முஸ்லிம்களுக்கு பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட பாத்திரங்கள் எது?
பொதுவாக பாத்திரங்கள் பல மூல பொருட்களினால் செய்யப்படுகிறது களிமண், இரும்பு, செம்பு, பித்தளை, தங்கம், வெள்ளி இதுபோல் பல கணிப்பொருட்களினாலும் கல்லு போன்றவைகளினாலும் பாத்திரங்கள் செய்யப்படுகிறது இவைகளில் மார்க்கம் முஸ்லிம்களுக்கு தடை செய்த பாத்திரங்கள்
01} தங்கப் பாத்திரம் மேலும் வெள்ளிப் பாத்திரங்களாகும்.
சாப்பிடக்கூடிய பாத்திரம் ஏனைய தேவைகளுக்கு உபயோகிக்கப்படக்கூடிய பாத்திரங்கள் இவைகளில் தங்கப் பாத்திரமும் வெள்ளிப் பாத்திரமும் முஸ்லிம்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை பாவிப்பது ஹராம் என்பதற்கான ஆதாரம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்
💬பட்டு ஆடைகளை நீங்கள் அணிய வேண்டாம் மேலும் தங்கம் வெள்ளி பாத்திரங்களிலே நீங்கள் குடிக்கவும் வேண்டாம் அவைகளுடைய தட்டிலே நீங்கள் சாப்பிடவும் வேண்டாம் அவ்விரண்டும் உலகத்திலே அவர்களுக்கு {காபிர்களுக்} குரியது எங்களுக்கு { முஸ்லிம்களுக்கு} ஆஹிராவிலே அவைகள் உரியது💬
அறிவிப்பாலர் - குதைபா இபுனு எமானி ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள் புகாரி மற்றும் முஸ்லிம்
இது போன்ற ஹதீஸின் ஊடாக நாங்கள் தங்கம், வெள்ளிப் பாத்திரங்களைப் பாவிப்பது ஹராம் என்பதை பார்க்கிறோம்,
👉ஒரு இக்கட்டான நேரம் தங்கம் வெள்ளி பாத்திரங்களைத் தவிர வேறு எந்த ஒன்றுமே இல்லை பாவிப்பதற்கு என்ற ஒரு நிலைமை வந்தால் மட்டும் தங்கடத்துக்காக வேண்டி அந்த நேரத்தில் மட்டும் அந்த பாத்திரங்களை பாவிக்கலாம் வேறு பாத்திரங்கள் கிடைத்தால் அவைகளை பாவிப்பது ஹர ஆகிறது
தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டு பாத்திரங்களின் விரிசல்களை சரி செய்வதற்கான சட்டம்
01. தங்கத்தைப் பயன்படுத்துதல்
- எந்த பாத்திரமாக இருந்தாலும், சிறிய விரிசலாக இருந்தாலும் சரி, பெரிய விரிசலாக இருந்தாலும் சரி, தங்கத்தைக் கொண்டு சரி செய்ய முடியாது. அவ்வாறு செய்வது ஹராம்.

02. வெள்ளியைப் பயன்படுத்துதல்
-
வெள்ளியைக் கொண்டு பாத்திரத்தின் விரிசலை சரி செய்வதற்கான மூன்று நிலைகள் உள்ளன:
- சிறிய விரிசல்: எந்தவிதமான அலங்கார நோக்கமும் இல்லாமல் இருந்தால், அந்த சிறிய விரிசலை சரி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
- பெரிய விரிசல் (அலங்காரத்திற்காக): விரிசல் பெரியதாக இருந்தால், ஆனால் அதை அழகுக்காக வேண்டி வெள்ளியைக் கொண்டு அடைத்தால், அது ஹராம்.
- பெரிய விரிசல் (தேவைக்காக) அல்லது சிறிய விரிசல் (அலங்காரத்திற்காக): பெரிய விரிசல், அதை அத்தியாவசிய தேவைக்காக அடைத்தால், அல்லது சிறிய விரிசல், அதை அழகுக்காக அடைத்தால், இந்த இரண்டு நிலைகளிலும் வெள்ளியைக் கொண்டு அடைப்பது மக்ரூஹ்

வெள்ளி கொண்டு பாத்திரங்களின் விரிசல்களை சரி செய்வதற்கான ஆதாரம்
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குவளையைக் கண்டேன். அதில் ஏற்பட்டிருந்த விரிசல் வெள்ளியைக் கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. மேலும் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "இந்த பாத்திரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நான் அதிகமாக நீர் கொடுத்திருக்கிறேன்."
அறிவிப்பாளர்: ஆசிம் அல் அஹ்வல்
நூல்: அல் புகாரி 5305

03. செம்பு, முத்து, மரகதம் போன்றவைகளால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதற்கான சட்டம்
செம்பு, முத்து, மாணிக்கம், மரகதம் போன்றவைகளால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. அது ஹராம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, அவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

04. காஃபிர்களின் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கான சட்டம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காஃபிர்களின் பாத்திரங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது, "அவற்றைக் கழுவுங்கள், அவற்றில் உண்ணுங்கள்" என்று கூறினார்கள். எனவே, காஃபிர்களின் பாத்திரங்கள் இருந்தால், முதலாவதாக அவற்றைக் கழுவ வேண்டும். இரண்டாவது, கழுவிய பிறகு, அவற்றில் உணவுகளை உண்ணுவதற்கு அனுமதி இருக்கிறது.

.jpg)
கருத்துகள் இல்லை