பேருகால இரத்தப்போக்கின் "நிபாஸ்" சட்டங்கள்.
💗குளிப்பை கடமையாக்கும் காரியங்களில் மூன்றாவது💗
03 - பிள்ளை பெற்றெடுப்பதாகும்.
👉 ஒரு பெண் தன்னுடைய கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பெற்றெடுத்தால் அப்படி பெற்றெடுத்ததற்கு பின்னால் எந்த விதமான இரத்தமும் அந்த பெண்ணுக்கு வெளியாகவில்லை என்றால் அவள் குளிப்பு கடமையானவள் என்ற சட்டத்துக்கு வருகிறான் எனவே அவள் குளித்துக் கொண்டு ஏனைய மார்க்க கடமைகளை செய்ய முடியும்.
👉அப்படி இல்லாமல் பிள்ளை பிறந்ததற்கு பின்னால் தொடரான இரத்தப்போக்கு இருக்குமாக இருந்தால் அதற்கு அரபியில் "நிஃபாஸ்" என்று சொல்லப்படும் எனவே இவ்வாறு இரத்தம் போவதற்கு அந்தக் காலத்தில் அந்தப் பெண் கவனிக்க வேண்டிய சட்டங்களைப் பற்றி இந்த பாடத்தில் தெளிவாக பார்ப்போம்.
👉மேலும் பிள்ளையை சுமந்து கொண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏதாவது இரத்தங்கள் வெளியானால் அல்லது பிள்ளையோடு சேர்ந்து வெளியாக கூடிய அந்த இரத்தம் "நிபாஸ்" உடைய இரத்தம் என்று கணக்கெடுக்கப்பட மாட்டாது அது பசாதான கெட்ட ரத்தமாகும் எனவே அந்த இரத்தம் வந்தால் சுத்தமாகி விட்டு தொழுகை போன்ற கடமைகளை செய்ய வேண்டும் அவ்வாறு அவர்களுக்கு அந்த காலத்தில் தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் விடுபட்ட தொழுகைகளை கட்டாயம் கலா செய்ய வேண்டும்.
💗பேரு கால இரத்தம் நிஃபாஸ் உடைய இரத்தம் அதனுடைய ஆகக் குறைந்த ஆகக்கூடிய மற்றும் பெரும்பாலான காலங்கள் எது?💗
01 - ஆக குறைந்த காலம் :- ஒரு வினாடி.
👉 அதாவது ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததற்கு பின்னால் ஒரு வினாடியில் அந்த இரத்தம் துண்டிக்கப்பட்டு இரத்த போக்கு நின்று விட வாய்ப்புகள் உண்டு அவ்வாறு நின்று விட்டால் அதற்கு பின்னால் அந்த பெண் குளித்து சுத்தமாகி தன்னுடைய மார்க்க கடமைகளில் ஈடுபட வேண்டும்.
02 - மிக அதிகமான காலம்:- 60 நாட்கள்.
03 - நடுத்தரமான காலம்:- 40 நாட்கள்.
👉 பெரும்பாலான பெண்களுக்கு 40 நாட்கள் தொடராக இந்த பெருகால இரத்தப்போக்கு தொடர்ந்திருக்கும்.
👉 ஆக கூடிய 60 நாளைக்கான அதிகமாக இரத்தம் போய்க்கொண்டிருந்தால் அது "இஸ்திஹாழா"வுடைய இரத்தமாக கணக்கெடுக்கப்படும் எனவே "இஸ்திஹாழா"வுடைய இரத்தப்போக்கு போகக் கூடிய பெண் அவருக்கு என்ன சட்டம் சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த சட்டத்தை பேணிக் கொள்ள வேண்டும்.
👉 அதாவது அந்த "இஸ்திஹாழா"வுடைய காலத்தில் அவர்கள் சுத்தமாகி விட்டு கட்டாயம் தொழுகையை தொழ வேண்டும் நோன்பை பிடிக்க வேண்டும் அவைகளை விடுவதற்கு அனுமதி இல்லை.
👉ஒருவேளை ஒரு பெண் கர்ப்ப காலத்தில் அந்த பெண்ணுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது ஹைலுடைய காலமாகிய மிகக் குறைந்த காலம் ஒரு நாள் தொடராக இருக்கு அதே சமயத்தில் ஹைலுடைய கூடிய காலமாகிய 15 நாட்களைக் காண அதிகமாகாமல் இருந்தால் இதனை ஹைலுடைய இரத்தமாக கணக்கெடுக்கப்படும் எனவே அந்தப் பெண் தொழுகைகளை விடுவதற்கும் நோன்பை விடுவதற்கும் ஒரு ஹைல் ஏற்பட்ட பெண்ணுக்கு எதுவெல்லாம் ஹராமோ அந்த விடயங்களை பேணிக்கொள்ள வேண்டும்.
👉 அல்லது ஹைலுடைய காலத்தை காண
குறைவான காலத்தில் அந்த இரத்தம் துண்டித்து விட்டால் அல்லது ஹைலுடைய காலமான மிக அதிகமான காலத்தை காண அதாவது 15 நாட்களைக் காண அதிகமான காலம் தொடராக இரத்தம் வந்து கொண்டிருந்தால் இது இஸ்திஹாழா உடைய நோயின் காரணமாக வரக்கூடிய இரத்தம் என்று கவனிக்கப்படும் எனவே அந்த காலத்தில் பேணவேண்டிய விடயங்களை முறையாக பேணி செய்து கொள்ள வேண்டும்.
💗 ஒரு தாய் குழந்தையை வயிற்றில் சுமக்கும் ஆகக் குறைந்த காலம் ஆறு மாதங்கள் எனவே ஆறு மாதத்தில் ஒரு குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
👉 பின்வரும் இரண்டு ஆயத்துக்களை வைத்து இந்த விளக்கம் எடுக்கப்படுகிறது.
💬 முதலாவது வசனம் 👉 "அதனை சுமப்பதும் அதனை "பிள்ளையை" பால் குடி மரக்க வைப்பதும் 30 மாதங்கள்" என்று ஒரு குர்ஆன் ஆயத்திலும்.
💬 இரண்டாவது வசனத்தில் 👉 " தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முழுமையாக இரண்டு வருடங்கள் பால் கொடுப்பார்கள்" என்றும் வந்துள்ளது.
👉 முதலாவது ஆயத்தில் வந்தது போல் முப்பது மாதங்கள் என்றால் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்களும் வருகிறது எனவே அல்லாஹ் சுமப்பதற்கும் பால்குடி மரப்பிப்பதற்கும் இடையில் முப்பது மாதங்கள் அதாவது இரண்டு வருடமும் 6 மாதங்களும் என்று குறிப்பிட்டுள்ளான் இந்த இரண்டு வருடமும் 6 மாதங்களிலும் பால்குடிப்பதற்கு அல்லாஹுத்தஆலா இரண்டு வருடங்களை ஆக்கியுல்லான் எனவே இரண்டு வருடங்கள் பால்குடி என்றால் அந்தப் பெண் அந்த குழந்தையை 6 மாதங்கள் தான் ஆக குறைந்த அளவுக்கு சுமந்திருக்க முடியும் என்பதை இந்த குர்ஆன் ஆயத்துக்களின் மூலமாக விளங்கெடுக்கப்படுகிறது .
👉 ஆகவே ஒரு பெண் ஒரு சிசுவை தன்னுடைய வயிற்றிலே ஆறு மாதங்கள் சுமந்து ஆறு மாதங்களில் அந்த பிள்ளையை நல்ல ஆரோக்கியமாக பெற்றெடுக்க முடியும் என்பதற்கு இது ஒரு ஆதாரமாக இருக்கின்றது.
👉 ஒருவேளை ஒரு பெண் திருமணம் முடித்து ஆறு மாதங்களை காண மிகக் குறைந்த காலத்தில் பிள்ளையை உயிரோடு பெற்றெடுத்தால் அந்தப் பிள்ளை தற்பொழுது திருமணம் முடித்த கணவனுக்கு உரியது இல்லை என்று தீர்ப்பு சொல்லப்படும் எனவே அந்தப் பிள்ளைக்கு இந்த கணவன் தந்தையாக முடியாது வாரிசாகவும் மாட்டார்.
👉 நடுத்தரமான அல்லது பெரும்பாலான பிள்ளையை கருவறையில் சுமக்க கூடிய காலம் 9 மாதங்கள் இது நடைமுறையில் இருக்கக்கூடிய பெண்களுடைய வளமையை வைத்து கவனிக்கப்படுகிறது ஒன்பது மாதத்தை காண சில நாட்கள் கூடவும் அல்லது சில நாட்கள் குறையவும் சந்தர்ப்பங்கள் உள்ளது.
👉 ஒரு பிள்ளையை வயிற்றில் சுமப்பதற்கான ஆகக்கூடிய காலம் நான்கு வருடங்கள் இது நடப்பது மிக மிக அபூர்வமானதாக இருக்கின்றது என்றாலும் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது எமது மத்ஹபின் இமாம் ஆகிய இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அவர்களை அவர்களுடைய தாய் நான்கு வருடங்கள் கருவில் சுமந்து பெற்றெடுத்தார்கள் எனவே இவ்வாறு நடப்பது மிகவும் அபூர்வமான ஒரு விடயமாக இருக்கிறது.
Writer - Al-Aalim Al-Usthaz S.M.Fairooz Al-Makky

கருத்துகள் இல்லை