தொழுகையின் (பர்ழுகள்)ருகூன்கள் 13
01 - நிய்யத்து வைத்தல்
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் நிச்சயமாக அமல்கள் எல்லாம் அதனுடைய எண்ணத்தை கொண்டு தான் உண்டாகும்.
நூல் - புகாரி-1 , முஸ்லிம் - 1097.
ஒவ்வொரு தொழுகைக்கும் நிய்யத் வைக்கும் முறை
01 - சுபஹு தொழுகை.
أصلي فرض الصبح ركعتين أداء مستقبلا الى الكعبة الشريفة لله تعالى
👉"உஸல்லி பர்ழஸ் ஸுபஹி ரகஅதைனி அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபதிஷ் சரீபதி லில்லாகி தஆலா"
👉சுப்ஹுடைய பர்லான இரண்டு ரகாத்துக்களையும் கிப்லாவை முன்னோக்கி அதாவாக அல்லாஹுக்காக தொழுகின்றேன்
02 - ழுஹர் தொழுகை.
👉"உஸல்லி பர்ழல் ழுஹரி அர்பஅ ரகஆதின் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபதிஷ் சரீபதி லில்லாகி ரஆலா"
👉ழுஹருடைய ஃபர்லான நான்கு ரக்காத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அதாவாக அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.
03 - அஸர் தொழுகை.
اصلي فرض العصراربع ركعات اداء مستقبلا الي الكعبة الشريفة لله تعالي
👉"உஸல்லி பர்ழல் அஸரி அர்பஅ ரகஆதின் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபதிஷ் சரீபதி லில்லாகி ரஆலா"
👉அஸருடைய பர்லான நான்கு ரகாத்துக்களையும் கிப்லாவை முன்னோக்கி அதாவாக அல்லாஹுக்காக தொழுகின்றேன்.
04 - மஃரிப் தொழுகை.
اصلي فرض المغرب ثلاث ركعات اداء مستقبلا الي الكعبة الشريفة لله تعالي
👉"உஸல்லி பர்ழல் மஃரிப் ஸலாஸ ரகஆதின் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபதிஷ் சரீபதி லில்லாகி ரஆலா"
👉மஃரிபுடைய பர்லான மூன்று ரகாத்துக்களையும் கிப்லாவை முன்னோக்கி அதாவாக அல்லாஹுக்காக தொழுகின்றேன்.
05 - இஷா தொழுகை.
اصلي فرض العشاءاربع ركعات اداء مستقبلا الي الكعبة الشريفة لله تعالي
👉"உஸல்லி பர்ழல் இஷா அர்பஅ ரகஆதின் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஃபதிஷ் சரீபதி லில்லாகி ரஆலா"
👉 இஷாஉடைய பர்லான நான்கு ரகாத்துக்களையும் கிப்லாவை முன்னோக்கி அதாவாக அல்லாஹுக்காக தொழுகின்றேன்.
சுன்னத்தான தொழுகைகளின் நிய்யத்துக்கள்
01 - சுபஹருடைய முன் சுன்னத்து.
أصلي سنه الصبح ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى
👉 சுபஹுடைய சுன்னத்தான இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.
02 - ழுஹருடைய முந்திய சுன்னத்து.
أصلي سنه الظهر قبليه ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى
👉ழுஹருடைய முந்திய சுன்னத்து இரண்டு ரக்அத்துக்களை அதாவாக கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.
03 - ழுஹருடைய பிந்திய சுன்னத்து.
أصلي سنه الظهر بعديه ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى
👉 ழுஹருடைய பிந்திய சுன்னத்து இரண்டு ரக்அத்துக்களை அதாவாக கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக வேண்டி தொழுகிறேன்.
04 - அஸருடைய சுன்னத்து
أصلي سنه العصر ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى
👉 அஸருடைய சுன்னத்து இரண்டு ரக்அத்துக்களை அதாவாக கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக வேண்டி தொழுகிறேன்.
05 - மஃரிபுடைய பிந்திய சுன்னத்து
اصلي سنه المغرب بعديه ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى
👉 மகரிப்புடைய பிந்திய சுன்னத்து இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.
06 - இஷா உடைய முந்திய சுன்னத்து
اصلي سنه العشاء قبليه ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى
👉 இஷாவுடைய முந்தைய சுன்னத்து இரண்டு ரக்காத்துகளையும் அதாவாக கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.
07 - இஷா உடைய பிந்திய சுன்னத்து
اصلي سنه العشاء بعديه ركعتين اداء مستقبلا الى الكعبه الشريفه لله تعالى
👉 இஷாவுடைய பிந்திய சுன்னத்து இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.
02 - தொழுகைகளிலே சக்தி உள்ளவர் நின்று தொழுதல்.
💬இம்ரான் இப்னு ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது நான் மூலம் வியாதி ஏற்பட்டவனாக இருந்தேன் எனவே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடத்திலே தொழுவதைப் பற்றி கேட்டேன் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்ற நிலையில் தொழுங்கள். அவ்வாறு நீங்கள் சக்தி பெறவில்லை என்றால் உட்கார்ந்த நிலைமையில் தொழுங்கள் மேலும் அதற்கும் நீங்கள் சக்தி பெறவில்லை என்றால் உங்கள் விழாவின் மீது சாய்ந்தவர்களாக தொழுங்கள் என்பதாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
💬நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாவது யாரு நிண்டு தொழுகிறாரோ அது மிக சிறந்ததாக இருக்கிறது மேலும் யாரு உட்கார்ந்து தொழுகிறாரோ அவருக்கு நின்று தொழக்கூடியவருடைய அரைவாசி நன்மை கிடைக்கும் மேலும் யாரு சாய்ந்து தொழுகிறாரோ அவருக்கு உட்கார்ந்து தொழக்கூடியவருடைய நன்மையில் அரைவாசி கிடைக்கும்.
நூல் - புகாரி 1665
03 - இஹ்ராம் தக்பீர் சொல்லுதல்.
எவ்வாறு தக்பீர் சொல்ல வேண்டும்
👉அல்லாஹு அக்பர் الله اكبر என்ற இந்த வார்த்தை கட்டாயம் மொலியப்பட வேண்டும்.
💗இஹ்ராம் தக்பீர் சரியான முறையில் நிறைவேறுவதற்கான நிபந்தனைகள்💖
01- நிண்ட நிலையில் மொழிய வேண்டும்.
02- கிப்லாவை முன்னோக்கிய நிலைமையில் மொழிய வேண்டும்.
03 - அரபு பாசையினால் தக்பீர் சொல்ல வேண்டும்.
04 - அதனுடைய ஒவ்வொரு ஹர்புகளையும் தனக்கு கேட்கக்கூடிய அளவுக்கு சத்தமாகச் சொல்ல வேண்டும்.
05 - நீயத்தோடு சேர்ந்ததாக தக்பீர் அமைய வேண்டும்.
04 - சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல்.
💬நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறியதாவது சூரத்துல் பாத்திஹாவை யாரு ஓதவில்லையோ அவருக்கு தொழுகை இல்லை. நூல் - புகாரி 7 23, முஸ்லிம் 394
💗சூரத்துல் பாத்திஹா ஓதுவது சரியான முறையில் நிறைவேற வேண்டும் எனவே அதற்கான கவனிக்க வேண்டிய நிபந்தனைகள்💗
01 - ஓதக்கூடியவர் தனக்கு கேட்கும் படி ஓத வேண்டும்.
02 - சூரத்துல் பாத்திஹா உடைய சத்துகளை பேணி அதனுடைய எழுத்துக்களின் மக்ரஜ்களை கவனித்து தர்தீபான முறையில் ஓத வேண்டும்.
03 - சூரத்தை ஓதும் போது பொருள்களை சீர்குலைக்க கூடிய அளவுக்கு அந்த வசனங்களை பிலையாக ஓதக்கூடாது.
04 - அரபு மொழியில் மட்டுமே ஓதப்பட வேண்டும்,பிர மொழிகளில் மொழிபெயர்ப்புகள் செய்வது கூடாது.
05 - நின்று தொழும் தொழுகையில் கட்டாயம் நிண்டு நிலைமையில் ஓத வேண்டும்.
குறிப்பு 👉 சூரத்துல் பாத்திஹா ஒருவருக்கு மனனம் இல்லை என்றால் அதற்கு பதிலாக குர்ஆனில் இருந்து மனனம் ஆக்கிய ஏழு ஆயத்துக்களை ஓத முடியும், குர்ஆனில் இருந்து எந்த ஒரு ஆயத்தும் மனனம் இல்லை என்றால் பாத்திஹாவுடைய பிரமாணம் அத்கார்களை ஓத வேண்டும்,அதுவும் தெரியாவிட்டால் பாத்திஹாவுடைய பிரமாணம் மௌனமாக இரிக்கவேண்டும்.
05 - ருகூஉ செய்தல்.
💗ருக்கு செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள்💗
01 - முழங்காலில் உள்ளங்கையை வைக்கும் வரைக்கும் குனிய வேண்டும்.
02 - குனியும் போது ருக்கூ செய்வதைத் தவிர வேறு எந்த செயலையும் நாடக்கூடாது.
03 - ஒரு தஸ்பீஹ் ஓதக்கூடிய பெருமானம் குனிந்த நிலையில் ருக்கூவிலே தாமதிக்க வேண்டும்.
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது மக்களிலே கெட்ட திருடன் தொழுகையில் திருடியவன் என்பதாக சொன்ன போது சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே தொழுகையை எவ்வாறு திருடுவது என்பதாக கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தொழுகையின் ருகூஉ,சுஜூதை பூர்த்தியாக்க மாட்டார்கள் என்பதாகச் சொன்னார்கள். நூள் - அஹ்மத்,தபரானி
04 - ருகூஉ செய்தால் "சுப்ஹான ரப்பியல் அழீமி" என்ற துவாவை ஓதிக்கொள்ள வேண்டும் இந்த துவாவை ஓதிக்கொள்ளக்கூடிய அளவு தாமதமாக இருப்பது சிறந்தது அதே சமயம் அந்த தஸ்பீஹை மூன்று முறை ஓதக்கூடிய அளவு தாமதிப்பது பரிபூரணமான ருகூஉ உடைய நிலையை கொண்டு வரும்.
06 - நிலைக்கு வருதல்.
💗நிலைக்கு வருவதுடைய சில நிபந்தனைகள்💗
01 - நிலைக்கு வரும் பொழுது அந்த எண்ணத்தோடு வரவேண்டும்.
02 - ஒரு தஸ்பீஹ் ஓதக்கூடிய அளவுக்கு தாமதித்தல்.
03 - நீண்ட நேரம் நிக்காமல் இருத்தல்.
07 - ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு சுஜூதுகள் செய்தல்.
💗சுஜூது நிறைவேறுவதற்கான நிபந்தனைகள்💗
01 - பூமியில் படக்கூடிய நேரத்தில் நெற்றி திறந்திருக்க வேண்டும்.
02 - ஏழு உறுப்புக்களின் மீது சுஜூது செய்ய வேண்டும்.
03 - சுஜூது செய்யும்போது உயர்ந்த பகுதியான தலைப்பகுதியை கீழையும் தாழ்ந்த பகுதியாக இருக்கக்கூடிய பித்தட்டு பகுதிகளை உயர்த்தவும் வேண்டும்.
04 - தன்னுடைய அசைவின் மூலமாக அசையக்கூடிய ஒரு பொருளின் மீது அல்லது ஒரு துணியின் மீது சுஜூது செய்வது கூடாது.
05 - சுஜூதுக்கு குனியும் போது சுஜூத் அல்லாத வேற எண்ணம் வரக்கூடாது.
06 - சுஜூதிலே ஒரு தஸ்பீஹுடைய பெருமானும் ஆக குறைந்த அளவு தாமதிக்க வேண்டும்.
சுஜூது செய்வதனுடைய மிக பரிபூரணமான முறை 👇👇👇
💬 குனிய ஆரம்பிக்கும்போது தக்பீர் சொல்லி ஆரம்பித்தல் முதலாவது இரண்டு முழங்கால்களையும் வைத்தல் பின்பு இரண்டு கைகளையும் வைத்தல் பின்பு நெற்றியை வைத்தல் அதோடு மூக்கையும் இலேசாக படக்கூடிய அளவுக்கு வைத்தல் பின்பு இரண்டு கைகளையும் தோல்களுக்கு நேராக விரல்களை விரித்தவர்களாக விரல்கள் உடைய முன் பக்கங்கள் கிப்லாவின் பக்கம் உள்ள நிலைமையில் ஆணாக இருந்தால் முழங்கையை விலா எலும்பை விட்டும் அகட்டி பிரித்தவராகவும் வயிற்றையும் முழங்காலையும் பிரித்தவராகவும் சுஜூது செய்து பின்பு மூன்று முறை "சுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி" என்று ஓத வேண்டும்.
08 - இரண்டு சுஜூதுகளுக்கும் மத்தியில் உட்காருதல்.
💗சுஜூதுகளுக்கு மத்தியில் உட்காருவதனுடைய நிபந்தனைகள்💗
01 - அவ்வாறு உட்காரும் பொழுது இபாதத்துடைய எண்ணம் வர வேண்டும் வேற எந்த எண்ணமும் வரக்கூடாது.
02 - அத்தகையாத்துடைய மிகக் குறைந்த அளவை ஓதக்கூடிய பிரமாணத்தை காண அதிகமாக நீண்ட நேரம் அதில் உட்கார கூடாது.
03 - ஒரு தஸ்பீஹ் சொல்லக்கூடிய அளவு அமைதியாக இருக்க வேண்டும்.
09 - கடைசி இறிப்பில் இருத்தல்.
10 - கடைசி இருப்பில் அத்தகியாத்து ஓதுதல்.
💗அத்தகிய்யாத்தில் மிக குறைந்த முறை💗
التحيات المباركات، الصلوات الطيبات لله، السلام عليك أيها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً رسول الله
"அத்தஹிய்யாதுல் முபாரகாதுஸ் ஸலவாதுத் தய்யிபாது லில்லாஹி அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா ,வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலஹீன் அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹி "
💗அத்தகிய்யாத்தின் பரிபூரனமான முறை💗
التحيات المباركات، الصلوات الطيبات لله، السلام عليك أيها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً رسول الله اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، وبارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى أل إبراهيم، في العالمين إنك حميد مجيد
"அத்தஹிய்யாதுல் முபாரகாதுஸ் ஸலவாதுத் தய்யிபாது லில்லாஹி அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா ,வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலஹீன் அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹி அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் வஅலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மத் வஅலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம பில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத் "
💗அத்தகிய்யாத்து ஓதும்போது கவனிக்க வேண்டிய விடையங்கள்💗
01 - ஓதக்கூடியவர் தனக்கு கேட்கும் படி ஓத வேண்டும்.
02 - தொடராக ஓத வேண்டும் இடையில் நீண்ட அமைதி இருக்கக் கூடாது.
03 - உட்கார்ந்த நிலைமையில் ஓத வேண்டும் தங்கடங்கள் ஏதுமிருந்தால் இடம்பாடாக கூடிய முறையில் இருந்து ஓதுவதற்கு அனுமதி உண்டு.
04 - அரபால் ஓத வேண்டும்.
05 - அதனுடைய மக்ரஜ்களையும் சத்துகளையும் கவனிக்க வேண்டும்.
06 - ஹதீஸில் வந்த அடிப்படையில் தர்த்தீபாக அதனுடைய வார்த்தைகளை ஓத வேண்டும்.
11 - இறுதி அத்தகிய்யாத்துக்கு பின்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது சலவாத்து சொல்லுதல்.
💚ஸலவாத்துடைய பரிபூரணமான முறை💚
اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، وبارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى أل إبراهيم، في العالمين إنك حميد مجيد
"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் வஅலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மத் வஅலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம பில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத் "
💗ஸலவாத்து ஓதுவதற்கான நிபந்தனைகள்💗
01 - ஓதக் கூடியவர் தனக்கு கேட்கச் செய்ய வேண்டும்.
02 - "முஹம்மத் " என்ற சொல் அல்லது "ரசூல்" அல்லது "அன்னபி" என்ற சொற்கள் பாவிக்கப்பட வேண்டும்.
03 - அறபியில் ஓத வேண்டும்.
👉 அரபு தெரியாதவர்கள் அதனை கற்றுக் கொள்ள இடம் அளிக்காதவர்கள் மொழிபெயர்த்துக் கொள்ளலாம் அவசரமாக கற்றுக் கொள்வது கட்டாயம்.
04 - ஸலவாத்துடைய வார்த்தைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஓத வேண்டும்.
👉முதலாவது அத்தஹியாத்தும் அதைத் தொடர்ந்து ஸலவாத்தும் ஓதப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை