பாங்கு மற்றும் இகாமத்தின் சட்டம்
💚 பாங்கு (அதான்) என்பது பர்லான தொழுகைகளின் நேரங்கள் நுழைவதை அறிவிப்பதற்காக வேண்டி மார்க்கத்தில் கடமையாக்கப்பட்டுள்ள குறிப்பாக்கப்பட்ட சில திக்ருகளாகும்.
பாங்கின் சட்டம்
💚 ஒவ்வொரு சமூகம் அளித்திருக்கும் ஃபர்லான தொழுகை அல்லது தப்பி போன தொழுகைகளுக்கும் பாங்கு சொல்வது கட்டாயமான சுன்னத்தாக இருக்கிறது, ஜமாத்தாக ஒன்றாக தொழக்கூடிய தொழுகைக்கு "கிபாயா" அடிப்படையில் சுன்னத்தாக இருக்கிறது தனித்து தொழும் ஒருவருக்கு ஐநியாவின் அடிப்படையில் சுன்னத்தாக இருக்கிறது.
👉 பாங்கு என்பது இஸ்லாத்தின் அடையாளங்களில் ஒரு முக்கியமான ஒரு அடையாளமாக இருக்கிறது இஸ்லாத்துடைய அடையாளங்களை வெளியாக்க கூடிய ஒரு முக்கியமான ஒரு இடத்தில் இருக்கிறது.
குர்ஆன் ஹதீஸில் இருந்து பாங்கு காண ஆதாரம்
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
- (திருக்குர்ஆன் 62:9)
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்காக அதான் சொல்லட்டும் உங்களில் பெரியவர் உங்களுக்காக இமாமத் செய்யட்டும்.
நூல் - புகாரி 26, முஸ்லிம் 674.
👉 முதன்முதலாக பாங்கு கடமையாக்கப்பட்ட வருடம்?
ஹிஜ்ரி 01
பாங்கின் வார்த்தைகள்
الله اكبر الله اكبرالله اكبر الله اكبرأشهد ان لا اله الا الله أشهد ان لا اله الا اللهأشهد ان محمدا رسول الله أشهد ان محمدا رسول اللهحي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاحالله اكبر الله اكبر لا اله الا الله
💗 சுபஹு பாங்கின் முறை
حي على الفلاح حي على الفلاح க்குப்பின்
الصلاة خير من النوم என்று இரண்டு முறை கூரவேண்டும்.
பாங்கு சிகத்தாகுவதற்கான நிபந்தனைகள்
01 - முஸ்லிமாக இருத்தல்.
👉 ஒரு காஃபிரான ஒருவர் பாங்கு சொன்னால் அந்த பாங்கு சிகத்தாக மாட்டாது காரணம் அவர் வணக்க வழிபாட்டுக்கு தகுதியானவராக இல்லை என்பதால்.
02 - "தம்மீஸ்″ உடையவராக இருத்தல்.
👉 "தம்மீஸ்″ உடையவர் என்றால் தான் செய்யும் விடயம் என்னது என்ற தெழிவிருத்தல் ஒரு சிறுவர் ஒருவர் பாங்கு சொன்னால் அந்த பாங்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது காரணம் அவர் வணக்க வழிபாட்டுக்கு தகுதியானவராக இல்லை மேலும் நேரம் குறித்து அவருடைய அறிவு போதாமல் இருப்பதனால்.
03 - ஆணாக இருத்தல்.
👉 ஆண்களுக்கான ஒரு தொழுகைக்கு பெண்ணுக்கு அதான் சொல்ல முடியாது மேலும் ஆண்களுக்கு ஒரு பெண் இமாமாக வரவும் முடியாது.
04 - பாங்கு உடைய கலிமாக்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒழுங்கு முறைப்படி சொல்லுதல்.
05 - ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் மத்தியில் நேமமாக இருக்க வேண்டும் பெரிய இடைவெளி விடக்கூடாது.
06 - ஒரு கூட்டத்துக்காக வேண்டி அதான் சொல்வதாக இருந்தால் சத்தத்தை உயர்த்த வேண்டும்.
07 - நேரம் நுழைந்திருத்தல்.
👉 ஒவ்வொரு பர்ழு தொழுகையுடையவும் அதுக்கென்று ஒரு நேரம் இருக்கிறது அந்த நேரம் நுளைந்ததற்குப் பின்னால் அதான் சொன்னால்தான் அங்கு அதான் ஏற்றுக்கொள்ளப்படும் அதற்கு முன்னால் சொல்லப்படும் அதான் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது ஆனால் சுபஹு தொழுகைக்கு மட்டும் இரவின் நடுப்பகுதியில் இருந்து அதான் சொல்வது சுன்னத் ஆக உள்ளது.
👉 தனி ஒருவருக்காக வேண்டி அதான் சொல்வதாக இருந்தால் பள்ளி அல்லாத இடத்திலே சத்தத்தை உயர்த்துவது சுன்னத்து,
ஜமாத்து நடக்கக்கூடிய ஒரு பள்ளியிலே தனித்து தொழுவதற்காக வேண்டி அதான் சொன்னால் சத்தத்தை தாழ்த்துவது சுன்னத்து.
💬அபூ சஹீத் அல் குதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது நிச்சயமாக நீங்கள் ஆட்டையும் பள்ளத்தாக்குகளையும் விரும்பக் கூடியவராக இருக்கிறீர்கள் நீங்கள் ஆட்டுடன் அல்லது பள்ளத்தாக்கிலே இருக்கும்போது தொழுகைக்காக வேண்டி அதான் சொல்கிறீர்கள் எனவே உங்களுடைய அதானுடைய சத்தத்தை உயர்த்திக் கொள்ளுங்கள் ஏனெனில் நிச்சயமாக அதனுடைய சத்தத்தை கேட்கக்கூடிய ஒவ்வொரு ஜின் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வஸ்துவும் நாளைக்கு கியாமத்து நாளையில் உங்களுக்காக வேண்டி சாட்சி சொல்வார்கள்.
👉 பெண்களுக்கான ஜமாத்து தொழுகைக்கு அதான் சொல்லுவது சுன்னத் இல்லை காரணம் அதானை சத்தமாக சொல்வதினால் பித்னாக்கள் ஏற்படலாம் என்பதனால் மேலும் அவர்களுடைய ஜமாத்துக்கு இகாமத் சொல்லுவது சுன்னத்தாகும் அங்கே வந்திருக்கக்கூடியவர்களுக்கு உணர்ச்சி ஊட்டுவதற்காக வேண்டி இகாமச் சொல்லிக் கொள்ள அனுமதி உண்டு.
பாங்கு உடைய சுன்னத்துக்கள்
01 - கிப்லாவை முன்னோக்குதல.
02 - சிறு தொடக்கு மற்றும் பெருந்தொடக்கை வெட்டும் சுத்தமாக இருத்தல்.
👉 சிறு தொடக்கோடு அதான் சொல்லுவது மக்ரூஹ் ஆக்கப்பட்டுள்ளது குளிப்பு கடமையான நிலைமையில் அதான் சொல்லுவது மிகவும் கடுமையான மக்ரூஹாக இருக்கிறது.
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது சுத்தமாகவே தவிர அல்லாஹ்வை நான் ஞாபகம் செய்வதை திக்ரு செய்வதை வெறுக்குகிறேன் . நூல் அபூதாவு 17
03 - நின்ற நிலையில் அதான் சொல்லுதல்.
04 - "ஹய்ய அலஸ்ஸலாஹ்" என்று கூறும்போது வலது பக்கமாகவும் "ஹய்ய அலல் பலாஹ்" என்று கூறும் போது இடது பக்கமாகவும் கழுத்தை திருப்புவது ஸுன்னத்தாகும்.
👉 அவ்வாறு திரும்பும்போது நெஞ்சை திருப்பாமல் கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும்.
05 - அதானை மெதுவாக இராகத்தோடு ஓத வேண்டும்.
06 - அதானுடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் சப்தமாக சொல்வதற்கு முன்னால் இரகசியமாக சொல்லிக் கொள்ள வேண்டும்.
07 - சுபாஹுடைய அதானில் "ஹய்ய அலல் பலாஹ்"என்று சொன்னதற்கு பின்னால "அஸ்ஸலாது ஹைரும் மினன் நவ்ம் ″ என்று இரண்டு முறை சொல்லுதல்.
08 - அதான் சொல்லக்கூடியவர் அழகிய சத்தத்தில் அதான் சொல்லக்கூடியவராக இருக்க வேண்டும்.
09 - அதான் சொல்லக்கூடியவர் மக்களுக்கு மத்தியில் அவருடைய நற்குணம் மற்றும் அதாலத்தை கொண்டு அறியப்பட்டவராக இருக்க வேண்டும்.
10 - அதானே மிச்சம் நீட்டி பாட்டு போல் படிப்பது மக்ரூஹாக ஆக்கப்பட்டுள்ளது.
11 - ஒரு பள்ளிக்கு 2 அதான் சொல்லக்கூடியவர்கள் இருப்பது சுன்னதாகும்.
👉ஒருவர் பஜ்ரு தொழுகைக்காக வேண்டியும் மற்றவர் பஜ்ருக்கு முன்னால் அதான் சொல்வதற்கும்.
12 - பாங்கை கேட்கக் கூடியவர்கள் அமைதியாக இருந்து அதானுக்கு பதில் சொல்வதும் சுன்னத்தாகும்.
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது நீங்கள் அழைப்பை செவியுற்றால் அதான் சொல்பவர் சொல்லக்கூடியதைப் போல் நீங்களும் கூறுங்கள். நூல் - புகாரி - 586, முஸ்லிம் - 383.
💗அதானுக்கு பதில் சொல்லும் போது "ஹய்ய அலஸ்ஸலாஹ்" என்று கூறும்போது மேலும் "ஹய்ய அலல் பலாஹ்" என்று கூறும் போதும் "லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்" என்ற தஸ்பீஹை ஓதுவது ஸுன்னத்தாகும்.
💗 மேலும் சுபஹுத் தொழுகையில் ″அஸ்ஸலாது ஹைரும் மினன் நவ்ம் என்று சொன்னதை செய்ய விட்டால் "ஸதக்த வபரர்த வபில் ஹக்கி நதக்த"″ صدقت وبررت وبالحق نطقت என்ற துவாவை ஓத வேண்டும்.
13 - அதான் முடிந்ததற்கு பின்னால் துவாவும் ஸலவாத்தும் ஓதுவது சுன்னத் ஆகும்.
பாங்கு துவா
اَللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة العالية الشريفة وابعثه مقاما محمودة الذي وعدته وارزقنا شفاعته وأوردنا حوضه يوم القيامة انك لا تخلف الميعاد
இகாமதின் சட்டம்
👉 இகாமத்துடைய சட்டங்களும் பொதுவாக பாங்குடைய சட்டங்களை போன்று தான்.
இகாமத்துடைய வார்த்தைகள்
الله اكبر الله اكبرأشهد ان لا اله الا اللهأشهد ان محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاةالله اكبر الله اكبر لا اله الا الله
👉 பாங்கு சொல்லும் போது ஒவ்வொரு வார்த்தையும் இரண்டு முறை சொல்ல வேண்டும் இகாமத்து சொல்லும் போது ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு முறை சொல்ல வேண்டும் وقد قامت الصلاة மட்டும் இரண்டு முறையாக சொல்ல வேண்டும்.
👉மேலும் இக்காமச் சொல்லும் போது அவசரமாக விரைவாக சொல்ல வேண்டும்.
👉ஒருவர் தப்பி போன தொழுகையை தொழுவதாக இருந்தால் முதலாவது தொழுகைக்கு மட்டும் பாங்கு சொல்லிவிட்டு அடுத்த தொழக்கூடிய ஒவ்வொரு தொழுகைக்கும் இகாமத்து மட்டும் சொல்வது சுன்னதாகும்.
👉பாங்குடைய நிபந்தனைகள் இகாமத்துக்கும் கவனிக்கப்படும்.
👉 மேலும் பாங்குடைய சுன்னத்துகளே தான் இகாமத்துடைய சுன்னத்துகளும் ஆகும்.
👉பாங்கு சொல்லக்கூடியவரே இகாமத்தும் சொல்வது சுன்னதாகும் மேலும் இகாமச் சொல்லும் போது கதுகாமத்து சலாத் என்று சொல்லும்போது அதனை கேட்கக் கூடியவர்கள் أقامها الله وأدامها என்று சொல்வது சுன்னதாகும்.
👉 பர்ளு தொழுகைகள் அல்லாத ஜமாத்து சுன்னதாக்கப்பட்ட தொழுகைகளுக்கு அழைப்பதாக இருந்தால் இகாமத்தோ அதானோ அங்கே சுன்னத் இல்லை மாறாக (அஸ்ஸலாது ஜாமியா) என்று கூற வேண்டும்.
👉 அப்துல்லாஹ் இப்னு அம்ரிபினில் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமியா என்று அந்த தொழுகைக்கு அழைக்கப்பட்டது.
👉எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து ஏனைய ஜமாத்தாக தொழும் சுன்னதாக்கப்பட்ட தொழுகைகளுக்கும் அஸ்ஸலாத்துல் ஜாமியா என்று அழைப்பதை நேர்பிடிக்கப்பட்டுள்ளது.
Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை