FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

வுழூவின் பர்லுகள் - பாடம் - 11

Share:

வுழூவின் பர்லுகள்

வுழூ என்பது சிறு தொடக்கில் இருந்து சுத்தமாகும் ஒரு முறையாகும். வுழூயின்றி இஸ்லாத்தில் சில இபாதத்துகள் செய்ய முடியாது குறிப்பாக தொழுகைக்கு கட்டாயம் வுழூ வேண்டும். 

 வுழூ சம்பந்தமாக குர்ஆனிலே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் 

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)

 வுழூவுடைய பர்ளுகள் ஆறு 

01 - நிய்யத்து வைத்தல் 

👉ஒவ்வொரு  வணக்கத்துக்கும் நிய்யத்து கடமையாகும் அதனூடாகத்தான்  ஒவ்வொரு இபாதத்தும் வேறு பிரித்து அறியப்படுகிறது நிய்யத்தை அல்லாஹ்வுக்காக வேண்டி மட்டும் வைக்கும் போது அந்த இபாதத்தை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் எனவே ஒவ்வொரு அமலுக்கும் நிய்யத்து வைப்பது கட்டாயமாக இருக்கிறது.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக அமல்கள் எல்லாம் நிய்யத்தை கொண்டு இருக்கிறது நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நிய்யத் வைத்தது கிடைக்கும். 

நூல் :- புகாரி, முஸ்லிம்.

💧நிய்யத் என்றால்? 👉  ஒரு விடயத்தை செய்வதற்கு  நாடுவதோடு அதனை செய்கிறது. 

💧நிய்யத் வைக்கும் இடம்👉 உள்ளத்தினால் நிய்யத்து வைக்க வேண்டும்  அந்த நியத்தை நாவினால் மொழிவது சுன்னத் உள்ளத்தினால் நினைப்பது கட்டாயமாக இருக்கிறது. 

💧எவ்வாறு நிய்யத்து வைப்பது? 👉 ஒருவர் வுழூ செய்யும் போது மனதால் 1. நான் வுழூவுடைய ஃபர்ளை நிய்யத்து வைக்குகிறேன் அல்லது 2.  ஹதசை(حدث) நீக்குவதை நிய்யத்து வைக்குகிறேன் அல்லது 3.  தொழுகையை ஆகுமாக்க தேடுவதை நிய்யத்து வைக்கிறேன் என்ற இந்த முறைகளில் நிய்யத்து வைக்க வேண்டும். 

💧எப்பொழுதும் நிய்யத்து வைக்க வேண்டும்? 👉 ஒருவர் வுழூ  செய்யும் போது நிய்யத்து வைக்க வேண்டிய நேரம் முதலாவது ஃபர்லான உறுப்பாகிய முகத்தை கழுக ஆரம்பிக்கும் போது முகத்தில் தண்ணீர் பட ஆரம்பிக்கும் போது நிய்யத்து வைக்க வேண்டும்.

02 - முகத்தை முழுமையாக கழுகுதல்.

💧முகம் கழுகுவதனுடைய முறை 

👉 முகத்துடைய மேல்பகுதி முடி முளைக்கக் கூடிய பகுதியில் இருந்து அடியில் தொண்டைக் குலி வரைக்கும் நீலத்தால் கழுவப்பட வேண்டும். ஒரு காதில் இருந்து மற்ற காது வரைக்கும் அகலத்தால் கழுவப்பட வேண்டும்.

💧முகம் கழுகும்போது கட்டாயமாக கவனிக்கப்பட வேண்டியவைகள். 

👉கண் புருவங்களில் இருக்கக்கூடிய முடிகள், மீசையில் இருக்கக்கூடிய முடிகள், தாடி முடி, பக்கவாட்டியில் இருக்கக்கூடிய முடிகள்,  முகத்துடைய வட்டத்துக்குள்ளால் வரக்கூடிய அனைத்து முடிகளும் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும்.

👉 தாடி விஷயத்தில் அடர்த்தியான தாடியாக இருந்தால் வெளியில் மாத்திரம் கழுகினால் போதுமானது அடர்த்தி குறைவான தாடியாக இருந்தால் அதனை உள்ரங்கமும் தேய்த்து கழுக வேண்டும், அடர்த்தியா? அடர்த்தி இல்லையா? என்று பார்க்கும் முறை, முடிகள் கனமாக இருந்து  முகத்தின்  தோல் விளங்காத அளவுக்கு அடர்த்தியாக முடி இருந்தால் அதற்கு வெளிறங்கம் மட்டும் கழுவினால் போதுமானது.

03-இரண்டு கைகளையும்  முழங்கை உட்பட கழுவுதல்.

அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு

அவர் வுழூ செய்து, முகத்தைக் கழுவி,வுழூவை பூரனமாக்கினார், பின்பு வலது கை மேல் கையை அடையும் வரை, இடது கை மேல் கையை அடையும் வரை, பின்னர் அவரது தலையைத் மஸ்ஹ் செய்து, பின்னர் அவரது வலது காலைத் தாடையை அடையும் வரை கழுவினார். , பிறகு தனது இடது காலைக் கால் பாதம் அடையும் வரை கழுவிவிட்டு, பிறகு அவர் கூறினார்: இப்படித்தான் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வுழூ செய்வதைப் பார்த்தேன்.

நூள் முஸ்லிம்

👉 அனைத்து முடி மற்றும் தோலையும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.ஒருவரின் விரல் நகங்களுக்கு கீழே தண்ணீர் வராமல் தடுக்கும் அழுக்கு அல்லது மோதிரம் இருந்தால், வுழு செல்லாது.

அப்துல்லாஹ் பின் அம்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்: 

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் மக்காவிலிருந்து மதீனாவுக்கு திரும்பி வந்தோம் - , நாங்கள் வரும் வழியில் தண்ணீர் இருந்தபோது, ​​​​சிலர் அஸர் தொழுகைக்கு விரைந்தனர், அவர்கள் அவசரமாக வுழு செய்தார்கள், அவர்களின் குதிகால் தண்ணீர் தீண்டப்படாமல் அசைந்து கொண்டிருந்த போது நாங்கள் அவர்களிடம் வந்தோம், மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருப்பிலிருந்து குதிகால்களுக்கு கேடு உண்டாகட்டும், வுழூவை  நன்றாகச் செய்யுங்கள்.

நூள்  முஸ்லிம்/புஹாரி

👉 கழுவப்பட்ட உறுப்பின் சிறிதளவு பகுதி கழுவப்படாமல் இருந்தாலும் வுழூ கூடாது

கைகளை கழுவும் முறை

👉ஹவுல் போன்றதில் கையை போட்டு கழுவுவதாக இருன்தால் விரல்களில் தண்ணீர் எடுத்து மேலிருந்து முழங்கை வரை தண்ணீரை ஓட விட்டு கழுக வேண்டும்,

👉நீரை யாராவது ஊற்றினால் அல்லது டெப் போன்றதில் வுழூ செய்தால் முழங்கையை முதலாவது நீருக்கு பிடிக்க வேண்டும் முலங்கையில் இருந்து விரல் வரைக்கும் தண்ணீரை ஓட விட்டு கழுக வேண்டும்.

👉மேலதிகமாக முளைத்த விரலோ அல்லது கையோ இருந்தால் அவைகளையும் கழுவுவது கட்டாயமாகும்.

👉மேலும் கை துண்டிக்கப்பட்டு இருந்தால் எந்த இடத்தில் துண்டிக்கப்பட்டு இருக்கிறதோ அதிலிருந்து கையுடைய பற்லான பகுதிகளை கழுக வேண்டும் அல்லது முழங்கைக்கு மேலால் துண்டிக்கப்பட்டிருந்தால் அந்த துண்டிக்கப்பட்ட இடத்தை கட்டாயம் கழுக வேண்டும்.

04-தலையை மஸ்ஹு செய்தல்.

👉 மஸ்ஹு செய்தல் என்றால் [ஈரக்] கையுடன் தலையை  தடவுதல்,

👉 தலைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு முடியையாவது மஸ்ஹு செய்து விட்டால் போதுமானதாகும்,

👉 தலையில் முடி இல்லாத ஒருவர் தலைக்கு உட்பட்ட பகுதியில் ஈர கையுடன் தடாவினால் மஸ்ஹு போதுமானது,

👉 ஹதீஸ் - 

       நிச்சயமாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூ செய்தார்கள் மேலும் முன்னெற்றியை தடவினார்கள் மேலும் அவர்களின் தலப்பாகையின் மீதும் தடவினார்கள்.

 அறிவிப்பாளர் -  அல்முஹீரா இபுனு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு 

 நூல் - முஸ்லிம்- 279

👉 ஒருவர் தலையை மஸ்ஹு செய்வதற்காக தலை முழுவதையும் கழுகினாலோ அல்லது சிலதை கழுகினாலோ அது மஸ்ஹு செய்ததாக ஆகும்.

05-இரு கால்களையும் இரு கணுக்கால் வரை கழுகுதல்.

👉 இரண்டு கால்களையும் கணுக்கால் வரை முழுமையாக கரழுகப்பட வேண்டும் அதில் இருக்கக்கூடிய முடிகள் உட்பட கழுகப்பட வேண்டும்.

06-மேல் கூறப்பட்ட ஒழுங்கு முறைப்படி ஒவ்வொன்றையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்ய வேண்டும்.

👉 வுழூ செய்யும் பொழுது முதலாவது நிய்யத்து வைத்தல் இரண்டாவது முகம் கழுவுதல் மூன்றாவது கைகளை கழுவுதல் நான்காவது தலையை மசுகு செய்தல் ஐந்தாவது கால்களை கழுவுதல் இந்த ஒழுங்கு முறைப்படி செய்வது கட்டாயமாகும் இதுதான் ஆறாவது ஃபர்லாக இருக்கிறது.

👉 எனவே அதில் ஒன்றை முந்தியோ அல்லது பிற்படுத்தியோ மாற்றி செய்தால் வுழூ சரி வர மாட்டாது.

கருத்துகள் இல்லை