💙💦சுன்னத்தான குளிப்புக்கள்💦💙
💬 இஸ்லாமிய மார்க்கம் சுத்தத்தை மிகவும் வலியுறுத்துகிறது அந்த அடிப்படையில் பர்ழான குளிப்புகளை தாண்டி சுன்னத்தான பல குளிப்புகளை கடமையாக்கி இருக்கிறது அப்படிப்பட்ட சில சுன்னத்தான குறிப்புகளை தான் இந்த பாடத்தில் நாங்கள் ஒவ்வொன்றாக பார்க்கப் போகின்றோம்.
01-ஜும்மா உடைய குளிப்பு💗
👉 ஒரு முஸ்லிமான ஒருவர் ஜும்மா நாளில் குளிப்பது சுன்னதாகும்.
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் உங்களில் யாராவது ஜும்மா தொழுகைக்கு செல்வதற்கு நாடினால் அவர் குளித்துக் கொள்ளட்டும். நூல் - புகாரி - 837, முஸ்லிம் - 844.
💬 மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யாராவது ஜும்ஆ நாளில் உளூ செய்தால் அது அவருக்கு சிறந்ததாக இருக்கிறது மேலும் யாராவது குளித்துக் கொண்டால் குளிப்பு மிகச் சிறந்ததாய் இருக்கிறது. நூல் - திருமதி- 497.
👉எனவே ஜும்மா தொழுகைக்காக வேண்டி செல்லக்கூடியவர்கள் குளித்துக் கொள்வது ஒரு வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக இருக்கிறது மக்கள் ஒன்றுகூடிய இடத்தில் மனமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி உடலில் வேர்வை நாற்றங்கள் இப்படியான எந்த விதமான அசோகரியங்களும் இரிக்காமல் இருப்பதற்காக வேண்டி குளிப்பை சுன்னத்தாகப்பட்டுள்ளது.
💗💧ஜும்மா நாளில் குளிப்பதற்கான நேரம்💧💗
👉 ஜும்மா நாளில் சுபஹுடைய அதான் சொன்னதிலிருந்து ஜும்மாவுக்கு செல்வதற்கு நெருக்கமாகும் வரைக்கும் குளிப்பது சுன்னதாகும் அதிலும் ஜும்மா உடைய தொழுகைக்கு நெருக்கமாய் குளித்துக் கொள்வது மிகவும் சிறந்த ஒன்றாகும்.
02 - இரண்டு பெருநாள் குறிப்புகள்.
👉 பெருநாள் தினங்களில் தொழுகைக்கு செல்வதற்கு முன்னால குளித்துக்கொள்வது சுன்னதாகும்.
👉 அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக அப்துல்லா இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நோன்பு பெருநாள் உடைய நாளில் தொழுகைக்கு போவதற்கு முன்னால் குளித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள்.
நூல் - முஅத்தா - 1/1 77
💗💦பெருநாள் குளிப்பு குளிப்பதற்கான நேரம்💦💗
👉பெருநாள் உடைய குளிப்பு குளிப்பதற்கான நேரம் பெருநாளுடைய நடு இரவின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னால் வரையும் குளித்துக் கொள்ளலாம்.
03 - சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது குளித்துக் கொள்ளுதல் சுன்னத்தாகும்.
👉 ஜும்மா தொழுகையில் மக்கள் ஒன்று கூடுவதன் காரணமாக அங்கே குளிப்பு சுன்னத்தாகப்பட்டுள்ளது கிரகண தொழுகைகளுக்காக வேண்டியும் மக்கள் ஒன்று கூடப்படுகிறது எனவே அதை நேர்பிடித்து கிரகணத் தொழுகையிலும் அதற்கு செல்வதற்கு முன்னால குளித்துக் கொள்வது சுன்னத்தாகப்பட்டுள்ளது.
👉 கிரகணம் ஏற்படும்போது குளிக்க வேண்டிய குளிப்புக்கான நேரம் எப்பொழுது கிரகணம் ஆரம்பிக்குமோ அதிலிருந்து எப்பொழுது அது முடியுமோ அது வரைக்கும் குளித்துக் கொள்ளலாம்.
04 - மலை தேடி தொழுவதற்காக வேண்டி செல்வதற்கு முன் குளித்துக் கொள்ளுவது சுன்னத்து.
👉 கிரகணத் தொழுகைக்காக வேண்டி குளித்துக்கொள்வது சுன்னத் என்பதன் மீது நேர் பிடிக்கப்பட்டுள்ளது.
05 - மையத்தை குளிப்பாட்டியவர் குளித்துக் கொள்வது சுன்னத்து.
💬 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் யாராவது ஒரு மையத்தை குளிப்பாட்டினால் அவர் குளித்துக் கொள்ளட்டும்.
ஆதாரம் -
06 - ஹஜ்ஜூக்காக அல்லது உம்ராவுக்காக வேண்டி இஹ்ராம் கட்டுவதற்கு முன்னால் குளித்துக் கொள்ளுவது சுன்னதாகும்.
💬 செய்துபுனு சாபித் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை அன்னவர்கள் இஹ்ராமுக்காக ஆடையை கலையும் போது கலைந்து மேலும் குளித்தார்கள்.
07 - மக்காவுக்குள் நுழைவதற்காக வேண்டி குளித்துக் கொள்ளல்.
💬 இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது அன்னவர்கள் மக்காவை முன்னோக்கி வந்தால் தூ த்துவா என்ற இடத்திலே தெறி பட்டு சுபஹை தொழுதுவிட்டு குளித்துவிட்டு மக்காவுக்கு பகல் நேரத்திலே நுலையக் கூடிடவர்களாக இருக்கிறார்கள், மேலும் இவ்வாறு தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள் என்றும் ஞாபகம் படுத்தினார்கள்.
நூல் - புகாரி 1478 , முஸ்லிம் 1259
08 - அரபாவில் தங்குவதற்காக வேண்டி செல்லும்போது குளிப்பது சுன்னத்தாகும்.
👉 அரபா நாலில் குளிப்பதாக இருந்தால் சூரியன் நடு உச்சியில் இருந்து சாய்ந்ததற்கு பின்னால் குளிக்க முடியும்.
💬 நாபிஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது நிச்சயமாக அப்துல்லா இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன்னால் இஹ்ராமுக்காக வேண்டி குளிப்பார்கள் மேலும் மக்காவுக்கு நுழைவதற்காக வேண்டி குளிப்பார்கள் மேலும் அரஃபாவில் இரா தரிப்பதற்காக வேண்டியும் குளிப்பார்கள். நூல் - முஅத்தா - 1/322
09 - ஐயாமுத்தஷ்ரீக்குடைய மூன்று நாட்களும் ஜம்ராவுக்கு கல்லெரிவதற்காக செல்லும் போது குளிப்பது சுன்னதாகும்.
👉அய்யாமுத் தர்ஷிப் உடைய ஒவ்வொரு நாளும் ஜெம்ராக்களில் கல்லெறிவது சுன்னத்தாகும் எனவே அந்த கல்லெரிவதற்காக வேண்டி வெளியாகிச் செல்லும் போது குளிப்பது சுன்னதாகும்.
10 - மதீனாவுக்கு நுழைவதற்காக வேண்டி குளிப்பது சுன்னதாகும்.
👉 மதீனாவுக்கு நுழைவதற்கு முன்னால் குளிப்பது சுன்னத்து என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை மாறாக மக்காவுக்கு நுழைவதற்கு முன்னாள் குளிப்பது சுன்னத் என்ற அடிப்படையில் நேருபிடிக்கப்பட்டுள்ளது அவ்விரண்டும் கண்ணியத்துக்குரிய இடங்களாக இருப்பதினால்.
👉 எனவே குளிப்பது லேசாக இருக்குமாக இருந்தால் மதினாவுக்குள் நுழைவதற்கு முன்னால் குளிப்பது கொள்வது சுன்னதாகும்
அதுவும் அவருக்கு கஷ்டமாக இருந்தால் மதினத்து பள்ளிக்குள் நுழைவதற்காக வேண்டி குளித்துக்கொள்வது சுன்னதாகும்.
Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை