்தி பிடிக்க வேண்டும்.
💬 வாயில் இப்னு ஹுஜுர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்குள் நுழையும் போது கையை இரு கைகளையும் உயர்த்தி பின்பு இடது கையின் மீது வலது கையை வைக்கக் கூடியவர்களாக நான் கண்டேன்.
நூல் - முஸ்லிம் - 41.
03 - சுஜூதுடைய இடத்தை பார்த்தல்.
👉ஒருவர் சுஜூது செய்யும் போது அவருக்கு சூல உள்ளவைகளை பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது, மேலும் மேலே பார்ப்பதும் கீழே பார்ப்பதும் அவருக்கு முன்னால் இருக்கக்கூடிய ஒரு வஸ்துவை பார்த்துக் கொண்டிருப்பதும் மக்ரூஹாக்கப்பட்டுள்ளது, எனவே சுஜூது செய்யக்கூடிய இடத்தை பார்ப்பது சுன்னத் ஆகும்.
👉 அதேபோல் அத்தகையாத்தில் இருக்கும் போது வலது கையுடைய ஆள்காட்டி விரலை பார்ப்பது சுன்னதாகும்.
04 - தக்பீருக்குப் பின்னால் வஜ்ஜகத்து ஓதுவது சுன்னத் ஆகும்.
👉 வஜ்ஜகத்துடைய முழுமையான முறை முஸ்லிம்மில் பதிவு செய்யப்பட்டுள்ளது 871 அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்காக வேண்டி எழுந்தாள் வஜ்ஜகத்து
وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً وما أنا من المشركين، إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين
💗வஜ்ஜகத்து ஓதக்கூடிய இடம்.
👉 சுன்னத்தான தொழுகையா இருந்தாலும் ஃபர்லான தொழுகையாக இருந்தாலும் தனித்து தொழக்கூடியவராக இருந்தாலும் அல்லது ஒரு இமாமை பின்பற்றக் கூடியவராக இருந்தாலும் அல்லது இமாமாக இருந்தாலும் சூரத்துல் பாத்திஹாவை ஆரம்பிப்பதற்கு முன்னால் ஓத வேண்டும், அஊது அல்லது பிஸ்மில் சொல்லி விட்டால் திரும்ப வஜ்ஜகத்து ஓத வேண்டிய கட்டாயம் இல்லை.
👉 மேலும் ஜனாஸா தொழுகையில் அல்லது நேரம் நெருக்கடியாக இருக்கக்கூடிய பர்லான தொழுகையில் வஜ்ஜகத்து ஓதுவது சுன்னத் இல்லை.
05 - சூரத்துல் பாத்திஹா ஓதுவதற்கு முன்னால் அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று ஓதிக் கொள்வது சுன்னதாகும்.
06 - தொழுகையில் ரகசியமாக ஓத வேண்டிய இடத்தில் ரகசியமாகவும் பகிரங்கமாக ஓத வேண்டிய இடத்தில் பகிரங்கமாகவும் சூரத்துகளை ஓதல்.
💚 சப்தமாக ஓத வேண்டிய தொழுகைகள்💚
💛 சுபஹுத் தொழுகையுடைய இரண்டு ரக்அத்தும்,
💛 மஃரிபு மற்றும் இஷா தொழுகையுடைய முதலாவது இரண்டு ரக்அத்தும்,
💛ஜும்மாவுடைய தொழுகையில்,
💛 இரண்டு பெருநாள் தொழுகைகள்,
💛 மேலும் சந்திர கிரகண தொழுகை,
💛 மலைத்தேடி தொழும்போது,
💛 தராவீஹ் தொழுகை,
💛 ரமலான் மாதத்தில் வித்ரு தொழுகை ஆகிய தொழுகைகளில் ஓதலை சத்தமாக வெளிப்படையாக ஓதுவது சுன்னத் ஆகும்.
07 - ஃபாத்திஹா சூரா முடிந்ததற்கு பின்னால் ஆமீன் சொல்லுதல்.
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உங்களில் யாராவது தொழுகையில் ஆமீன் கூறினால் மலக்குமார்களும் வானத்தில் ஆமீன் என்று கூறுகிறார்கள் எனவே உங்களுடைய ஆமீனும் மலக்குமார்களுடைய ஆமீனும் ஒன்று பட்டுவிட்டால் உங்கள் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
நூல் - புகாரி 748, முஸ்லிம் 410,
அறிவிப்பாளர் - அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.
08 - சூரத்துல் பாத்திஹா ஓதியதற்கு பின்னால் குர்ஆனிலிருந்து ஏதாவது ஒரு சூராவை அல்லது ஏதாவது ஒரு ஆயத்தை ஓதுதல்.
👉 தொழுகைகளுடைய முதலாவது இரண்டு ரக்அத்துகளிலும் ஃபாத்திஹா சூரா ஓதியதற்கு பின்னால் ஆகக் குறைந்தது தொடரான மூன்று ஆயத்துக்களையாவது ஓதுவது சுன்னதாகும்.
👉 சுபஹிலும் ழுஹரிலும் திவாலுல் முபஸ்ஸல் எனும் பகுதியை ஓதுவது சுன்னத்து அஸரிலும் இஷாவிலும் அவ்சாத்துல் முபஸ்ஸல் எனும் பகுதியை ஓதுவது சுன்னதாகும்,மஃரிபிலையும் கிசாருல் முபஸ்ஸல் எனும் பகுதியை ஓதுவது சுன்னதாகும்.
👉 மேலும் ஜும்மா உடைய சுபஹில் அலிப் லாம் சஜதாவை முதலாவது ரக்அத்திலும் இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் தஹ்ரையும் ஓதுவது சுன்னதாகும்.
09 - ஒவ்வொரு திரும்புதலின் போதும் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லுவது சுன்னத்தாகும்.
👉இஹ்ராம் தக்பீரின் பொழுது அல்லாஹு அக்பர் என்று சொல்வது ஒரு பர்லாகும் அங்கு கட்டாயம் சொல்ல வேண்டும் ஏனைய இடங்களில் சுன்னத்தாகும்.
👉அதேபோல் ருகூவில் இருந்து மேல் எழும்போது தக்பீருக்கு பதிலாக ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா லக்கல் ஹம்து என்று ஓதுவது சுன்னத் ஆகும்
10 - ருகூவிலும் சுஜூதிலும் சுப்ஹான ரப்பியல் அலீமி வபிஹம்திஹி மேலும் சுப்ஹான ரம்பியல் அஃலா வபிஹம்திஹி என்றும் மூன்று மூன்று முறைகள் ஓதுதல்.
11 - அத்தகிய்யாத்துடைய இறுப்புக்களில் உட்காரும்போது இரு தொடைகளின் மீதும் இரு கைகளையும் வைத்தல், மேலும் வலது கையுடைய ஆள்காட்டி விரலை நீட்டி ஏனைய வீரல்களை பொத்திக் கொள்ளுதல் அத்தகையாத்து ஓதி இல்லல்லா என்ற வார்த்தையை சொல்லும்போது ஆள்காட்டி விரலை உயர்த்துவது உயர்த்தி தொழுகையுடை இறுதி வரைக்கும் எந்த விதமான அசைவும் இல்லாமல் வைத்திருத்தல்.
12 - கடைசி அத்தகிய்யாத்தின்போது தவற்றுக் உடைய இருப்பில் இருப்பது ஏனைய நேரங்களில் இப்திராஷ் உடைய இருப்பில் இருப்பது.
👉தவற்றுக் உடைய இருப்பென்றால் ஒருவர் தன்னுடைய பித்தட்டை பூமியில் வைத்து உட்காருதல் மேலும் இடது காலை வலது காலுக்கு கீழால் கொண்டு வந்து வலது காலை நட்டி வைத்தல்.
👉 இப்திராஷ் உடைய இருப்பு என்றால் வலது காலை நட்டு வைத்து இடது காலின் மீது உட்காருதல்.
13 - ஸலவாத்துல் இப்ராஹீமியாவை அத்தஹியாத்தின் கடைசியில் ஓதிவிட்டு அதற்கு பின்னால் பின்வரும் துவாவையும் ஓதுவது சுன்னதாகும்.
14 - இரண்டாவது சலாம் கொடுத்தல்.
👉முதலாவது சலாம் கொடுப்பது கட்டாயம் இரண்டாவது சலாம் கொடுப்பது சுன்னதாகும் முதலாவது சலாம் கொடுக்கும் போது வலது பக்கம் திரும்ப வேண்டும் இரண்டாம் சலாம் கொடுக்கும்போது இடது பக்கம் திரும்ப வேண்டும்.
15 - தொழுகையுடைய எல்லா இடங்களையும் உள்ளச்சத்தோடு இருத்தல்.
👉நாவு ஓதக்கூடியதை உள்ளத்தில் நினைத்தவராக தன்னுடைய சிந்தனையை அல்லாஹ்வோடு தொடர்பு பட்டதாக ஆக்கி தொழுவது சுன்னதாகும்.
💚தொழுது முடிந்ததற்கு பின்னால் கவனிக்கப்பட வேண்டிய சுன்னத்துக்கள்💚
01 - இஸ்திஃபாரு, திக்ரு, துவா போன்றவற்றை ஓதல்.
👉 ஓதக்கூடிய துவாவையும் திக்ருகளையும் இமாமாக இருந்தால் சப்தமாக ஓதுவதில் எந்த ஒரு தடையும் இல்லை.
💬 இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவருடைய காலத்திலேயே மக்கள் தொழுகையில் இருந்து முடிந்ததற்கு பின்னால சத்தமாக திக்ர் வைப்பது இருந்தது என்று கூறினார்கள். நூல் - புகாரி 85, முஸ்லிம் 583.
33 முறை தஸ்பீஹும் 33 முறை தஹ்மீதும் 33 முறை தக்குபீரும் சொல்லல்
💬 கஃப் இப்னு உஜ்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஃபர்லான தொழுகைக்குப் பின்னாலும் 33 முறை தஸ்பீஹும் 33 முறை தஹ்மீதும் 33 முறை தக்குபீரும் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் நூறை பூருத்தி ஆக்குவதற்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று ஓதக்கூடியவர்களாக இருந்ததாக இன்னும் ஒரு அறிவிப்பிலே அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் முஸ்லிம் மேலும் அந்த ஹதீஸில் அவ்வாறு யார் ஓதுகிறாரோ அவருடைய எல்லா விதமான பாவங்களும் மன்னிக்கப்படும் கடல் நுரையளவு ஆகிருந்தாலும் அவைகள் மன்னிக்கப்படும் என்று கூறினார்கள்.
10 முறை ஜலாலா செய்தல்
لا اله الا الله عشر مرات
👉ஒவ்வொரு தொழுகைக்கும் பின் 10 முறை லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுவது சுன்னத்தாகும். நூல் - திர்மிதி, அறிவிப்பாலர் - இப்னு அப்பாஸ் றலியல்லாஹு
சுபஹு தொவுகைக்கு பின்னால் 10 முறை ஓதும் துஆ
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شئ قدير
👉யார் இந்த துஆவை சுபஹு தொழுகைக்குப் பின் 10 முறை ஓதுவாரோ அவருக்கு 10 நன்மைகள் எழுதப்படும் 10 பாவங்கள் மன்னிக்கப்படும் 10 அந்தஸ்துகள் உயர்தப்படும் வெருத்தக்க எல்லாவிடயங்களைவிட்டும் பாதுகாப்பாக ஆகிவிடும் மேலும் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாகவும் ஆகிவிடும். நூள் - திர்மிதி
👉மேலும் தொழுகைக்குப் பின்னால் ஓத வேண்டிய அத்கார்களும் துவாக்களும் மிக அதிகமாக உள்ளது எனினும் இவ்விடத்தில் வற்றுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.
02 - சுன்னத்து தொழுகைக்காக வேண்டி ஃபரல் தொழுகை இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு திரும்புதல்.
👉அவ்வாறு திரும்புவதன் மூலமாக நாங்கள் தொழக்கூடிய ஒவ்வொரு இடமும் எங்களுக்கு கியாமத்து நாளில் அது சாட்சி சொல்கிறது.
💬நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மக்களே நீங்கள் உங்களுடைய வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் நிச்சயமாக ஒரு மனிதனுடைய தொழுகைகளில் பர்லான தொழுகையைத் தவிர ஏனைய தொழுகைகள் வீட்டில் தொழப்படக்கூடிய தொழுகைகள் மிகச் சிறந்தது.
புகாரி - 698 முஸ்லிம் - 781
03 - பள்ளியில் தொழும் பொழுது பெண்கள் பின்னால் தொழுதால் அவர்கள் செல்லும் வரைக்கும் அந்த இடங்களிலே அமைதியாக இருத்தல்.
👉காரணம் பெண்களோடு சேர்ந்து எழுந்து செல்லும்போது அவர்களோடு கலப்பதால் பித்னாக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
💬 சலமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் பெண்கள் ஃபர்லான தொழுகைகளுக்கு பள்ளிக்கு வரக்கூடியவர்களாக இருந்தார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்கள் எழுந்து செல்வார்கள் அதுவரைக்கும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தரிபட்டு இருப்பார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்தால் அதற்குப் பின்னால் ஏனய ஆண்களும் எழும்புவார்கள்.
நூல் - புகாரி 828.
Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை