FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

தொழுகை நேரங்கள் - பாடம் - 28

Share:

தொழுகை நேரங்கள்

👉 (அஸ்ஸலாத்) என்ற வார்த்தை அரபு பாசையிலே நலவைக் கொண்டு பிரார்திப்பதற்கு  (துஆ) பாவிக்கப்படும்.

 பின்வரும் வசனத்திலே அல்லாஹ் கூறுகிறான்👇👇👇

 (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.    ஸூரா தவ்பா-103

👉 மேலும் புகஹாக்களுடைய வளமையிலே  (அஸ்ஸலாத்)  என்ற இந்த வார்த்தை குறிப்பான சில வார்த்தைகளுக்கும் சில செயல்பாடுகளுக்கும் சொல்லப்படும் அந்த வார்த்தைகளும் செயல்பாடும் அல்லாஹு அக்பர் என்று தக்பீரை கொண்டு ஆரம்பிக்கப்பட்டு அஸ்ஸலாமு அலைக்கும் என்ற சலாத்தை கொண்டு முடிக்கப்படும் அதற்கு அஸ்ஸலாத் தொழுகை என்ற பெயர் உபயோகிக்கப்படுகிறது.

 தொழுகை கடமையாக்கப்பட்டதற்கான சில ரகசியங்கள்

👉 தொழுகை கடமையாக்கப்பட்டதற்கான பல ரகசியங்கள் பல ஞானங்கள் அதில் உள்ளது.


01 -  ஒரு மனிதன் உண்மையாக வணங்க வேண்டியவன் அல்லாஹ் தான் என்பதை தான் அல்லாஹ்வுடைய ஒரு அடியான் என்பதையும் உணர்ச்சி ஊட்டுவதற்காக வேண்டி துன்யாவுடைய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலே  ஆஹிரா உடைய தொடர்பை மறந்து இருக்கும் நேரத்தில தொழுகையின் நேரம் வந்தவுடன் புதிதாக ஒரு முறை இன்னொரு முறை தான்  அல்லாஹ்வை வணங்கக்கூடிய ஒரு அடியான் என்பதை ஞாபகம் கொள்கிறான்.


02 -   இந்த உலகத்தில உண்மையாகவே உதவி செய்யக்கூடிய எதார்த்தத்தில் இன்பங்களை தரக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உள்ளத்திலே தறிப்படுத்துவது உலகத்தின் வெளிப்படையான காரணங்கள் அது உலகத்துடைய விஷயங்கள்தான் இந்த இன்பத்தையும் உதவியும் தருகிறது என்று அவனுடைய உள்ளத்திலே வந்தாலும் எதார்த்தத்தில் அதை எல்லாம் வசப்படுத்திக் கொடுக்கக் கூடியவன் இறைவன் அல்லாஹ் என்ற உணர்ச்சியை உண்டாக்குகிறது.
03-  ஒரு மனிதன் தான் செய்த பாவத்திற்காக தவ்பா செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஒரு நேரமாக இந்த தொழுகை இருக்கிறது அவனுடைய இரவிலும் பகலிலும் அதிகமான பாவங்கள் தான் அறியாமலோ அல்லது தான் அறிந்தோ நடக்கிறது எனவே ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுகை திரும்பத் திரும்ப வரும் சந்தர்ப்பத்தில் அவன் தன்னுடைய பாவத்தை அந்த நேரத்திலே நினைத்து தவ்பா செய்வதற்கு அந்த தொழுகை மிக உதவியாக இருக்கிறது.

💭  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்  கூறியதாக ஜாபீர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது ஐந்து நேர தொழுகைக்கு உதாரணம் ஒருவருடைய வீட்டுக்கு அருகாமையால் ஓடக்கூடிய ஆற்றில் அவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரம்  குளிக்க கூடியவராக இருக்கிறார் என்று கூறிய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவருடைய மேனியில் எந்தவிதமான அழுக்கும் மிஞ்சுமா? என்று கேட்டார்கள்.

👉  இந்த ஹதீஸின் ஊடாக விளங்குவது எவ்வாறு ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் குளித்தால் அவருடைய மேனியில் எந்தவிதமான அழுக்கும் இருக்காதோ அதுபோல ஒரு முஸ்லிம் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுதால்  அல்லாஹுத்தஆலா அவருடைய எல்லாவிதமான பாவத்தையும் மன்னித்து பாவமே இல்லாதவனாக அந்த மனிதன் மாறுகிறான்.

04- அந்தத் தொழுகை ஈமானுக்கு உள்ளத்திலே இருக்கக்கூடிய அந்த ஈமானுடைய உறுதிப்பாட்டுக்கு ஒரு உணவாக அது அமாறுகிறது.

தொழுகை கடமையாக்கப்பட்ட பின்னணி 

👉 தொழுகை என்பது ஒரு பழமை வாய்ந்த ஒரு வணக்க வழிபாடாக இருக்கிறது செய்யதுனா இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது ۝அவர் தன்னுடைய குடும்பத்தாருக்கு தொழுகையை கொண்டும் ஜகாத்தை கொண்டும் ஏவக்கூடியவராகவும் தன்னுடைய இறைவனிடத்திலே பொருந்திக் கொள்ளப்பட்டவராகம் இருந்தார்۝   என்று கூருகிரான். ஸூரா ፦ மரியம்- 55 வது வசனம்.

 👉 மேலும்  ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறும் போது ۝அல்லா எனக்கு தொழுகையை கொண்டும் ஜகாத்தை கொண்டும் நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் ஏவியுள்ளான் என்பதாக சொல்லுகிறார்கள்۝ சூறா- மரியம்- 31 

👉 மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியாக அனுப்பப்பட்டதற்கு பின்னால் தொழுகை கொடுக்கப்படுவதற்கு முன்னால் ஒவ்வொரு சுபஹு நேரமும் ஒவ்வொரு அசறு நேரமும் இரண்டு இரண்டு ரக்அத்துக்கள் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். 

👉மேலும் இந்தக் கருத்தில் கருத்து வேற்றுமை இருக்கிறது அது அல்லாஹ்வை ஞாபகப்படுத்துதல் என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

👉 எமக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தினர் மீது ஐந்து நேர தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு முஸ்லிமான புத்தியுள்ள வயதுக்கு வந்த ஒவ்வொருவரும் மீதும் இந்த ஐந்து நேரத் தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.

👉 இந்தத் தொழுகைகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மிஃராஜ் சென்ற நேரத்தில் அல்லாஹ் ஏழு வானங்களையும் தாண்டி சித்ரத்தில் முன்தஹாவையும் தாண்டி அல்லாஹ்வை சந்தித்த நேரத்திலே ஒரு பரிசாக ஐம்பது நேர தொழுகைகளை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான் அந்த 50 நேரத் தொழுகைகளும் நபி மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் ஐந்து நேரத் தொழுகையாக அல்லாஹ்விடத்திலே குறைத்து  பெற்றுக் கொண்டார்கள் எனவே யார் ஒருவர் இந்த ஐந்து நேரத் தொழுகைகளையும் தொழுவாரோ அவர்களுக்கு 50 நேரத் தொழுகை உடைய நன்மை கிடைக்கும்.

தொழுகையை கடமையாக்கப்பட்டதற்கான ஆதாரம்

 👉 சூரத்துன்- நிஸா - 103 வது ஆயத்திலே ۝நிச்சயமாக தொழுகை முஃமின்களின் மீது நேரம் குறிக்கப்பட்ட கட்டாயமானதாக ஆகிவிட்டது۝
👉 ஹதீஸில் வந்துள்ளதாவது  💭புகாரி மற்றும் முஸ்லிமில் வரக்கூடிய செய்தி இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எமனுக்கு அனுப்பும்போது இவ்வாறு கூறினார்கள் - அவர்களை தூய கலிமாவின் பக்கம் அழையுங்கள் அவ்வாறு அவர்கள் வழிபட்டு விட்டார்கள் என்றால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் மீது ஐந்து நேரத் தொழுகையை ஒவ்வொரு பகலும் இரவிலும் கடமையாக்கி இருக்கிறான் என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

👉 மேலும் 💭நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு காட்டரபிக்கு அந்த காட்டரபி தொழுகையை பற்றி கேட்டபோது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் ஐந்து நேரத் தொழுகைகள் இரவிலும் பகலிலும் இருக்கிறது மீண்டும் அந்த காட்டெருபி வேறு ஏதேனும் என் மீது கடமையா என்று கேட்ட போது இல்லை நீங்கள் சுன்னத்தான தொழுகைகளை தொழுதாலே தவிர என்று கூறினார்கள். புகாரி- 46, முஸ்லிம் - 18

இஸ்லாத்தில் தொழுகையின் முக்கியத்துவம்

 👉 இஸ்லாத்துடைய  உடம்பு ரீதியாக செய்யக்கூடிய இபாதத்துக்களில் வணக்கத்திலே தொழுகை தான் மிக சிறந்த ஒரு வணக்கமாக இருக்கிறது ஒரு மனிதர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரிடத்திலே வந்து யா ரசூலல்லாஹ் அமல்களிலே மிக சிறந்தது எது என்று கேட்டபோது  தொழுகை என்பதாக சொன்னார்கள் பின்பு எது என்று கேட்டபோது பின்பும் தொழுகை தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் பின்பு எது என்று அந்த மனிதர் கேட்டபோது பின்பும் அந்தத் தொழுகை தான் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்ற முறை பதில் சொன்னார்கள்.
 நூள்- இப்னு ஹிப்பான்.

தொழுகையை விட்டவரின் சட்டம்

👉 தொழுகையை யாராவது அது வாஜிப் என்பதை மறுத்து தொழுகையை விட்டால் அல்லது ஒரு இழிவாக அதை கருதி தொழுகையை விட்டால் அவர் அதன் மூலம் நிராகரிப்பாளராக மாறுகிறார் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவராக மாறுகிறார் எனவே அந்த ஊருக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய 'காலிக்கு″ அவரை "தவ்பா″ செய்யும்படி ஏவ வேண்டும் அவர் தவ்பா செய்தால் அவர் தொழுகையை நிலைநாட்ட வேண்டும் எனவே அவர் தவ்பா செய்யவில்லை என்றால் தவ்பா செய்வதற்கு முன்னால் மரனித்தால்  அவரை குளிப்பாட்டவோ மேலும் அவரை கஃபன் செய்யவோ மேலும் அவருக்கு தொழுவிக்கவோ மேலும் முஸ்லிம்களுடைய மையவாடிகளில் அவரை அடக்கம் செய்யவோ கூடாது.

👉 யாராவது சோம்பரத்தனத்தில் பொடுபோக்காக அது வாஜிபூ என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனாலும் சோம்பேறித்தனத்தில் தொழுகையை விட்டால் அதனை கலாச்செய்யும் படியும் விட்ட அந்த பாவத்துக்காக வேண்டி தௌபா செய்யும்படியும் அவருக்கு ஏவப்படும் அவ்வாறே அவர் அதனை கலா செய்ய மறுத்தால் அவருக்கு மரண தண்டனை கொடுப்பது கட்டாயம் அவ்வாறு மரண தண்டனை கொடுக்கப்பட்டாலும் அவர் முஸ்லிம் என்பதிலிருந்து அவர் நீங்க மாட்டாரு எனவே ஒரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளும் அவருக்குச் செய்யப்பட வேண்டும்.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது  மக்கள் கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற திருக்கலிமாவை கொண்டு சாட்சி சொல்லும் வரை நான் அவர்களுடன் யுத்தம் செய்ய ஏவப்பட்டுள்ளேன் மேலும் அவர்கள் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்து கொடுக்கும் வரைக்கும் நான் யுத்தம் செய்ய ஏவப்பட்டுள்ளேன் அவ்வாறு அவர்கள் அதனை செய்து விட்டால்  என்னை விட்டும் அவர்களுடைய இரத்தங்களும் சொத்துக்களும் பாதுகாக்கப்படம் இஸ்லாத்துடைய உரிமைக்காகவே தவிர அவர்களுக்கு உரிய கேள்வி கணக்கு அது அல்லாஹ்வின் மீது கடமையாக இருக்கிறது.

👉 எனவே இந்த ஹதீஸ்களின் ஊடாக விளங்க வருவது ஒருவர் கட்டாயம் தொழுகைக்காக வேண்டப்பட வேண்டும் அவர் தொழுவில்லை என்றால் அவர் விட்ட தொழுகைகளை கலாச்செய்ய வேண்டும் மோலும் தௌபா செய்ய வேண்டும் அவைகளை செய்யாவிட்டால் ஹத் என்ற அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.

💗ஐவேளை தொழுகை நேரங்கள்💗

சுபஹு தொழுகையின் நேரம்

👉 வைகறையில் இருந்து ஆரம்பமாகிறது சூரியன் உதிப்பதோடு முடிவடைகிறது.

நுகர் தொழுகையின் நேரம்

👉 சூரியன் உச்சியை விட்டும் மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரைக்கம்.

அஸர் தொழுகையின் நேரம்

👉 ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அதுபோல ஒரு அளவு வந்ததிலிருந்து சூரியன் மறைய துவங்கும் வரை.

மஃரிபுத் தொழுகையின் நேரம்

👉 சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கு செம்மை மறையும் வரை.

இஷா தொழுகையின் நேரம் 

👉மஃரிபு தொழுகையின் நேரம் முடிவதுடன் ஆரம்பமாகி சுபஹு தொழுகையின் நேரம் வரை அது நீடிக்கும்.



தொழக் கூடாத மூன்று நேரங்கள் 

👉 மூன்று நேரங்கள் உள்ளது அந்த நேரங்களில் முந்திய காரணங்கள் இல்லாமல் தொழுவது மக்ரூஹாக்கப்பட்டுள்ளது.

01 - சூரியன் உதயமாக துவங்கியதில் இருந்து நன்கு உயரும் வரை.

02 - நண்பகல் துவங்கியதில் இருந்து சூரியன் சாயும் வரை (சூரியன் நடு உச்சியில் இருந்து சாயும் வரை)

3.- சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

💬 ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எங்களுக்கு மூன்று நேரங்களில் தொழுவதையும் எங்கள் மரணித்தவர்களை அடக்கம் செய்வதையும் தடுத்தார்கள் 01 - சூரியன் உதயமாக துவங்கியதில் இருந்து நன்கு உயரும் வரை 02 - நண்பர்கள் துவங்கியதில் இருந்து சூரியன் சாயும் வரை 03 - சூரியன்  அஸ்தமிக்க துவங்கியதில் இருந்து நன்கு மறையும் வரை. நூல் -  முஸ்லிம் - 1373

குறிப்பு ፦ காரணங்கள் முந்திய தொழுகைகள் இருந்தால் அந்தத் தொழுகைகளை இந்த மக்ரூஹாக்கப்பட்ட நேரத்தில் தொழுவதற்கு அனுமதி உண்டு.

👉 உதாரணமாக வுழூவுடைய சுன்னத்து வுழூச் செய்த ஒருவர் சுன்னத் தொழுவதாக இருந்தால் அவர் தொழும்போது இந்த மக்ரூஹான நேரம் நேர்பட்டாலும் அவருக்கு தொழ முடியும் காரணம் அவர் அந்த தொழுகைக்கான காரணம்  முந்திவிட்டது என்பதனால், மேலும் பள்ளியின் காணிக்கையான தஹியத்துல் மஸ்ஜித் தொழுகை ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் அவருக்கு அந்த இரண்டு ரக்அத்து தொழுகையை தொழலாம்,  மேலும் கலாவான தொழுகையை  தொழுவதற்கு அனுமதி உண்டு.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது யாராவது ஒரு தொழுகையை மறந்து விட்டால் அதனை ஞாபகம் வரும் போது தொழுது கொள்ளட்டும் அதற்கு எந்த விதமான குற்ற பரிகாரமும் இல்லை.  நூல் - புகாரி 576 , முஸ்லிம் 684.

👉மேலும் ஹரம் ஷரீபில் எந்த நேரத்திலும் தொழுவதற்கும் தவாஃபு செய்வதற்கும் அனுமதி உண்டு.

👉 மேலும்  இரண்டு நேரங்களில் தொழுவது மக்ரூஹாக்கப்பட்டுள்ளது.

01 - ஒருவர் தன்னுடைய ஃபர்லான சுபஹுத் தொழுகையை நிறைவேற்றி விட்டால் சூரியன் உதிக்கும் வரைக்கும் வேறு சுன்னத்தான தொழுகைகள் தொழுவது கூடாது, காரணங்கள் முந்திய தொழுகையைத் தவிர.

02 -   ஒருவர்  அசருடைய ஃபர்லை தொழுதுவிட்டால் மகரிபு வரைக்கும் எந்த சுன்னத்தான தொழுகையும் அவருக்கு தொழுவது கூடாது காரணங்கள் முந்திய தொழுகைகளைத் தவிர.

👉 மேலும் சூரியன் நடு உச்சிக்கு வந்திருக்கும் நேரத்தில்  ஜும்ஆ தொழுகை தொழ வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் அந்த நேரத்தில் தொழுவதற்கு அனுமதி உண்டு.



  Writer -  Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை