FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

"ஹய்ல்" அல்லது "நிபாஸ்" ஏற்பட்ட பெண்கள் செய்யக்கூடாத 8 விடயங்கள்- பாடம் - 23

Share:

 


"ஹய்ல்" அல்லது "நிபாஸ்"ஏற்பட்ட பெண்கள் செய்யக்கூடாத 8 விடயங்கள்

💗மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்   மேலும் பேருகால இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் அதாவது "ஹய்ல்" மற்றும் "நிபாஸ்" உடைய இரத்தப்போக்குகள் ஏற்பட்ட பெண்கள் அந்த காலகட்டத்தில்  செய்வதற்கு ஹராமாக்கப்பட்ட விடயங்கள் எட்டு இருக்கிறது இந்த விடயங்களை அந்தப் பெண்கள் கவனத்தில் எடுத்து பேணுதலாக இருக்க வேண்டும்.💗

01- தொழுகை

💬 பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ்  ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் உங்களுக்கு
தொடக்கு ஏற்பட்டால் தொழுகையை விடுங்கள் தொடக்கு முடிந்து விட்டால் உங்கள் இரத்தத்தை கழுவிக் கொண்டு பின்பு தொழுங்கள் என்று கூறினார்கள் 
நூல் - புகாரி - 226 ,முஸ்லிம்- 333

👉மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய ஒரு ஹதீஸிலே வந்திருப்பதாவது...

 💬 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை நான் கேட்டேன் சுத்தம் இல்லாமல் தொழுகை ஒப்புக்கொள்ளப்படமாட்டாது            நூல் - முஸ்லிம் - 224

குறிப்பு :-  இவ்வாறு "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" உடைய காலத்தில் இருக்கும் பெண்கள் விடக்கூடிய தொழுகைகளை  கலா செய்ய தேவை இல்லை.

02 - குர்ஆன் ஓதுதல்.

 👉 "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" ஏற்பட்ட ஒரு பெண்  குர்ஆன் ஓதுவது ஹராமாகும், ஆனால் குர்ஆனில் வரக்கூடிய துவாக்களை குர்ஆனுடைய எண்ணம் இல்லாமல் ஓதுவதற்கு அனுமதி உண்டு மேலும் தஸ்பீஹ்கள் திக்ருகள் ஏனைய துவாக்கள் இவைகளை ஓதுவதற்கு அனுமதி உண்டு.

💬 மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணும் குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் இருந்தும் எந்த ஒன்றையும் ஓத வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

நூல் - திருமிதி - 131

👉 மேலும்  "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" ஏற்பட்ட பெண்களுக்கு  குர்ஆனை உள்ளத்திலே நினைப்பதற்கு அனுமதி உண்டு வாயினால் ஓதாமல்  குர்ஆனை உள்ளத்திலே நினைப்பதற்கும் குர்ஆனை பார்ப்பதற்கும் திக்ருடைய எண்ணத்தில் குர்ஆனில் வரக்கூடிய துஆக்களை ஓதுவதற்கும் அனுமதி உண்டு. 

குறிப்பு :- பிறருக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்கும் நோக்கில் அல்லது குர்ஆனை கற்றுக் கொள்வதற்காக வேண்டி அதனை வாசிப்பதற்கு அனுமதி உண்டு இங்கே குர்ஆனை ஓதக்கூடிய எண்ணம் வரக்கூடாது மேலும் குர்ஆனை தொடவும் கூடாது.

03 - குர்ஆனை தொடுதல், சுமத்தல்.

 👉 அதனுடைய ஒரு தாளையாவது தொடுவது அதனுடைய அட்டையை தொடுவது அதனை ஒரு பையில் போட்டு அல்லது பெட்டியில் போட்டு சுமப்பது இது அத்தனையும் ஹராமாகும்.

💬 சுத்தமானவர்களை தவிர அதனை -குர்ஆனை- தொட மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.    சூரத்துல் - வாக்கியா - 79 

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறுகிறார்கள் சுத்தமானவரை தவிர குர்ஆனை தொட மாட்டார்.  நூல் - தாரகுத்தினி

குறிப்பு - 👉  பொருட்கள் நிறைந்த ஒரு பையில்  சாமான்களோடு சேர்த்து குர்ஆனை சுமப்பதற்கு அனுமதி உண்டு குர்ஆனை சுமப்பதாக எண்ணம் இல்லாமல் அந்த பொதியில் இருக்கக்கூடிய பொருட்களை சுமப்பதாக எண்ணத்தோடு அவருக்கு கொண்டு செல்லலாம்.

👉மேலும் குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கோ அல்லது கற்றுக் கொள்வதற்கோ எக்காரணம் கொண்டும் குர்ஆனை தொடுவதற்கு முடியாது.

04 - பள்ளியில் தறிபடுதல் பள்ளியில் உட்காருதல்.


👉 "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" ஏற்பட்ட ஒரு பெண்  பள்ளியிலே தங்கி இருப்பது ஹராமாக்கப்பட்டுள்ளது பள்ளியிலே கடந்து செல்வது நடந்து செல்லுவது அனுமதிக்கப்பட்டிருக்கிறது ஆனால் ஒரு இடத்திலே இருப்பது தங்குவது படுத்துக் கொள்ளுவது போன்றவைகள் ஹராமாக்கப்பட்டுள்ளது.

💬 மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கும் குளிப்பு கடமையானவருக்கும் நான் பள்ளியை ஹலால் ஆக்க மாட்டேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்        நூல்  -  அபூதாவுத்




05 - கஃபத்துல்லாவை தவாப் செய்தல்.

👉 "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" உடைய இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் கஃபத்துல்லாவை தவாப் செய்வதோ அது சுன்னத்தான தவாப்பாக இருந்தாலும் பர்லான  தவாபாக இருந்தாலும்  ஹய்ல் உடைய  நிலைமையில் அதனை தவாஃப் செய்வது ஹராமாகும்.

💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாவது பைத்துல்லாவை கஃபத்துல்லாவை தவாஃப் செய்வது தொழுகையைப் போன்றது என்றாலும் இதிலே உங்களுக்கு கதைப்பதை அல்லாஹுத்தஆலா ஹலாலாக்கியிருக்கிறான் எனவே கதைக்கக் கூடியவர் நலவைத் தவிர வேரெதையும் கதைக்க வேண்டாம்.   நூல் - ஹாக்கிம் 1/ 459

👉 எனவே ஒருவர் ஹஜ்ஜுடைய நேரத்தில் அல்லது உம்ராவுடைய நேரத்திலோ  "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" ஏற்பட்ட நிலைமையில் அவருக்கு தவாப் செய்ய முடியாது காரணம் தவாஃப் என்பது தொழுகையைப் போன்றது தொழுகையில் எவ்வாறு சுத்தமாக இருப்பது கட்டாயமோ? அதுபோல தவாப் செய்யும் போதும் இருக்க வேண்டும் என்றாலும் தொழுகையில் கதைப்பதற்கு அனுமதி இல்லை தவாப் செய்யும் போது கதைப்பதற்கு அனுமதி உண்டு. நலவை மட்டும் தேவையான விஷயத்தை மட்டும் கதைப்பதற்கு அனுமதி உண்டு.

💬 அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது அன்னவர்கள் கூறினார்கள்  நாங்கள் ஹஜ்ஜூக்காக வேண்டி சென்றிருந்தோம் "ஸரிப்" என்ற இடத்தை அடைந்தபோது எனக்கு மாதாந்த துரு ஏற்பட்டது எனவே நான் அழுது கொண்டிருந்தேன் அப்பொழுது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடத்திலே வந்தார்கள் உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? மாதாந்த குரு ஏற்பட்டு விட்டதா என்று கேட்டார்கள் நான் ஆம் என்று கூறினேன்  அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக இந்த விடயம் அல்லாஹ் ஆதமுடைய பெண் மக்களின் மீது கடமையாக்கிய ஒரு கர்மமாக இருக்கிறது எனவே ஒரு ஹாஜி செய்யக்கூடிய விடயங்கள் அனைத்தையும் நீங்கள் செய்யுங்கள் பைத்துள்ளாவை தவாப் செய்வதை தவிர என்று கூறினார்கள்.
 நூல் - புகாரி 290,   முஸ்லிம்-10218 

இன்னும் ஒரு அறிவிப்பில் "நீங்கள் சுத்தமாகும் வரைக்கும்" என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது.

👉 எனவே ஒரு "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" உடைய தொடக்கு ஏற்பட்ட பெண்கள் ஹஜ் உடைய ஏனைய எல்லா கடமையும் அவர்களுக்கு செய்ய முடியும் தவாப் செய்வதை தவிர அவர்கள் சுத்தமானதற்கு பின்னால் தவாஃபை செய்து கொள்ள முடியும்.

06 - இரத்தம் பள்ளியில் பட்டு விடும் என்று பயந்தால் பள்ளியை கடந்து செல்வதும் பள்ளியில் நடந்து செல்லுவது ஹராமாக்கப்பட்டுள்ளது.

👉அதாவது பெண்களுடைய அந்த மாதவிடாய் காலத்தில் அவர்களுடைய இரத்தங்கள் வடிந்து கொண்டிருக்க கூடிய ஒரு நிலைமை உள்ளது எனவே அப்படி வடியக்கூடிய இரத்தம் பள்ளியில் பட்டு விடும் என்று அஞ்சினால் அப்பொழுது அவர்களுக்கு பள்ளியை கடந்து செல்வதற்கோ பள்ளியில் நடந்து செல்வதற்கோ அனுமதி இல்லை அது அவர்களுக்கு ஹராம் ஆக்கப்பட்டுள்ளது.

07 - நோன்பு நோற்பது.

👉 "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" ஏற்பட்ட பெண்கள் ஃபர்லான மற்றும் சுன்னத்தான எந்த விதமான  நோன்பும் நோற்பது ஹராமாக்கப்பட்டுள்ளது.

💬  அபூ சயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு நீண்ட ஹதீஸில் ஒரு பெண் தங்களுடைய மார்க்க விஷயத்தில் கேள்வி கேட்ட  போது அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில்  பெண்களுக்கு மாதாந்த துரு ஏற்பட்டால் அவர்கள்  தொழுவதும் இல்லை நோன்பு பிடிப்பதும் இல்லையே? என்று ஒரு கேள்வியாக கேட்டு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த சட்டத்தை தெளிவுபடுத்தினார்கள்.
 நூல் - புகாரி 298, முஸ்லிம் - 80

👉 எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் அவர்களுக்கு "ஹய்ல்" அல்லது "நிபாஸ்" ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு தொழுகையை விடுவதற்கு அனுமதி இருக்கிறதோ அதேபோல நோன்பையும் விடுவதற்கு அனுமதி இருக்கிறது நோன்பு நோற்பது அவர்களுக்கு ஹராம் ஆக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பு :-  அப்படி  பர்லான  நோன்புகள் அவர்களுக்கு விடுபட்டால் அந்த நோன்புகளை அவர்கள் சுத்தமானதற்கு பின்னால் கட்டாயம் கலா செய்ய வேண்டும் தொழுகையை கலா  கலாச்செய்ய தேவையில்லை ஆனால் நோன்பை கட்டாயம் கலாச்செய்ய வேண்டும்.

💬 முஆத்  ரலியல்லாஹு அன் அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடத்திலே கேட்டேன் ஹய்ல் ஏற்பட்ட பெண்கள் நோன்பை கலா செய்ய வேண்டும் ஆனால் தொழுகையை கலா செய்ய தேவையில்லையே? என்று கேட்டபோது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கூறினார்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களோடு நாங்கள் இருக்கும் போது எங்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது அந்த நேரத்தில்  நோன்பை கலாச்செய்யும்படி நாங்கள் ஏவப்பட்டோம் தொழுகையை கலா செய்யும் படி நாங்கள் ஏவப்படவில்லை.  நூல் - புகாரி 315, முஸ்லிம் - 335

08 - உடலுறவில் ஈடுபடுதல்.

👉"ஹய்ல்" அல்லது "நிபாஸ்" ஏற்பட்டிருக்கும் காலத்தில் கணவனோடு உடலுறவு ஈடுபடுவது ஹராமாக்கப்பட்டுள்ளது.

💬மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."- (திருக்குர்ஆன் 2:222)

👉 குறிப்பு -  உடலுறவைத் தவிர ஏனைய அனைத்தும் முத்தமிடுவது கட்டிப்பிடிப்பது கட்டி அணைப்பது இவ்வாறான விடயங்கள் ஹலால் என்பதாக இமாம்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

💬 அப்துல்லாஹ் இப்னு சஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்டார்கள் என்னுடைய மனைவி மாதவிடாய் காலத்தில் இருக்கும்போது எனக்கு என்னுடைய மனைவியிடம் இருந்து எதுவெல்லாம் ஹலால் ஆகும் என்று கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேட்டிக்கு மேலால் இருக்கும் அனைத்தும் உங்களுக்கு ஹலால் என்று கூறினார்கள்.

நூல் - அபூ தாவுத் - 212


  Writer -  Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை