FAIROOZ MAKKI FM

FAIROOZ MAKKI FM எனும் எமது இந்த பக்கத்தின் ஊடாக இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஷாபி மத்ஹப் அடிப்படையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவே நாமும் கற்றுக் கொள்வோம் பிறருக்கும் கற்றுக் கொள்வதற்கு உதவுவோம் வஸ்ஸலாம்.By Moulavi Al-Usthaz Fairooz Makky (எமது இந்த சேவையை தொடர்ந்து செய்வதட்கு நீங்கள் ஊக்கம் அலிக்க விரும்பினால் பின்வரும் எமது கணக்குக்கு தங்கலது பெருமதி மிக்க ஹதியாக்களை அனுப்பி வைக்கலாம் - BOC BANK / AC NO :- 76774555 / NAME :- S.M.FAIROOS /BRANCH :- NAINATIVU- JAZAAKALLAHU HAIRA)

சுத்தத்தின் வகைகள் - பாடம் - 03

Share:

 


சுத்தத்தின் வகைகள்

சுத்தம் இரண்டு வகைப்படும்:

  1. நஜிஸில் இருந்து சுத்தமாகுதல்
  2. தொடக்கிலிருந்து  சுத்தமாகுதல்

நஜீஸ் என்றால் என்ன?

👉பொதுவாக அருவருப்பான அனைத்திற்கும் நஜீஸ் என்று சொல்லப்படும்.

👉மார்க்க ரீதியாக நஜீஸ் என்று சொன்னால், தொழுகை செல்லுபடியாகாமல் போகக்கூடிய இரத்தம், மலம், சிறுநீர் போன்றவைகளைக் கூறலாம்.

👇👇👇👇👇👇👇👇

சுத்தத்தின் வகைகள் YouTube video 



நஜீஸான பொருட்களில் மிக முக்கியமான ஏழு பொருட்கள்:

01- மதுபானம் மற்றும் போதை தரக்கூடிய ஒவ்வொரு பொருட்களும்:

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்: "நிச்சயமாக சாராயமும் சூதாட்டமும் நஜீஸான வெறுக்கத்தக்க விடயமாகும். அவை ஷைத்தானுடைய செயலாகும்."

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "ஒவ்வொரு போதை தரக்கூடிய பொருளும் மதுபானம் ஆகும். ஒவ்வொரு மதுபானமும் ஹராமாகும்."

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2003

02- நாய் மற்றும் பன்றியின் நஜீஸ்:

இவ்விரண்டும் நஜீஸானவைகள். இவை ஈரமாக உள்ள நிலையில் மேனியிலோ, ஆடையிலோ அல்லது ஒரு இடத்திலோ பட்டுவிட்டால், அவைகளை ஏழு முறை கழுவ வேண்டும். அதில் ஒரு முறை மண்ணை கொண்டு கழுவ வேண்டும். இது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

"உங்களில் ஒருவரின் பாத்திரத்தில் நாய் தண்ணீர் குடித்து விட்டால், அந்த பாத்திரத்தை ஏழு முறை கழுவுவதின் மூலம், அதில் ஒரு முறை மண்ணை கொண்டு கழுவுவதின் மூலம் சுத்தமாகிறது."

நூல்: தாரகுத்னி 65/1 அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

03- செத்த பிராணி:

அதாவது, இஸ்லாம் மார்க்கம் கூறியபடி அறுக்கப்படாமல் இறந்த அனைத்து பிராணிகளும் நஜீஸ் ஆகும். அவைகளை சாப்பிடுவதும் ஹராமாகும்.

அந்த பட்டியலில் அல்லாஹ்வுடைய பெயரைச் சொல்லப்படாமல் அறுத்தவைகளும், ஏனைய கடவுளுடைய பெயரைச் சொல்லப்பட்டு அறுக்கப்பட்ட பிராணிகளும் சேரும்.

இது சம்பந்தமாக அல்லாஹ் கூறும்போது:

"செத்த பிராணிகள் உங்களுக்கு ஹராம் ஆக்கப்பட்டுள்ளது" என்று சூரா அல்மாயிதா மூன்றாம் வசனத்தில் கூறுகிறான்.

மேலும்,

"அல்லாஹ் அல்லாதவற்றுக்கு அறுக்கப்பட்டவைகளும் ஹராம்" என்பதாக சூரா அல்மாயிதா மூன்றாம் வசனத்தில் கூறுகிறான்.

செத்த பிராணிகளில் எல்லாமே நஜீஸ் ஆக இருந்த போதிலும், மூன்று செத்த பிராணிகளை நஜீஸ் இல்லை என்றும், சுத்தமானது என்றும் இஸ்லாம் விலக்கி உள்ளது.

  1. ஒரு மனிதன் இறந்து விட்டால், அவனுடைய உடல் நஜீஸ் ஆக மாட்டாது. அது சுத்தமானது. அதைத் தொடலாம், கழுவலாம், தூக்கலாம் எல்லாம் செய்யலாம்.

அல்லாஹ் சூரா அல் இஸ்ரா 80 ஆவது வசனத்தில்,

"ஆதமுடைய சந்ததியை நாம் கண்ணியப்படுத்தி உள்ளோம்" என்று கூறுகிறான்.

எனவே, அந்த மனிதன் உயிரோடு இருக்கும் பொழுதும் அவன் கண்ணியமானவன் தான், அதற்கு பின்னாலும் கண்ணியமானவன் தான்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

"அல்லாஹ் மிகத் தூய்மையானவன். நிச்சயமாக முஸ்லிம் அசுத்தமாக மாட்டான்."

நூல்: அல் புகாரி 279 ஆவது ஹதீஸ்

மேலும் புகாரியிலே பதிவு செய்யப்பட்டுள்ளது:

"முஸ்லிமானவன் உயிரோடு இருக்கும்போதும், மௌத் ஆனபோதும் நஜீஸ் ஆக மாட்டான்" இந்த செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

  1. மற்றும் 3. வெட்டுக்கிளியும், மீனும் இவ்விரண்டும் சுத்தமாக்கப்பட்டுள்ளது. அதேபோல அவைகள் செத்ததற்கு பின்னால் அவைகளை உண்ணுவதும் ஹலால் ஆக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக்கூடிய செய்தி இப்னுமாஜா எனும் கிரந்தத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளது: "உங்களுக்கு இரண்டு செத்தவைகளும், இரண்டு இரத்தங்களும் ஹலால் ஆக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு செத்தவைகள் ஒன்று மீன், இரண்டாவது வெட்டுக்கிளி. இரண்டு இரத்தங்கள் என்றால், பல்லு குத்தியும், ஈரலும்."

04- ஓடக்கூடிய இரத்தம் மற்றும் சேல்:

அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

"அல்லது சிந்தப்பட்ட இரத்தம் அல்லது பன்றி இறைச்சி, அது ஒரு அருவருப்பானது."

நஜீஸ் இல்லாத இரண்டு இரத்தங்கள்:

  1. மண்ணீரல்
  2. கல்லீரல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக்கூடிய செய்தி இப்னுமாஜா எனும் கிரந்தத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளது:

"உங்களுக்கு இரண்டு செத்தவைகளும், இரண்டு இரத்தங்களும் ஹலால் ஆக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு செத்தவைகள் ஒன்று மீன், இரண்டாவது..."

05- மனித சிறுநீர் மற்றும் மலம், விலங்குகளின் சிறுநீர் மற்றும் மலம்:

"ஒரு காட்டறிப்பி மசூதியில் சிறுநீர் கழித்தார், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - அதன் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றவும்."

06- விலங்கு உயிருடன் இருக்கும் போது அதிலிருந்து பிரிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் நஜீஸாகும்:

"விலங்குகளிலிருந்து துண்டிக்கப்பட்டவை இறந்தவையாகும்."

இறைச்சியாக உண்ணப்படும் விலங்குகளின் முடி மற்றும் இறகுகள் விதிவிலக்கு செய்யப்படுகிறது, ஏனெனில் அவை தூய்மையானவை.

"வெள்ளாட்டின் உரோமங்கள், [ஒட்டகையின்] உரோமங்கள், [செம்மறியாட்டின்] உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான்."

07- இறைச்சி உண்ணப்படாத விலங்குகளின் பால்:

கழுதை போன்றது, ஏனெனில் அதன் பால் அதன் சதையைப் போன்றது, மேலும் அதன் சதை தூய்மையற்றது.

கருத்துகள் இல்லை